- பொது

விங்க் ஸ்டுடியோவைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் அடைந்த சாதனை!

விங்க் ஸ்டுடியோ கலைஞர்களின் பாடல்கள் விங்க் மியூசிக்கில் 1.7 பில்லியன் (170 கோடி) ஸ்ட்ரீம்களைத் தாண்டியது
⮚ விங்க் ஸ்டுடியோவைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் அடைந்த சாதனை
⮚ வளர்ந்துவரும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் தளத்தின் திறனை இந்தச் சாதனை வலுப்படுத்துகிறது

Chennai (இந்தியா), ஜூன் 18, 2024: பதிவிறக்கங்கள் மூலமும் தினசரி பயன்படுத்துவதன் மூலமும் இந்தியாவின் நம்பர் ஒன் இசை ஸ்ட்ரீமிங் செயலியாக விங்க் மியூசிக் விளங்குகிறது. வளர்ந்துவரும் இசைக் கலைஞர்கள் தங்கள் பாடல்களை தேசிய அளவிலான பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்லும் அறிமுகத் தளமாக விங்க் ஸ்டுடியோ செயல்படுகிறது. விங்க் ஸ்டுடியோவின் தனிப்பட்ட கலைஞர்களின் பாடல்களை பாராட்டத்தக்க வகையில் 1.7 பில்லியன் ஸ்ட்ரீமிங் செய்து தொழில்துறையில் சாதனை படைத்துள்ளது விங்க் மியூசிக். விங்க் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இரண்டே ஆண்டுகளில் இந்தப் பாடல்கள் பாராட்டத்தக்க வகையில் இந்தச் சாதனை அளவைக் கடந்துள்ளன. தனிப்பட்ட இசையை ஊக்குவிப்பதிலும் வளர்ந்துவரும் திறமை மிகுந்த கலைஞர்களை ஆதரிப்பதிலும் விங்கின் உறுதிபாட்டை இது வலியுறுத்துகிறது.

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி அமித் திரிபாதி கூறினார், “வளர்ந்துவரும் கலைஞர்கள் தங்கள் இசைக்குரிய பணமதிப்பைப் பெற ஒரு தளம் தேவை என்ற எண்ணத்தோடு நாங்கள் விங்க் ஸ்டுடியோவைத் தொடங்கினோம். அதே வேளையில் எங்கள் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு தேர்வுசெய்யக்கூடிய வகையிலான ஓர் இசை நூலகத்தையும் வழங்கினோம். இந்தப் பாடல்களுக்கான 170 கோடி ஸ்ட்ரீம்கள் கலைஞர்களுக்கு நாங்கள் உதவும் அதே சமயத்தில் எங்கள் வாடிக்கையாளர்களில் எத்தனை பேர் அந்த உள்ளடக்கத்தை அனுபவித்து மகிழ்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குள் விங்க் ஸ்டுடியோ மிகவும் பிரபலமாகிவிட்டது. விங்கில் மொழிகளைக் கடந்து நாடு முழுவதும் உள்ள கலைஞர்களை ஒப்பந்தம் செய்கிறோம். தொடர்ந்து பன்முகப்படுத்துவதையும், மேலும் பல கலைஞர்களுக்கு வளம் மிகுந்த இசை வாழ்க்கையை உருவாக்குவதையும் நாங்கள் உறுதிசெய்கிறோம்”.

நாட்டின் திறமை மிகுந்த இசைக் கலைஞர்களை அங்கீகரிப்பதையும். இசைத்துறையில் கலைஞர்களுக்கு நிலையான வாழ்க்கையை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு விங்க் ஸ்டுடியோ தொடங்கப்பட்டது. கலைஞர்களின் வளர்ச்சிக்கு உதவும் தளமான விங்க் ஸ்டுடியோ இந்தத் துறையில் முதல் முயற்சி ஆகும். தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டல். பரந்துபட்ட விநியோகம், பணமாக்கும் வாய்ப்புகள் ஆகியவற்றின் மூலம் கலைஞர்களை ஆதரிப்பதில் விங்க் ஸ்டுடியோ ஒரு புரட்சியை உருவாக்கியுள்ளது. கலைஞர்களுக்கு விங்க் ஸ்டுடியோ பலவகை வாய்ப்புகளை வழங்குகிறது. பிற இசை லேபிள்களூடன் கூட்டிணைவு, வெப் சீரிஸ்களின் பேக்ரவுண்ட் ஸ்கோர்கள், ஓடிடி, நேரலை நிகழ்வுகள் போன்ற அறிமுகங்கள் இதில் அடங்கும்.

இந்தக் கலைஞர்களின் பாடல்களுடன் விங்க் மியூசிக் சிறப்பு பிளேலிஸ்ட்களை உருவாக்குகிறது. இதன் மூலம் இவை கண்டறியப்பட்டு அதன் விளைவாக ஸ்ட்ரீமைப் பெறுகின்றன. விங்கின் பெரும் வாடிக்கையாளர் தளம் கலைஞர்களின் சென்றடையும் எல்லையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் வளமான வாழ்க்கையை உருவாக்க அவர்களுடைய பாடல்களை எளிய முறையில் பணமாக்கித் தருகிறது. இது நாடு முழுவதிலும் இருந்து தனிப்பட்ட கலைஞர்கள் தளத்தில் இணைவதற்கும் அவர்களது இசைக்கு பரந்துபட்டப் பார்வையாளர்களைக் கண்டறிவதற்கும் வழிவகுக்கிறது. இன்றுவரை 2000+ கலைஞர்களுக்கு ஒரு கிரியேட்டிவ் அவுட்லெட்டை வழங்கி, அறிமுகமாவதிலும் தங்கள் படைப்பைப் பணமாக்குவதிலும் அவர்களுக்கு இருந்த சிக்கலை தீர்க்க உதவியுள்ளது.

வளர்ந்து வரும் கலைஞர்களுடன் ஏற்கெனவே துறையில் தடம்பதித்துள்ள நிகிதா காந்தி, விஷால் தத்லானி, ரஹேத் ஃபதே அலி கான் போன்ற பிரபல கலைஞர்களும் தங்கள் இசையை வெளியிட விங்க் ஸ்டுடியோவுடன் கைகோர்த்துள்ளனர். பிரதீக் காந்தி, ராஜ் பர்மன், ஹர்ஷா பிரவீன் மற்றும் ரீனா கில்பர்ட் போன்ற கலைஞர்களை விங்க் ஸ்டுடியோவின் சிறந்த கலைஞர்களாக மாற்றுவதற்கு இந்த தளம் உதவியுள்ளது.
மஞ்ச் மியூசிக் மற்றும் அனுஷா தண்டேகரின் “லவ் டோக்கன்” போன்ற தனிப்பாடல் விநியோகத்திற்கும் விங்க் உதவியுள்ளது; கே கே மேனன் மற்றும் ஸ்வஸ்திகா முகர்ஜி நடித்த “லவ் ஆல்” திரைப்படத்தை விளம்பரம் செய்ய எல்ஜிஎஃப் ஸ்டுடியோஸ் போன்ற தனிப்பட்ட தயாரிப்பாளர்களையும் ஆதரித்தது.

Top Indie Artists & Songs
Artists Track Link
Prateek Gandhi https://wynk.in/u/QuKTBOSaG
Harsha Prawin https://wynk.in/u/MbUlb4fuE
Raj Barman https://wynk.in/u/9zv3IGVY1
Dheemusix https://wynk.in/u/fkfgWv2BQ
Gagan Baderiya https://wynk.in/u/FmndYbFWf
Top Indie Language Songs
Language Track Link Artist
Punjabi Chahat
Arhaan Hussain
Kannada Kanasu
Dheemusix
Tamil Potta Pulla Vaasam Theadi
Martin Kartenjer
Telugu Padessave Pilla
Harsha Prawin
Hindi Mashhoor Banegi
Prateek Gandhi

Wynk Journey
⮚ Sept 2014: Launched in India; crosses one lakh downloads within 4 days
⮚ Feb 2015: Crosses 5 million app downloads
⮚ June 2015: Launches Data Save Mode
⮚ Nov 2015: Crosses 12 million installs
⮚ Jan 2016: Introduces MP3 player function – Plays local MP3 file
⮚ Mar 2017: Crosses 50 million installs
⮚ Jan 2018: Crosses 75 million installs
⮚ Dec 2018: Voted India’s most entertaining app on Playstore
⮚ Jan 2019: Crosses 100 million installs
⮚ Aug 2022: Launched Wynk Studio
⮚ Aug 2023: Brings Dolby Atmos to the app
⮚ Sept 2023: Ventures into film music distribution with ‘Love All’
For more details visit https://studio.wynk.in/ and https://wynk.in/music

About Airtel
Headquartered in India, Airtel is a global communications solutions provider with over 490 Mn customers in 17 countries across South Asia and Africa. The company ranks amongst the top three mobile operators globally and its networks cover over two billion people. Airtel is India’s largest integrated communications solutions provider and the second largest mobile operator in Africa. Airtel’s retail portfolio includes high speed 4G/4.5G mobile broadband, Airtel Xstream Fiber that promises speeds up to 1 Gbps with convergence across linear and on-demand entertainment, streaming services spanning music and video, digital payments and financial services. For enterprise customers, Airtel offers a gamut of solutions that includes secure connectivity, cloud and data centre services, cyber security, IoT, Ad Tech and cloud-based communication. For more details visit www.airtel.com

About expressuser

Read All Posts By expressuser