இந்தியாவின் பிரபல க்ரில் உணவகமான அப்சொல்யூட் பார்பிக்யூ உங்களுக்காகப் ‘பாரசீக உணவுத் திருவிழாவை’ கொண்டாட உள்ளது பண்டைய பிரம்மாண்ட பாரசீக சாம்ராஜ்யத்தைப் போலவே அவர்கள் வழங்கும் பஃபே அளவையும் பிரம்மாண்டமாக வைத்திருக்கும் உறுதிமொழியைக் காப்பாற்றி உள்ளது. ‘ட்ரெஷர்ஸ் ஆஃப் பர்ஷியா, தி பர்ஷியன் ஃபுட் ஃபெஸ்டிவல்’ என்னும் தலைப்பிலான அப்சொல்யூட் பார்பிக்யூவின் அப்சொல்யூட் விருந்து உங்களுக்காகவே பிரத்யேகமானது.
ஒரு கணம் பார்க்கும் போது இங்குள்ள செஃப்கள் திடீரென பல்லாயிரம் வருடங்கள் பின்நோக்கிச் சென்று அந்தக் காலப் பாரம்பரியச் சமையலறைகளுக்குள் நுழைந்து விட்டனரோ என்று நினைக்கும் வகையில் பண்டைய உணவு வகைகளை உங்களுக்காகவே தயாரித்துள்ளனர். அறுசுவை உணவு ஆய்வாளர்கள், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் பரசீக, இரானிய மற்றும் மத்தியதரைக் கடல் நறுமணச் சுவையை உண்டு களித்து ரசித்துச் சுவைத்துக் குதூகலிப்பதே சாட்சியாகும். நல்ல சுவையான உணவு நல்ல மனநிலையை வழங்கும்.
செலோ கெபப், லேம்ப் போரி, படேம்ஜன் உள்பட என்றைக்கும் பிரபல உணவு வகைகளுடன் குனாஃபா மற்றும் உமாலி வகைகளையும் சுவைத்து மகிழுங்கள்.
ஏபி உணவகத்துக்குள் நுழையும் போது ஏதோ உணவு சாப்பிட வழக்கமான இடத்துக்குள் செல்லும் உணர்வின்றி ராயல் பாரசீக மாளிகைக்குள் தடம் பதிக்கும் எண்ணம் வரும் வகையில் சூழல கட்டமைக்கப்பட்டுள்ளது. ராஜ கம்பீர உடையில் வெயிட்டர்கள், செவிக்கினிய பாரசீக இசை, பாரசீகப் பண்டைப் பெருமைகளைப் பறைசாற்றும் சுவர்கள் மற்றும் கண்ணுக்கு இனிய நடனங்களை நாவுக்குச் சுவையான உணவுடன் கேட்டும், கண்டும், சுவைத்தும் களிக்கலாம்.
செவிக்கும், கண்ணுக்கும், வயிறுக்கும் விருந்து கிடைத்த பிறகு மனதுக்குப் பிடித்த வகையில் கையில் ஹூக்காவுடன் பாரசீகனைப் போல உடை அணிந்து கொண்டு அழகு பார்க்கும் வசதியும் உண்டு. மதிய மற்றும் இரவு உணவுக்கு வகை வகையான ஏராளமான பாரசீக உணவுகள் உங்களுக்காகக் கொட்டிக் கிடக்கும் நிலையில் ஒவ்வொரு நாளையும் சந்தோஷத்துடன் கொண்டாட முன் பதிவு செய்து கொண்டு அப்சொல்யூட் பார்பிக்யூ உணவகத்துக்கு வர அன்புடன் அழைக்கிறோம். சலுகைகளுடன் இச்சேவைகளை வழங்க கைபேசி செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
சென்னயிலுள்ள 6 ஏபி உணவகங்களிலும் பாரசீக உணவுத் திருவிழாக் கொண்டாட்டம் 2019 நவம்பர் 6 – 17 வரை நடைபெறும்.
‘விஷ் க்ரில் கௌண்டர்’ மற்றும் வித்தியாசமான ‘மேக் எ விஷ் டு ஜெனீ’ கருதுகோளின் கீழ் இறைச்சி மற்றும் வெஜ்ஜீக்களுக்கு புகழ்பெற்ற ஏபி இந்தியா முழுவதும் 34 உணவகங்களுடன் தற்போது சென்னை குரோம்பேட்டையில் 140ஆவது கவர் அவுட்லெட்டையும் திறந்துள்ளனர்.
முன்பதிவுகளுக்கு :
தி.நகர் – 7337336821 வேளச்சேரி – 7337336822 போரூர் – 7337336823
நாவலூர் – 7337336824 அடையாறு – 7337336732 குரோம்பேட்டை- 7337336827