
சென்னை, 29 ஜூன் 2021: தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலேயே முதலாவது ப்ரோட்டான் சிகிச்சை மையமான அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையம், மிகப் பெரிய தொடை எலும்பு மாற்ற சிகிச்சை மற்றும் லேப்ரோஸ்கோபிக் ரேடிகல் நெஃப்ரெக்டோமி (femur (thigh bone) +Laparoscopic Radical nephrectomy) சிகிச்சையை சேர்த்து இந்தியாவில் முதல் முறையாக மேற்கொண்டுள்ளது. லேப்ரோஸ்கோபிக் ரேடிகல் நெஃப்ரெக்டோமி என்பது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை அகற்ற பொதுவாக பரிந்துரைக்கப்படும் குறைந்தபட்ச துளையிடும் அறுவை சிகிச்சை முறையாகும். பல்நோக்கு அணுகுமுறையின் மூலம் ஒரே நிலை அறுவை சிகிச்சையாக இதை அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையம் மேற்கொண்டது.
அசாமைச் சேர்ந்த 54 வயதான ஒரு பெண், இடது தொடை எலும்பு முறிவுக்கு ஆளானார். இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறிய காயத்தால் (trivial injury) அவதிப்பட்ட அவர் படுத்த படுக்கையாக இருந்தார். அவரால் நடமாட முடியவில்லை. அவர் முற்றிலும் நடக்க முடியாத நிலையில் அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ஜூன் 13-ம் தேதி வந்தார். பரிசோதனை மற்றும் பயாப்ஸி ஆகியவற்றின் மூலம் அவருக்கு மெட்டாஸ்டேடிக் இடது சிறுநீரக செல் புற்றுநோய் இருப்பது (metastatic left renal cell carcinoma) கண்டறியப்பட்டது. இது சிறுநீரகத்தில் புண்ணை உண்டாக்குவதாகும். (இது ஒரு வகை மெட்டாஸ்டாஸிஸ் ஆகும். இதில் அசல் அல்லது முதன்மை கட்டியிலிருந்து உருவாகும் புற்றுநோய் செல்கள் உடலில் பயணித்து உடலின் ஒன்று அல்லது இரண்டு பகுதிகளில் சிறிய எண்ணிக்கையிலான புதிய கட்டிகளை (மெட்டாஸ்டேடிக் கட்டிகள்) உருவாக்கும்). தொடை எலும்பிலும் அவருக்கு கட்டி இருந்தது.
அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் மருத்துவ வல்லுநர்கள், தொடை எலும்பில் உள்ள கட்டியை அறுவைசிகிச்சை செய்து அகற்றவும் பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை அகற்றவும், நோயாளியை அதற்குத் தயார்படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டனர். குறைந்தபட்ச துளையிடல் சிகிச்சை முறைகள் மூலம் கட்டியை அகற்ற திட்டமிட்டனர். அவரை மீண்டும் நடக்க வைக்கும் வகையில் சிகிச்சை முறைகளைத் தொடங்கினர்.
ஒரு புதிய முயற்சியாக அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மைய வல்லுநர்கள், ஒரே நேரத்தில் நோயாளிக்கு இரண்டு சிகிச்சை நடைமுறைகளைச் செய்தனர். இரண்டு நடைமுறைகளும் ஆறு மணி நேரத்தில் முடிக்கப்பட்டன. கட்டி இருந்த முழங்கால் மூட்டு பரந்த விளிம்புகளுடன் அகற்றப்பட்டு மெகா புரோஸ்தெசிஸ் சிகிச்சை மூலம் அது மாற்றப்பட்டது. அந்த நோயாளிக்கு அதே நேரத்தில் லேப்ரோஸ்கோபிக் ரேடிக்கல் நெஃப்ரெக்டோமி (சிறுநீரகத்தை அகற்றுதல்) மேற்கொள்ளப்பட்டது. இது அதே அமர்வில் அடிவயிற்றில் 3 சிறிய 5 மில்லி மீட்டர் துளைகள் இடப்பட்டு மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை முறைக்குப் பிறகு அடுத்த நாளே நோயாளி நடக்கத் தொடங்கினார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக அவர் நடந்தார். உள் பரவல் இருப்பது சிடி ஸ்கேனில் கண்டறியப்பட்டதைக் கருத்தில் கொண்டு, சிறந்த சிகிச்சை மற்றும் நோயாளி விரைவில் குணம் அடைவதற்காக விரிவான உள் சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் போது பேசிய அப்போலோ மருத்துவமனையின் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜய் கிஷோர் ரெட்டி (Dr.Vijay Kishore Reddy, Senior Consultant Orthopedic surgeon, Apollo hospitals) கூறுகையில், “தற்போதைய தொற்று பாதிப்புக் காலத்தில், பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட் பயம் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பெரும்பாலும் தாமதமாகவே சிகிச்சைக்கு வருகிறார்கள். இது நோயறிதல் மற்றும் சிகிச்சையில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக கட்டி அதன் இறுதி கட்டத்தில் தாமதமாக கண்டறியப்படுவதன் மூலம் எல்லா இடங்களிலும் பரவும் நிலை ஏற்படுகிறது. பல் நோக்கு அணுகுமுறை மற்றும் சிகிச்சையின் மூலம் முன்கூட்டியே கண்டறிவது இந்த கொடிய நோயை எதிர்கொள்ள மிக முக்கியமானதாகும்.” என்றார்.
சிறுநீரக புற்றுநோய் அல்லது சிறுநீரக விதைப்பை புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது உடலின் பிற பகுதிகளுக்கு பரவக்கூடிய மெட்டாஸ்டாஸிஸ்களுக்கு சிகிச்சை அளித்து முதன்மை கட்டியை அகற்ற உகந்த அறுவை சிகிச்சை கட்டுப்பாடு தேவைப்படுகிறது. இந்த வகையான பரவல் ஆர்.சி.சி (சிறுநீரக செல் புற்றுநோய்) அரிதாகவே காணப்படுகிறது. மெட்டாஸ்டாஸிஸ் உள்ள நோயாளிகளில் சுமார் 7 சதவீதம் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எலும்பு மெட்டாஸ்டாஸிஸ் உடன் சிறுநீரக புற்றுநோய் உள்ள நோயாளிக்கு மயக்க மருந்து கொடுப்பது ஒரு சவாலான செயல் ஆகும். இதனால் ரத்த நாளங்களில் ரத்த உறைவு ஏற்படும் ஆபத்து ஏற்படக் கூடும். அதன் காரணமாக அறுவை சிகிச்சையின்போதும் அறுவை சிகிச்சைக்குப் பின்னும் உடனடியாக நுரையீரல் தாக்குதல் (Pulmonary embolism) ஏற்படக் கூடிய வாய்ப்பு உண்டு.
அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி (Dr. Prathap C Reddy, Chairman, Apollo Hospitals) இது குறித்துக் கூறுகையில், “அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையத்தில், புற்றுநோயியல் துறையில் திருப்புமுனையாக பல அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கிறோம். மேலும் தனித்துவத்துடன் புதிய பாதைகளை அமைத்து வருகிறோம். மருத்துவ வல்லுநர் குழுவின் இந்த சாதனை அப்போலோ குழுமத்திற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சுகாதாரத் துறைக்குமே பெருமை சேர்க்கிறது. எங்கள் மருத்துவர்கள் மீதான நோயாளிகளின் நம்பிக்கையே எங்களை பெரிய அளவில் கட்டமைத்துள்ளது. மேலும் எங்கள் மருத்துவக் குழுவினர் உலக அளவில் தரமான சுகாதார சேவையை புதுமைத் தொழில்நுட்பங்களுடன் வழங்குவதன் மூலம் நோயாளிகளின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தத் தொடர்ந்து முயற்சிக்கின்றனர்.” என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணை செயல் தலைவர் ப்ரீதா ரெட்டி, (Ms. Preetha Reddy, Executive Vice Chairperson, Apollo Hospitals Group), “மல்டிமோடல் எனப்படும் பல்நோக்கு அணுகுமுறை, சிகிச்சைக்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே திறம்பட செய்வதற்கு உதவுகிறது. அத்துடன் குறைந்த நாட்களே மருத்துவமனையில் தங்கியிருத்தல் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய இணை சிக்கல்களைக் குறைக்க இது பெருமளவு உதவுகிறது. அறுவை சிகிச்சையின் ஒரே அமர்வில் இரண்டு நடைமுறைகளும் மேற்கொள்ளப்படுவதால் செலவுகள் வெகுவாகக் குறைகிறது. மல்டிமோடல் எனப்படும் பல்நோக்கு செயல்முறை மேலாண்மையால் மட்டுமே இது சாத்தியமாகும். இதில் ஒவவொரு துறைகளிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த மருத்துவர்கள் சிறந்த செயல்பாட்டு நடைமுறைகளை மேற்கொள்கின்றனர். புற்றுநோயியல் சிகிச்சையில் சிறந்த விளைவுகளை அடைய நோயாளிகளுக்கு மிகச் சிறந்த சிகிச்சை மற்றும் பராமரிப்பை அவர்கள் வழங்குகின்றனர்.” என்றார். மேலும் விவரங்களுக்கு www.apollohospital.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
ட்விட்டரில் @HospitalsApollo என்ற இணைப்பில் பின் தொடரலாம்.





