- காலேஜ் கேம்பஸ்

பாரிவேந்தர் எம்பி தொடங்கிவைத்த மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி!

 

தாம்பரம் அடுத்த காட்டாங்குளத்தூர் இல் அமைந்துள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழக வளாகத்தில் விளையாட்டுத் துறை சார்பில் மாற்று திறனாளிகள் பங்குபெறும் வீல்சேர் கிரிக்கெட் t20 போட்டி பல்கலைக்கழக மைதானத்தில் துவங்கியது போட்டியினை எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு டி ஆர் பாரிவேந்தர் முறைப்படி துவக்கி வைத்தார்.. முன்னதாக வீரர்களை விளையாட்டுத்துறை இயக்குனர் டாக்டர் வைத்தியநாதன் அறிமுகப்படுத்தி வைத்தார்.. தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையேயான டி20 போட்டி 3 போட்டிகள் இந்த பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற உள்ளது நாளை மாலை வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.. விளையாட்டு வீரர் அறிமுகத்தின் போது அனைத்து வீரர்களும் போட்டி என்று பாராமல் விளையாட்டாக எண்ணி வெற்றிக்காக பாடுபட வேண்டும் என அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்…இதுகுறித்து விளையாட்டு வீரர்கள் கூறுகையில் முதன்முறையாக இதுபோன்ற 20 ஓவர் விளையாட்டுப்போட்டி எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தங்களைப் போன்ற மாற்றுத் திறனாளி வீரர்களின் வெளிக்கொணர இதுபோன்ற போட்டிகள் மிகவும் உதவுவதாக இதற்காக எஸ்ஆர்எம் பல்கலைக் கழக நிறுவனர் வேந்தருமான டி.ஆர் பாரிவேந்தர் எம்பிக்கு தாங்கள் அனைவரும் நன்றி செலுத்துவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்..

 

 

 

About expressuser

Read All Posts By expressuser