- பொது

சீரற்றத்திற்கான பள்ளிதிட்டப் பரிசு!

மருத்துவராக வேண்டும் என்ற மாணவர்களின் கனவை மரண குளியில் தள்ள வந்திருப்பது நீட் தேர்வு என்றால்,  அதில் உள்ள அரசியல்களை தாண்டி நீட் தேர்வுக்கு தயார் செய்கிறோம் என்று சொல்லி கோச்சிங் கிளாஸ் நடத்தி கொள்ளையடிக்கும் நிறுவனங்கள் பெருகி வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

நீட் மட்டுமின்றி ஜே இ இ உட்பட வேறு பல தேர்வுகளுக்கும் பயிற்சி அளிப்பதாக கூறும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம்,  ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவர்களிடமிருந்தே தனது பயிற்சித் திட்டங்களை தொடங்கி விடுகிறது.

சிறிய வகுப்பில் படிக்கும் வயது குறைந்த மாணவ மாணவியருக்கு ஏற்கனவே பாடச் சுமை அதிகம் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கூறிவரும் நிலையில்,  ஐந்தாம் வகுப்பிலிருந்தே விசேட பயிற்சி அளிக்கிறோம் என்று மாணவ மாணவிகளை கசக்கி பிழிவது எந்த வகையில் சரியாக இருக்கும்?

இந்தப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற மாணவ மாணவிகளுக்கு பெரிய அளவில் கட்டணங்கள் வசூலிக்கும் ஆகாஷ் நிறுவனம்,  மாணவர்களை பயிற்சி பெற வைக்க உதவித்தொகை என்ற என்ற வலையை விரிக்கிறது.

மீன் பிடிப்பதற்கு தூண்டிலில் புழுவை வைப்பது போல் இந்த உதவி தொகை வைக்கப்பட்டிருப்பது போல் இருக்கிறது.

கடந்த ஆண்டில் மட்டும் ஒரு மில்லியன் மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து இருக்கிறார்கள்.

அகாஷ் Invictus JEE Advanced சீரற்றத்திற்கான பள்ளிதிட்டப் பரிசுப்பரீட்சை ‘Invictus Ace’யையும் தொடங்கியுள்ளது.

மூன்று மணி நேரம் நடக்கும் இந்த தேர்வுக்கு  300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஆகாஷின் போட்டித் தேர்வு எழுதியிருக்கிறார்கள்.

அப்படியானால் இந்தத் தேர்வு மூலம் ஆண்டு தோறும் எத்தனை கோடி ரூபாய் வசூல் ஆகிறது என்பதை நாமே கணக்கிட்டு பார்த்துக் கொள்ளலாம்.

நீட் பயிற்சி வகுப்புகளுக்கு மட்டும் 1,47, 500 ரூபாய் முதல் 4,80,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதைப்போலவே ஜே இ இ பயிற்சி வகுப்புகளுக்கு 1,27,617 ரூபாய் முதல்  3,39,528 ரூபாய் வரை பயிற்சி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதில் பலருக்கு நூறு சதவீத கட்டண தள்ளுபடியும்,  வெறும் இரண்டரை கோடி ரூபாய் பண பரிசும் ஆகாஷ் நிறுவனம்  தருவதாக கூறப்படுகிறது.

மருத்துவராகும் கனவில் மாணவ மாணவியர் நீட் தேர்வுகளுடன் முட்டி மோதிக் கொண்டிருக்க,  ப்ரொபஷனல் கோர்சலில் மாணவர்களை சேர்க்க பயிற்சி அளிக்கிறோம் என்ற பெயரில் பல நிறுவனங்களும் சம்பாதித்துக் கொண்டுதான் இருப்பது என்னவென்று சொல்ல?

M.Parthasarathi

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan