
அண்ணன் இளையராஜா அவர்களுக்கு தபால் தலை வெளியிடப்பட்டது, தம்பியாய் எனக்கு மகிழ்ச்சி!
— நடிகர் ராமராஜன்
இசைக்கெனவே தன்னை அர்ப்பணித்த இசையின் இசை, நம் இசைஞானி என் அண்ணனின் 50 ஆண்டு கால இசை சாதனையை பாராட்டி, அதனை கொண்டாடும் விதமாக ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் அவருக்கு தபால் தலை வெளியிடப்பட்டது எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது.
இந்தியராக தமிழராக நாம் தலைநிமிர்ந்து நம் நாட்டுக்காரர், நம் மண்ணுக்காரர் என போற்ற வேண்டிய அவசியமான காலகட்டமிது.
வயது ஒரு பொருட்டே அல்ல, இசையே மூச்சென சுவாசிக்கும் இசைஞானி, உலகிலுள்ள எல்லா புகழுக்கும் உரித்தானவர் தான் என்பதில் எவருக்கும் ஐயமில்லை.
“கடவுள் தந்த பரிசு”
எங்களுக்கு நீங்கள்!
அன்புத்தம்பி
– ராமராஜன் Ex. MP
நடிகர், இயக்குனர்





