- பொது

மொபைல் போன் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிஹாசன்!

சில சமயங்களில் சிக்னல் இல்லாமல் போவது மகிழ்ச்சியாகவும், வெறுப்பாகவும் இருக்கும் – ஸ்ருதிஹாசன்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இவர் ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடந்த நிகழ்வில் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டு முற்றிலும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தார்.

ஓப்போ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஓப்போ F31 5G, F31 ப்ரோ மற்றும் F31+ என மூன்று ஸ்மார்ட்போன்களை நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் ஸ்மார்ட்போன் வெளியீடு மட்டுமின்றி ரசிகர்களுடன் உரையாடிய ஸ்ருதிஹாசன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த ஸ்மார்ட்போன் அறிமுக விழாவில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன், “இந்த மொபைலின் கேமரா தரம் ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சொந்த ஊர், சென்னையில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது சில சமயங்களில் சிக்னல் இல்லாமல் போவது மகிழ்ச்சியாகவும், வெறுப்பாகவும் இருக்கும்,” என்றார்.

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan