- அரசியல்

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து பிறந்தநாள் விழா

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மாநில பொதுக்கூட்டம்!

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர். ரவிபச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சனிக்கிழமை (15.07.2023) நடைபெற்றது. YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர். பாரிவேந்தர் அவர்களின் தலைமையில் கூட்டணி கட்சி முன்னோடிகள் மற்றும் 20000 பேர் IJK கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவரும், பெரம்பலூர் எம்.பி.யுமான பாரிவேந்தர் தலைமை வகித்தார். மேலும், இந்நிகழ்வில் அதிமுக சட்டப் பேரவை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, இந்திய ஜனநாயக கட்சியின் பொருளாளர் ஜி.ராஜன், மாநில பொதுச்செயலாளர்
பி.ஜெயசீலன், துணைத் தலைவர் ஆனந்த முருகன், துணை பொதுச் செயலாளர் நெல்லை ஜி.ஜீவா, மாநில இணை பொதுச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின், அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், இளைஞரணி செயலாளர் ஏ.கே.டி.வரதராஜன், முன்னாள் தலைவர் கோவை தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் பாரிவேந்தர் எம்.பி. பேசியதாவது, “தேர்தல் நேரத்தில்
நடைபெறும் இந்தக் கூட்டம் ‘ஐஜேகே’வின் ஒரு சிறிய முன்னோட்டம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் 24 ஆம் தேதி சேலத்தில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இதே வளாகத்தில்தான் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரவிபச்சமுத்து கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். ‘மகன் தந்தைக்கு ஆற்றும் கடமை’ என்பது போல் என் மகனால் எனக்கு எப்போதுமே பெருமை வந்து சேரும்” என்றார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில பொதுச் செய
லாளர் ராம.சீனிவாசன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது, “மக்களவைத் தேர்தலை
பொறுத்தவரை தமிழகத்தில் கூட்டணி வருமா, வராதா என்கிற நிலையை மாற்றதான் இந்த கூட்டம். பாஜக, அதிமுகவை ஒருசேர அழைத்து வந்து எதிர்க்கட்சிக்கு தற்போது
செய்தியாக அறிவித்திருக்கிறார்.
மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் அசைக்க முடியாத கூட்டணி வரும். பாரிவேந்தர் அதனை தற்போது முன்னெடுத்துள்ளார்” என்றார்.

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து பேசியதாவது, “இளைஞர்களுக்காக பல சேவைகளையும் தொண்டுகளையும் பாரிவேந்தர் கல்வியாளராக செய்துள்ளார். அவருக்கு என்றுமே பணத்தின் மீது ஆசை இருந்ததே இல்லை. எந்தவொரு தொழில் தொடங்கும்போதும் அவர் பணம் குறித்து கவலைப்பட்டதும் இல்லை. சுயநலம் இல்லாத அவரிடம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் அன்பு செலுத்தி வருகின்றனர். அவர் அரசியலுக்கு வந்ததன் முக்கிய நோக்கமே, ஒரு கோட்பாட்டை உருவாக்கி, ஓர் அடையாளமாக இருக்க வேண்டும் என்றுதான். நடுத்தர மக்களுக்கும் அரசியல் தேவை. அரசியல் என்றால் அடுத்த வரை திட்ட வேண்டும் என்பது கிடையாது. இது எங்கள் கட்சியின் கொள்கையாகும். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள தொண்டர்களை ஒருங்கிணைத்து இந்த பிரம்மாண்ட பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்திற்கான விளம்பரங்களை முன்னெடுத்து சிறப்பாக ஒருங்கிணைத்த விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ் அவர்களுக்கு நன்றி ” என்றார்.

About expressuser

Read All Posts By expressuser