
சாலமன் பாப்பையா மறைவுக்கு,
டி.ராஜேந்தர் இரங்கல்!
முன்னாள் பேராசிரியரும், பட்டிமன்றம் நடுவரும் ஆகிய சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி மனதை வாட்டுகின்றது. தமிழ் தூண் ஒன்று சாய்ந்து விட்டது. கன்னித்தமிழ் பூங்காற்று ஓய்ந்து விட்டது. பட்டிமன்ற சோலை ஒன்று காய்ந்து விட்டது. கண்கள் கண்ணீர் மழையை வடிக்கின்றது. அது இரங்கற்பா படிக்கின்றது. அவரை இழந்து வாடக்கூடிய தமிழ் நெஞ்சங்களுக்கும், தமிழ் நல்லுலகத்திற்கும், அவருடைய இல்லத்தாருக்கும் என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்…
இப்படிக்கு,
நடிகர்,
திரைப்பட இயக்குநர்,
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்,
திரைப்பட விநியோகஸ்தர்,
மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்
டி.ராஜேந்தர்
@GovindarajPro





