- பொது

உலக சாதனைப் புத்தகத்தில் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி!

போரூர் ,காரம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி ராபா உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

காரம்பாக்கம், போரூர், வேலம்மாள் வித்யாலயா, பள்ளியின் UKG -வகுப்பைச் சேர்ந்த அனன்யா ஸ்ரீ .
ஜனவரி 20, 2022 அன்று பல்வேறு மொழிப் பாடல்களைப் பாடிக்கொண்டே அபாகஸ் மனக்கணக்கு உத்தியைப் பயன்படுத்தி 75 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குத் தொகைகளைத் தீர்த்து,
உலகின் தலைசிறந்த இளம் மேதையாகத் தன்னை நிரூபித்துள்ளார்.
இதன்மூலம் இந்த இளம் மேதை ராபா உலக சாதனைப் புத்தகத்தில் நுழைந்துள்ளார்.
இதனையொட்டி வேலம்மாள் பள்ளி நிர்வாகம் அவரது அசாதாரண கணிதத் திறன்களைக் கௌரவிக்கும் வகையில் பாராட்டு விழா ஒன்றினை ஏற்பாடு செய்தது.
இவ்விழாவில்
அவர் ‘இளம் மேதை ‘ என்று முடிசூட்டப்பட்டார். அவரது அற்புதமான சாதனைக்கு எங்கள் பள்ளி நிர்வாகம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

About expressuser

Read All Posts By expressuser