- பொது

‘அன்னக்கிளி’ – 72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!

வாகீசன் – மோனிஷாவின் ‘அன்னக்கிளி’ – 72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!

பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட்-ன் சமீபத்திய இசை வெளியீடான ‘அன்னக்கிளி’, வாகீசன் ராசையாவின் முதல் ஆல்பமான _தமிழ் கிறுக்கனின் முதல் பாடல், ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறது. வெளியான 72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

வாகீசனால் எழுதி, பாடி, நடிக்கப்பட்ட ‘அன்னக்கிளி’, தனது சிறுவயது காதலிக்குக் காதலை தெரிவிக்கும் இளைஞனின் இனிமையான கதையை உயிர்ப்பிக்கிறது. கிராமிய தமிழ்நாட்டின் வண்ணமயமான பின்னணியில், இளம் காதலின் அப்பாவித்தனம், வெட்கம் மற்றும் விளையாட்டுத்தனமான கேலியை அழகாக படம்பிடிக்கிறது.

சமீபத்தில் எத்திராஜ் கல்லூரியில் Gen Z மாணவர்களிடமிருந்து இந்த பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது, இது குழுவை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

_Top Cooku Dupe Cooku_ நிகழ்ச்சி மூலம் பிரபலமான மோனிஷா பிளெஸ்ஸி, இந்த பாடலில் வாஹீசனுடன் அழகான கெமிஸ்ட்ரியை பகிர்ந்து பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கிறார்.

சிவ பத்மயன் இசையமைத்துள்ள ‘அன்னக்கிளி’, மண்ணின் நாட்டுப்புற இசையையும் துடிப்பான ராப் இசையையும் கலந்து, பாரம்பரிய கிராமிய காதலுக்கு புதுமையான தொடுதலை கொடுக்கிறது. கிரிபாகர்ஜெய் ஜெ இயக்கியுள்ள இந்த வீடியோ, காதல் கதையின் இதயத்தை தக்கவைத்து, வேடிக்கையான, வண்ணமயமான மற்றும் இளமை துள்ளலுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

வாகீசன் மற்றும் பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட்-க்கு ‘அன்னக்கிளி’ என்பது _தமிழ் கிறுக்கன்_ உடனான ஐந்து பாடல்கள் கொண்ட இசைப் பயணத்தின் உற்சாகமான தொடக்கமாகும்.

புதுமையான இசை, அழகான காதல் மற்றும் தவிர்க்க முடியாத நாட்டுப்புற இசையுடன், ‘அன்னக்கிளி’ பழைய பள்ளி காதலுக்கு இன்னும் Gen Z கூட்டம் இருப்பதை நிரூபிக்கிறது

டாக்டர். ஜெ.பி.லீலாராம், ராஜீ .க, சரவணன். பா , ரேகா . லீ தயாரிப்பில் உருவாகிய ‘அன்னக்கிளி ‘ இப்போது பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் youtube சேனலில் ஒளிப்பரப்பப்படுகிறது

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan