- பொது

வெற்றிக்கு அருகில் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி!

வெற்றிக்கு அருகில் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி*
பிஃடே( Fide -பன்னாட்டு‌ சதுரங்கக் கூட்டமைப்பு) உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025
எபிஸ்கோபல் உயர்நிலைப்பள்ளி, வாஷிங்டன் டி.சி.
ஆறுசுற்றிலும் வென்று தரவரிசையில் முதலிடத்தை எட்டியது!

பிஃடே உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 போட்டி அமெரிக்காவின்‌ வாஷிங்டன் நகரில் ஆகஸ்ட் 02 முதல்‌ 07வரை நடைபெறும்.

இந்தப் போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்தியாவிலிருந்து முதன் முறையாக தமிழ்நாட்டின் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி‌ வீரர்கள் அமெரிக்கா சென்றுள்ளார்கள்.

இப்பள்ளியின்‌ சார்பாக பள்ளியின் பயிற்சியாளர்‌ எஸ்.வேலவன்‌ தலைமையில் வீரர்கள் கீர்த்தி‌ரெட்டி(WFM), அஸ்வத்.எஸ்(IM), தக்ஷின்அருண்(FM), இளம்பரிதி(IM) எ.ஆர், பிரனவ் கே.பி(FM) பங்கேற்கயிருக்கிறார்கள்.

மொத்தம் எட்டு சுற்று. தொடர்ச்சியாக நான்கு சுற்றில் முறையே மங்கோலியா, ஹங்கேரி,ஆஸ்திரியா, அமெரிக்க, கஜகிஸ்தான், இலங்கை நாட்டு‌ப் பள்ளியை‌ எதிர்கொண்டு வெற்றி பெற்றனர். நாளை நடைபெறும் எழாவது சுற்றில் தரவரிசையில் முதலிடமான கஜகிஸ்தான் நாட்டின் சீட் (seed educational Complex) எஜிகேசனல் காம்ப்ளக்ஸ் பள்ளியை சந்திக்கின்றனர்.

பலம் வாய்ந்த கஜகிஸ்தான், இலங்கையை பள்ளியை வென்று முதலிடம் நோக்கி முன்னேறி வெற்றிக்கு அருகில் இருப்பதாக சதுரங்க ஆர்வலர்கள் கணிக்கின்றார்கள்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள எபிஸ்கோபல் உயர்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த நிகழ்வில் 250க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 55 நாட்டின்‌ சிறந்த பள்ளிகள் அணி கலந்து கொள்கிறது.

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan