- ஆன்மீகம்

பத்திரிகையாளர் சு. கணேஷ்குமார் எழுதிய பாடல்கள் வெளியீடு!

நாகை மாவட்டம் கீழையூரில் கோயில் கொண்டிருக்கிற காத்தாயி அம்மனைப் போற்றும் விதத்தில் பத்திரிகையாளரும் கவிஞருமான சு. கணேஷ்குமார் எழுதிய இரண்டு பாடல்கள், பிரபல கர்நாடக இசைமேதை திரு. நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களிடம் சங்கீதம் கற்றுத் தேர்ந்த திருமிகு. ஸ்வேதா பாலசுப்ரமணியன் அவர்களால் இசையமைத்துப் பாடப்பட்டு 11.10.2020 அன்று வெளியாகியிருக்கிறது.

‘சாந்த சொரூபி காத்தாயி’ என்று தொடங்கும் பாடல், கர்நாடக இசை மேடைகளில் கீர்த்தனைகள் பாடப்படுவது போன்று, இனிமையான இசைக் கோர்ப்பில் உருக்கும் குரலில் ரேவதி ராகத்தில் பாடப்பட்டுள்ளது. https://youtu.be/dOWLahpwuFw பாடலை கேட்கும் போது உள்ளுக்குள் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுவதை உணரலாம்.

‘எங்கும் எப்போதும் காத்தாயி காத்திருப்பாள்’ என்று தொடங்கும் பாடல், பம்பை – உடுக்கை வாத்தியங்கள் இதமாய் முழங்க கிராமிய இசைமணத்தோடு செஞ்சுருட்டி ராகத்தில் பாடப்பட்டுள்ளது. https://youtu.be/Ce-pgyE67eI

‘சாந்த சொரூபி காத்தாயி’ என்ற பாடலைக் கேட்டுவிட்டு, இந்த பாடலைக் கேட்கும்போது இரண்டையும் ஒருவரே பாடினார் என்று சொன்னால் நம்பமுடியாது. அந்தளவுக்கு பாடகி ஸ்வேதா குரலில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

பாடல்களை https://youtu.be/dOWLahpwuFw / https://youtu.be/Ce-pgyE67eI இந்த இணைப்பின் மூலம் யூ டியூபில் கேட்கலாம்.

தொடர்புக்கு: சு. கணேஷ்குமார் 99415 14078

About expressuser

Read All Posts By expressuser