எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவில் கணிசமான சேமிப்பை வழங்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது
· “இன்டெலிபெர்ஃபார்மன்ஸ்” என்பதோடு இது ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது
கட்டுமானம் மற்றும் அகழ்வு பணிகளில் ஈடுபடுத்தக்கூடிய சாதனங்கள் துறையில் இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளரான ஜேசிபி இந்தியா, அதன் முற்றிலும் புதிய 3DX ecoXPERT பேக்ஹோ லோடரை சென்னையில் இன்று அறிமுகம் செய்திருக்கிறது.
ஜேசிபி–யின் “இன்டெலிபெர்ஃபார்மன்ஸ்” தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் அறிவார்ந்த புதிய 3DX ecoXPERT, எரிபொருளை மிச்சப்படுத்துகிறது மற்றும் பராமரிப்பு செலவை குறைக்கிறது. இந்த இயந்திரத்தின் ஆற்றல் தேவைகளை திறம்பட நிர்வகிக்கும் இத்தொழில்நுட்பமானது, கணிசமான சேமிப்பை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு வழிவகுக்கிறது.
ஜேசிபி இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அலுவலருமான திரு சுபிர் குமார் சௌத்ரி இது தொடர்பாக பேசுகையில், “எமது புதிய பேக்ஹோ லோடர் 3DX ecoXPERT-ஐ அறிமுகம் செய்திருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். எரிபொருள் மீது 12% வரையும் மற்றும் பராமரிப்பு செலவில் 22% வரையும் சேமிப்பை வழங்கும் வகையில் இப்புதிய இயந்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. “இன்டெலிபெர்ஃபார்மன்ஸ்” தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் இப்புதிய இயந்திரமானது ஜேசிபி லைவ்லிங்க் என அழைக்கப்படும் நவீன டெலிமேட்டிக்ஸ் என்ற வசதியோடு வருகிறது. எமது வாடிக்கையாளர்களுக்கு இச்சாதனத்தின் நிகழ்நேர தகவல் மற்றும் மேலாண்மையை இது ஏதுவாக்குகிறது. கட்டுமான பணிகளுக்கான சாதனங்களில் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் (IoT) மற்றும் பிக் டேட்டா போன்ற ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் ஜேசிபி முன்னோடியாகத் திகழ்கிறது. இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்கை தான் வகிப்பது குறித்து ஜேசிபி பொறுப்புறுதி கொண்டிருக்கிறது,” என்று கூறினார்.
இப்புதிய இயந்திரம், 30 புத்தாக்க அம்சங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. மிருதுவான கியர் ஷிப்ட், ஆட்டோ ஸ்டாப், ஆபரேட்டரின் வசதிக்காகவும், களைப்பு தராதவாறு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய இருக்கை ஆகியவை இவற்றுள் சிலவாகும். எக்கானமி மற்றும் ஸ்டாண்டர்டு என்ற இதன் இரு நில அகழ்வு வழிமுறைகள், செய்யப்படுவதற்கு அவசியமாகவுள்ள பணியின் வகையை தேர்வுசெய்வதற்கு ஆபரேட்டருக்கு நெகிழ்வுத் திறனை தருகிறது.
பேக்ஹோ லோடரில் இடம்பெற்றுள்ள விருப்பத்தேர்வு அம்சமான ‘இன்டெலிடிக்’ (IntelliDig), ஆழம் மற்றும் வீச்செல்லை மீது நிகழ்நேர தகவல் குறிப்பை ஆபரேட்டருக்கு கிடைக்குமாறு ஏதுவாக்குகிறது. இதன் மூலம், செலவுகளை மிச்சப்படுத்துவதோடு திரும்பத் திரும்ப அதே பணியை செய்ய வேண்டிய அவசியத்தையும் குறைக்கிறது.
புதிய இயந்திரத்தின் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்கள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புத்தாக்கம் ஆகியவை மீது ஜேசிபி இந்தியா கொண்டிருக்கும் கூர்நோக்கம் பற்றிய அறிமுகத்தை பெற்றனர். அத்துடன், புதிய ஜேசிபி 3DX ecoXPERT பேக்ஹோ லோடரின் இயக்கம் மீது ஒரு நேரடி அனுபவமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இப்புதிய இயந்திரம் பற்றிய செய்முறை விளக்கமும் மற்றும் ஒரு பயிற்சி செயல்திட்டமும் இந்த அறிமுக நிகழ்வில் இடம்பெற்றிருந்தன. சென்னை மாநகரம் மட்டுமன்றி அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், நிதி சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் இத்தொழில்துறையை சேர்ந்த அக்கறை பங்காளர்கள் அதிக எண்ணிக்கையில் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜேசிபி இந்தியா குறித்து: –
இந்தியாவில் கட்டுமான பணிகள் மற்றும் நில அகழ்வு துறையில் முன்னணி தயாரிப்பாளராக ஜேசிபி இந்தியா லிமிடெட் செயலாற்றி வருகிறது. 1979ம் ஆண்டில் ஒரு கூட்டுவகிப்பு நிறுவனமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது யுனைட்டட் கிங்டம்–ஐ சேர்ந்த ஜேசி பேம்போர்ட் எக்ஸ்கவேட்டர்ஸ் நிறுவனத்திற்கு முற்றிலும் சொந்தமான ஒரு துணை நிறுவனமாக இயங்குகிறது.
இந்தியாவில் ஐந்து மிக நவீன தொழிலகங்களை கொண்டிருக்கும் ஜேசிபி இந்தியா, ‘மேக் இன் இந்தியா’ செயல்திட்டத்தில் உருவகமாக திகழ்கிறது. எட்டு தயாரிப்பு வகையினங்களில் 60க்கும் அதிகமான தயாரிப்பு சாதனங்களை இன்றைக்கு இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் மட்டும் விற்பனை செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் 100க்கும் அதிகமான நாடுகளுக்கு இதன் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. யுகே நாட்டிற்கு வெளியே நிறுவப்பட்டுள்ள மிகப்பெரிய வடிவமைக்கும் மையத்தை ஜேசிபி இந்தியா புனே நகரில் கொண்டிருக்கிறது. எதிர்காலத்திற்கான நவீன, மேம்பட்ட தொழில்நுட்பங்களை இங்கு இது உருவாக்கி வருகிறது. நிகழ்நேர எச்சரிக்கைகள் மற்றும் சாதன கண்காணிப்பின் வழியாக பணி அமைவிடத்தை சிறப்பான மேலாண்மைக்காக IoT மற்றும் பிக் டேட்டாவை பயன்படுத்துகிற லைவ்லிங்க் என்பதன் அறிமுகத்தின் மூலம் இத்தொழில்துறையில் மேம்பட்ட டெலிமேட்டிக்ஸ் துறையில் முன்னோடியாக இது திகழ்கிறது.
இந்திய கட்டுமானப் பணி சாதனங்களுக்கான தொழில்துறையில் 65க்கும் அதிகமான டீலர்கள், 700க்கும் கூடுதலான அவுட்லெட்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புக்கான ஆதரவுக்கு பயிற்சியளிக்கப்பட்ட 5000 சர்வீஸ் பொறியிலாளர்கள் ஆகியோரை உள்ளடக்கி, மிகப்பெரிய டீலர் வலையமைப்பை ஜேசிபி இந்தியா கொண்டிருக்கிறது.