- விளையாட்டு

வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் சான் வாட்சன்!

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகிலுள்ள மேல் அயனம்பாக்கம், வேலம்மாள் வித்யாலாயா பள்ளி மாணவ மாணவியர் தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்டு தொடர்ந்து பதக்க வேட்டை நடத்தி வருகின்றனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஊக்கத்தொகை வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஆஸ்திரேலியாவின் மட்டைப் பந்து வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர விளையாட்டு வீரருமான சான் வாட்சன், சிறப்பு விருந்தினராக இந்த விழாவில் பங்கு கொண்டு ஊக்கத் தொகை பெறும் மாணவ மாணவியை வாழ்த்திப் பேசினார். முன்னதாக இந்திய மற்றும் ஆஸ்திரேலியா தேசியக் கொடிகளை அசைத்து சான் வாட்சனுக்கு மாணவர்கள் வரவேற்பு அளித்தனர்.
ஆஸ்திரேலியப் பாடலுக்கு மாணவர்கள் ஆடிய நடனத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிப் பாடல்களை மாணவர்கள் பாடியதையும் வெகுவாக ரசித்துப் பார்தார் சான் வாட்சன். மாணவர்கள் வரைந்த சான் வாட்சன் உருவப்படமும் அவருக்கு அன்புப் பரிசாக வழங்கப்பட்டது.
விழாவின் முத்தாய்ப்பாக நவீன மட்டைப் பந்து ஆடுகளத்தையும் சான் வாட்சன் திறந்து வைத்தார்.
இவ்விழாவைத் தொடர்ந்து பூந்தமல்லி வேலம்மாள் வித்யாலயா, மாங்காடு வேலம்மாள் வித்தயாலயா பள்ளிகளுக்கும் வஜயம் செய்த சான் வாட்சன், விளையாட்டில் முத்திரை பதித்த மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக ஊக்கத் தொகை வழங்கினார்.
பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்ய இந்த விழாவும், வழங்கிய ஊக்கத் தொகையும் தங்களுக்கு புதிய உத்வேகத்தைத் தந்திருப்பதாகவும், விளையாட்டில் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க உற்சாகம் தருவதாக அமைந்திருப்பதாக
வும் மாணவர்கள் தெரிவித்தனர்.

 

About expressuser

Read All Posts By expressuser