இயக்குநர் விக்னேஷ் சிவன் தொடங்கி வைத்த ‘உலக உணவு நாள்’ பிரியாணி திருவிழா
*உலக உணவு நாளில் ‘ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேசன்’ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பிரியாணியை வழங்கிய இயக்குநர் விக்னேஷ் சிவன்*
பசிக்கு உணவு கிடைக்காமல் வாடுவோர்களின் துயரைத் துடைக்கும் வகையில் ‘ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேசன்’ எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒருங்கிணைத்த #ZEROHUNGER உணவு வழங்கும் நிகழ்வை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான விக்னேஷ் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
வீதியோரத்தில் வாழ்பவர்கள் – வீடற்றவர்கள் – ஆதரவற்றவர்கள்- முதியோர்கள்- உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள் – தொழுநோயாளிகள்- மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்- என சமூகத்தால் புறகணிக்கப்பட்ட ஏழை எளிய மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு ஒரு வேளை உணவு என்பது தினந்தோறும் எட்டாகனியாகத் இருக்கிறது. இந்த யதார்த்தமான சமூகவியலை உணர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆலன் சாமுவேல் தன் நண்பர்களுடன் இணைந்து ‘ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேசன்’ எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். இதில் சேவையாற்றும் தன்னார்வலர்கள் ஏழைகளுக்கு சுவையான ஆரோக்கியமான தரமான உணவை தயாரித்து பசியால் வாடும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் பசியை போக்கி வருகிறார்கள்.
ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேசன்’ தன்னார்வ தொண்டு நிறுவனம் ‘உலக உணவு நாள்’ என்ற ஒரு நிகழ்வை ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிகழ்வில் திரையுலக பிரபலங்களான லோகேஷ் கனகராஜ்- ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வர். இந்நிகழ்வில் 5000 நபர்களுக்கு பிரியாணியை தயாரித்து வழங்குவது வாடிக்கை. இந்த ஆண்டு இந்த நிகழ்வை சென்னை புறநகர் பகுதியில் உள்ள பேரம்பாக்கம் சமுதாய கூடத்தில் #ZEROHUNGER எனும் பெயரில் ஐயாயிரம் நபர்களுக்கு பிரியாணியை வழங்கினோம். இதனை திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் தொடங்கி வைத்தார்.
*இந்நிகழ்வில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசுகையில்,*
”இன்றைய சூழலில் நம்மில் பலருக்கு பிரியாணி எனும் சுவையான உணவு என்பது விடுமுறை நாட்களில் ஒரு ஆப்ஷனாக மாறிவிட்டது. நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் பிரியாணியை தவிர்த்து விட்டு, விலை குறைவு என்பதற்காக குஸ்காவை மட்டும் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் ஒருவேளை உணவு கிடைக்காதவர்களுக்கு பிரியாணி என்பதும் ..அதை சுவைப்பது என்பதும் ..எளிதில் நடக்காத ஒன்றாகும். அதனை இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் முன்னெடுக்கும் போது இந்நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தேன். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் -வீடற்றவர்கள் -சாலையோரத்தில் வசிப்பவர்கள்- முதியோர்கள் -ஆதரவற்றவர்கள்- ஆகியோர் பயன் பெறும் போது மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்நிகழ்வில் கலந்து கொண்டதை பெருமிதமாக கருதுகிறேன்” என்றார்.
இதனிடையே உலக பிரியாணி திருநாளான ( அக்டோபர் 11 ) இன்று ஏழை எளிய மக்களுக்கும் சுவையான தரமான ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்ட பிரியாணியை பசியாற வழங்கியது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேசன் பற்றி…..
* யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதே இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நோக்கம்.
* இதில் சேவை செய்யும் ஒவ்வொரும் வெவ்வேறு துறையைச் சார்ந்தவர்கள்.
* பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்றவர்கள் வழங்கும் சிறிய அளவிலான நன்கொடை மூலம் இது இயங்கி வருகிறது.
* கடந்த ஏழு ஆண்டுகளாக இரவு நேரத்தில் சாலையோரத்தில் காகிதம்- கோணிப்பை – இவற்றின் மீது உறங்குபவர்களுக்கு போர்வை வழங்குதல்.
* கொரோனா காலகட்டத்தின் போது பசியால் வாடி, வீதியோரத்தில் இருப்பவர்களுக்கு அவர்களின் இருப்பிடத்தை தேடிச் சென்று உணவு அளித்தல்.
* தினமும் 400 நபர்களுக்கு தேவையான உணவுகளை தயாரித்து அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று வழங்குதல்.
* இதற்கான நிதி ஆதாரங்களை திரட்டுவதற்காக ஆண்டுதோறும் ஒரு முறை இது போன்ற பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல்.
* தொழு நோயாளிகளுக்கு உணவளித்தல்.
* அரசாங்கத்தின் உதவியுடன் மதுராந்தகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி சத்துணவு மையத்தில் ஆரோக்கியமான குடிநீர் கிடைப்பதற்கான திட்டத்தின் பங்கெடுத்தல்.
* மதுராந்தகத்தை கடந்து சில கிராமங்களில் தண்ணீர் வசதி இன்றி இருந்த கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கான அரசாங்க திட்டத்திற்கும் உதவி.
இப்படி மக்களின்
தேவைகளை உணர்ந்து அவர்களின் பசியை போக்குவதற்கான அனைத்து வகையிலான செயல்பாடுகளிலும் ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேசன் தொடர்ந்து ஆர்வம் காட்டி சேவையாற்றி வருகிறது.
*World Food Day Biryani Festival Inaugurated by Director Vignesh Shivan*
*Director Vignesh Shivan served biryani at the “Help on Hunger Foundation” volunteer organization’s World Food Day event.*
The volunteer organization *Help on Hunger Foundation* organized the #ZEROHUNGER food distribution event to relieve the suffering of people who go hungry. Vignesh Shivan, one of Tamil cinema’s leading star directors, attended as the chief guest and inaugurated it.
For the poor and marginalized people who are shunned by society, including those living on the streets, the homeless, the destitute, the elderly, those abandoned by relatives, leprosy patients, and the mentally ill, even a single meal is a daily struggle. Realizing this social reality, social activist Allan Samuel started the volunteer organization Help on Hunger Foundation along with his friends. The volunteers prepare tasty, healthy, quality food for the poor, meet hungry people in person, and relieve their hunger.
Help on Hunger Foundation has been organizing its World Food Day event continuously for seven years. Film celebrities such as Lokesh Kanagaraj and Aishwarya Rajesh have attended it as special guests. It is customary at this event to prepare and serve biryani to 5,000 people. This year, under the name #ZEROHUNGER, biryani was served to 5,000 people at the Perambakkam community hall in the suburbs of Chennai. Director Vignesh Shivan inaugurated the event.
*Speaking at the event, Director Vignesh Shivan said:*
In today’s world, biryani, such a delicious dish, has become an occasional option on holidays for many of us. When I was studying in college, I skipped biryani and ate only kuska because it was cheaper. But for those who cannot even get one meal, eating biryani is something that rarely happens. When this volunteer organization took up that cause, I expressed my wish to take part in the event. It makes me happy to see the poor, the homeless, those living on the roadside, the elderly, and the destitute benefit from this. I consider it a matter of pride to have been part of this event.
It is noteworthy that today ( *October 11* ), World Biryani Day, serving tasty, high-quality, and healthily prepared biryani to the poor and satisfying their hunger drew everyone’s attention.
*About Help on Hunger Foundation*
The organization’s goal is that no one should go hungry.
Each of its volunteers comes from a different field.
It runs on small donations from people who are financially well off.
For the past seven years, it has been giving blankets at night to people sleeping on the roadside on paper and gunny sacks.
During the COVID period, it sought out hungry people living on the streets and fed them at their locations.
It prepares food for 400 people every day and delivers it to where they live.
To raise funds, it organizes an event like this, with celebrity participation, once every year.
It feeds leprosy patients.
With government support, it takes part in a project to provide safe drinking water at more than 200 anganwadi nutrition centers in and around Madurantakam.
It has also helped a government scheme to provide clean drinking water to a rural primary health center in villages beyond Madurantakam that had no water facility.
Understanding people’s needs in this way, Help on Hunger Foundation continues to serve with commitment in all kinds of activities to relieve their hunger.







