- சினிமா, சினிமா செய்திகள்

யோகி பாபு நடிக்கும் புதிய படமான ‘*வானவன்*’ டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை – நடிகர் GV Prakash Kumar மற்றும் மாவீர இயக்குநர் மடோனா அஸ்வின் வெளியிட்டனர்.

 

யோகிபாபு – விற்கு *வானவன்* – படகுழுவின் பிறந்தநாள் பரிசு.

யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, Master ஷக்தி ரித்விக் ( பிகில், மாஸ்டர்) , ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் & கல்கி ராஜா ஆகியோர் நடிக்கும் மல்டி ஸ்டாரர் திரைப்படம் தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. யோகி பாபுவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ‘ஈடன் ஃபிளிக்ஸ்’ குழுவினர் தங்கள் தலைப்பை இன்று வெளியிட்டுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த சஜின் கே சுரேந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், இதற்கு முன் மலையாளத்தின் முதல் வெப் சீரிஸ் மாஸ்குரேட் இயக்கியுள்ளார். பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் (அசோக வனமாலோ அர்ஜுனா கல்யாணம் மற்றும் ரெஜினா புகழ்), அறிமுக எழுத்தாளர் ஹரிஹரன் எழுத்தும் மற்றும் ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மற்றும் பாடலாசிரியர் கார்த்திக் நேதா ஆகியோர் பல தரப்பட்ட பாடல்களுக்குப் பிறகு மீண்டும் இந்த திரைப்படத்தில் கைகோர்க்க உள்ளனர்.


இந்த இளம் படக்குழுவினர் மதுரை மற்றும் சென்னையின் கிராமப்புறங்களைச் சுற்றி படம்பிடித்துள்ளனர், EDENFLICKS PRODUCTIONS தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான சாய் பல்லவி நடித்த கார்கி படத்தை தயாரிப்பாளர் தாமஸ் இணைந்து தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஒருபுதுவித அனுபவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது Feel Good, Fantasy மற்றும் யோகி பாபுவின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களால் விரும்பப்படும் வகையில் அமைந்துள்ளது!

About expressuser

Read All Posts By expressuser