- சினிமா

சிங்கீதம் சீனிவாசராவ் மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல்!

சிங்கீதம் சீனிவாசராவ் மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல்!

இந்திய திரை உலகில் எண்ணற்ற காவியங்களை படைத்தவர். முத்திரை பதித்தவர். மூன்று தலைமுறைகளை தாண்டி முத்தாய்ப்பாய் நின்றவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மும்மொழிகளிலும் வென்றவர். எம்மொழிக்குச் சென்றாலும் எழுச்சியுடன் நின்றவர். உலக நாயகன் கமலஹாசன் ஐயா அவர்களை உள்ளங்கைகளில் தாங்கிப் பிடித்த உன்னத உள்ளம். அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு, கண்களில் வழிகிறது கண்ணீர் வெள்ளம். சங்கீதத்தை இழந்துவிட்ட சபாக்கள் வாடுவதை போல, சிங்கீதம் சீனிவாசராவ் அவர்களை இழந்துவிட்டு, திரை உலகம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. அவரை இழந்து வாடக்கூடிய கலை உலகத்தினருக்கும், அவருடைய இல்லத்தாருக்கும் என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்….

இப்படிக்கு,
திரைப்பட இயக்குனர்,
நடிகர்,
திரைப்பட தயாரிப்பாளர்,
திரைப்பட விநியோகஸ்தர்,
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்
சங்கத் தலைவர்
டி.ராஜேந்தர்

_GovindarajPro

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan