- ஆரோக்யம்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சவால்கள்!

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆதரிப்போம்: தனித்துவமான சவால்களைச் சந்தித்தல்

டாக்டர் வி. பர்னேஷ், மூத்த. மருத்துவ ஆலோசகர்,
தலைமை சர்க்கரை நோய் மருத்துவர் மற்றும் நாளமில்லாச் சுரப்பியியல் நிபுணர்,
சாய் நீரிழிவு மற்றும் மெடிக்கல் தைராய்டு கேர் சென்டர், கோயம்புத்தூர்.

இந்தியாவில் தோராயமாக 97,700 குழந்தைகள் டைப் 1 சர்க்கரை நோய் (T1DM) பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கவலையளிக்கும் வகையில் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது நமது இளைஞர்களின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நமது சமூகத்தில் நீண்டகாலத் தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது. குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே சர்க்கரை நோயைக் கண்டறிந்து கட்டுப்பாட்டிற்குள் வைப்பது என்பது பல சவால்கள் நிறைந்த ஒன்றாகும்.

அதிகரித்து வரும் சிக்கல்
டைப் 1 சர்க்கரை நோய் குழந்தைகளிடையே மிகவும் பொதுவானது என்றாலும், டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பு, குறிப்பாகச் சில மக்களிடையே அதிகரிப்பதை நாங்கள் காண்கிறோம். மேலும் அதுமட்டுமல்லாமல்; ஒரு சில பொதுவாகக் காணப்படாத சர்க்கரை நோய் வகைகளை மிகத் துல்லியமாகக் கண்டறிவதன் மூலம் மட்டுமே சரியான சிகிச்சை வழங்க முடியும். நோயாளியின் ஆரோக்கிய வரலாறு மற்றும் உடல் பரிசோதனை ஆகியவை நோய் கண்டறிய உதவுகின்றன, ஆனால் அதனை உறுதிப்படுத்தக் குறிப்பிட்ட சோதனைகள் தேவைப்படலாம்.

கட்டுப்பாட்டில் வைப்பதில் உள்ள சவால்கள்
குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரிடையே சர்க்கரை நோயை நிர்வகிப்பது என்பது வயது சார்ந்த பிரச்சனைகள் மற்றும் நோயின் தீவிரமான தன்மை காரணமாகச் சவால் நிறைந்திருக்கும். ஆனால் நம்மால் சவால்களைத் தகர்த்தெறிய முடியும்.

அனைவரையும் ஈடுபடுத்துவோம்
நோயாளியை மையமாகக் கொண்ட அணுகுமுறை அவசியம். பெற்றோர்கள், சக பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் நோயாளிகள் அனைவரும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகிக்கின்றனர். அனைவருக்கும் விழிப்புணர்வு மற்றும் ஈடுபாடு இருந்தால், எளிதாகக் கட்டுப்பாட்டில் வைக்கலாம் மற்றும் நீண்ட காலச் சிக்கல்களைத் தடுக்கலாம்.

சிக்கலைப் புரிந்துகொள்வோம்
இளம் வயதினரிடையே சர்க்கரை நோய் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. குழந்தைகளிடம் ஏற்படும் சர்க்கரை நோயின் முக்கிய வகைகள் டைப் 1 மற்றும் டைப் 2 ஆகும். டைப் 1 சர்க்கரை நோய் பொதுவாகக் குழந்தை பருவத்திலும் இளமை பருவத்திலும் தோன்றும். இது கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை நோயெதிர்ப்பு அமைப்பு அழிப்பதால் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் இதன் நிகழ்வுகள் மாறுபடும் போதும், மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன.
டைப் 2 சர்க்கரை நோய், வாழ்க்கை முறையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது மற்றும் இளைஞர்களிடையே மிகவும் பொதுவாக ஏற்பட்டு வருகிறது. ஆரோக்கியமற்ற மற்றும் முறையற்ற உணவுகள் மற்றும் உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை ஆகியவை பிரச்சனைகளுக்குக் காரணமாக உள்ளன.

மரபணு காரணி
இரண்டு வகைகளுக்கும், மரபு ரீதியான பாதிப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. சில மரபணுக்கள் சர்க்கரை நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன, மேலும் இந்த ஆபத்து வெவ்வேறு மக்களிடையே மாறுபடலாம். இருப்பினும், சர்க்கரை நோயாளிகளின் அதிகரிப்பது பெரும்பாலும் ஆரோக்கியமற்ற சூழல்களால் ஏற்படுகிறது.

தீர்வுகள்
இந்தச் சவால்களைச் சமாளிக்க, குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவது அவசியம். அடிக்கடி உடல் இயங்கும் வகையிலான உடற்பயிற்சிகள் மற்றும் சமச்சீர் உணவுகளை ஊக்குவிக்கப் பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் சுகாதார வழங்குநர்கள் இணைந்து பணியாற்றலாம்.
கூடுதலாக, வழக்கமான பரிசோதனைகள் ஆரம்பகாலத்திலேயே நோயினைக் கண்டறிந்து கட்டுப்படுத்த உதவுகின்றன. சரியான கல்வி மற்றும் ஆதரவு மூலம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். அனைவரும் தங்கள் உடல் நிலையைக் கட்டுப்பாட்டில் வைக்கவும், சிக்கல்களின் ஆபத்தைக் குறைக்கவும் கற்றுக்கொள்ளலாம்.
குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே சர்க்கரை நோய் அதிகரித்து வருகிறது, நோயாளியை மையமாகக் கொண்ட அணுகுமுறை, விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம், நம் இளைஞர்கள் தங்கள் ஆரோக்கியத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதை எளிதாக்கிடலாம்.

About expressuser

Read All Posts By expressuser