- பொது

ஆக்டோபஸ் – OTT விமர்சனம்

ஆக்டோபஸ் – OTT விமர்சனம்

நடிப்பு:அஷ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன், சித்து குமரேசன், வினோத் கிஷன், கலைவாணி பாஸ்கர்
இயக்கம்:ஜெயச்சந்திரா ஹாஷ்மி

கதை 

அன்பு நகர்னு ஒரு சின்ன குடியிருப்பு. அங்கே வசிக்கும் அனைவரும் ஒரே குடும்பம் மாதிரி பாசமா இருப்பாங்க.

அங்க புதுசா குடி வர்றாங்க வருண் [அஷ்வின்] – நிகிதா [சித்து] தம்பதி.

வருண் தினமும் மனைவியை எல்லார் முன்னாடியும் அடிச்சு, சுடு வச்சு கொடுமை பண்றான். ஒரு நாள் நைட் பயங்கர அலறல் சத்தம் கேட்குது. மறுநாள் நிகிதா காணாம போயிடுறா.

அவளை கொன்னுட்டான்னு ஊரே போலீஸ்ல புகார் கொடுக்குது. Case Court-க்கு போகுது.

அதுக்கு அப்புறம் தான் பெரிய Twist. செத்துட்டதா நினைச்ச பொண்ணு உயிரோட வர்றா. அப்போ உண்மையான குற்றவாளி யாரு? அதுதான் மீதி கதை.

கதையின் பலங்களும், மாறுபட்ட கோணங்களும்

குறைவான வீடுகள், இல்லத்தரசிகளின் நட்பு, நடுரோட்டில் முத்தமிடும் கணவனைக் கண்டு பெண்கள் குறும்பாகச் சிரிப்பதும் அடுத்த நாள் புதிய காட்சிக்கு வாசலில் காத்திருப்பதும் ஆரம்பப் பகுதிகளுக்குக் கலகலப்பைக் கொடுக்கின்றன.

மனைவி தொடர்பான விவகாரம் பெண்களிடமிருந்து ஆண்களிடம் பரவுவது திரைக்கதையின் சுவையை கூட்டுகிறது.

நடிப்பும், தொழில்நுட்பக் கைவண்ணமும்

தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசை கதையின் பரபரப்புக்குத் தேவையான வேகத்தையும் உயிரோட்டத்தையும் தந்து தொடருக்கு பலம் சேர்க்கிறது.

பாண்டியனின் படத்தொகுப்பு காட்சிகளைச் சீராகக் கோர்த்துக் கொண்டு செல்கிறது.

அஷ்வின் நடிப்பு:  முதல் பாதியில் வில்லன் மாதிரி வரும் இவர், அப்புறம் அப்படியே வேற ஆளா மாறிடுறாரு. செம்ம.

அர்ச்சனா:* Crime கதை மேல ஆர்வம் உள்ள RJ பொண்ணா, காணாம போன பொண்ணை தேடுறதுல கலக்கியிருக்காங்க.

ஒவ்வொரு Episode முடிவுலயும் வரும் Twist ரசிக்கும்படி இருக்கிறது.

Thriller பிடிக்கும், Twist பிடிக்கும் என்றால் கண்டிப்பா பார்க்கலாம். சேர்ந்தார் போல் 7 எபிசோட் கலையும் பார்ப்பது நிச்சயமாக சுவையான அனுபவமாக இருக்கும்

 

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan