- சினிமா செய்திகள்

17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ‘போஸ்டர்’ வெளியீடு

வருகின்ற டிசம்பர் மாதம் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் சென்னையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவினை தமிழக அரசின் மேலான ஆதரவுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் (ICAF) நடத்தி வருகிறது.

 இவ்விழா குறித்த போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ, இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் ICAF தலைவர் கண்ணன், துணை தலைவர் இராமகிருஷ்ணன், பொது செயலாளர் தங்கராஜ், பிலிம் சேம்பர் தலைவர் கட்ரகட்ட பிரசாத் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

 இவ்விழாவிற்கு தேர்வாகியுள்ள  திரைப்படங்கள் தேவி, தேவிபாலா, அண்ணா, காசினோவா, ரஷ்யன் கலாச்சார கழகம் மற்றும் தாகூர் அரங்கத்தில் திரையிடப்பட இருக்கிறது.

 உலக சினிமா, போட்டியில் பங்கு பெறும் தமிழ் திரைப்படங்கள், இந்திய பனோரமாகுறிப்பிட்ட இயக்குனர்களின் முந்தைய சாதனை திரைப்படங்கள், குறிப்பிட்ட நாடுகளின் சிறந்த திரைப்படங்கள் ஆகியன பிரிவுகளில் படங்கள்  திரையிடப்படுகிறது.

 தமிழ் திரைப்பட போட்டிக்கான மொத்த பரிசு தொகை ரூ. 6 லட்சமாகவும், இளம் சாதனையாளர் விருதுக்கு ரூ. 1 லட்சமாகவும் இருக்கும்.

 இவ்விழாவில் திரைத்துறை பிரபலங்கள் இயக்குனர்நடிகர் பார்த்திபன், ரோகிணி, இயக்குனர்கள் சங்க செயலாளர்   தலைவர் ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

About expressuser

Read All Posts By expressuser

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *