- விளையாட்டு

65th SGFI National Championship 2019-2020!

இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் (SGFI) நடத்தும் 65வது தேசிய அளவிலான
இலக்குப்பந்து போட்டியானது இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள தாசில் பத்ரா
வில் ஹெரிடேஜ் சர்வதேச பள்ளியில் 21-11-2019 முதல் 24-11-2019 வரை நடைபெற்றது.
இதில் தமிழக இலக்குபந்து அணியானது 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள்
மற்றும் பெண்கள் பிரிவுகளில் பங்கு பெற்றது.
15 மாநிலங்கள் பங்குபெற்ற இப்போட்டியில் தமிழக அணியானது மூன்று பதக்கங்களை
வென்றது.இதில் 17 க்கு வயதுக்குட்பட்ட பெண்கள் அணி தங்கப் பதக்கத்தையும் 17
வயதுக்கு உட்பட்ட ஆண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தையும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள்
அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு
புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மறைமலைநகரிலும் தமிழ்நாடு உடற்கல்வியியல்
மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திலும் பயிற்சி முகாம் ஆனது 5 நாட்கள்
நடைபெற்றது இதில் அணியின் மேலாளர்களாக திரு.S.முஹம்மது யூசுப் மற்றும்
திருமதி. ஜா.தங்க ஜெபா, அவர்களும் அணியின் பயிற்சியாளர்களாக திரு.
ரெ.புருஷோத்தமன், திரு. கலைமுருகன், திரு. து.அப்பு, திரு.பாண்டியன், திரு.
ரா.ராஜசேகர், திரு.முஹம்மது சோட்டு, திருமதி.க.சுரையா பானு, மற்றும்
செல்வி.சி.பிரியா, அவர்களும் பணியாற்றினார்
தமிழக இலக்குப்பந்து விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தேர்வு முகாம் பயிற்சி
முகாம் மற்றும் போட்டியில் பங்கு கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும்
தென்மண்டல இலக்குப்பந்து கழகத்தின் தலைவரும் தமிழக இலக்குப்பந்து கழகத்தின்
பொதுச் செயலாளருமான திரு.ஜமால் ஷரிப்.க.ப அவர்கள்
செய்திருந்தார் மற்றும் உடற்கல்வி தலைமை ஆய்வாளர் சென்னை. அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

About expressuser

Read All Posts By expressuser