
உங்கள் சேமிப்பு பஜாஜ் ஃபைனான்ஸ் FD யில் பாதுகாப்பாக
இருப்பதற்கான 5 காரணங்கள்!
“சேமிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் சம்பாதிக்கும் ஒரு ரூபாய்”
ஓய்வுபெறத் தயாராகும் மூத்த குடிமக்கள் முதல் முதன்முறையாக வேலைக்குச் செல்லும் கல்லூரி மாணவர்கள் வரை, கிட்டத்தட்ட எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் மேற்கண்ட மூதுரையைக் கேட்டிருப்பார்கள்.
வெவ்வேறு முதலீட்டு இலக்குகளைக் கொண்டிருந்தாலும், பெரும்பாலான தனிநபர்கள் கவர்ச்சிகரமான வருமானத்தையும் பாதுகாப்பான சேமிப்பையும் வழங்கும் வழிகளைத் தேடுகிறார்கள். சிறந்த வட்டி விகிதங்கள் மற்றும் பாதுகாப்பான சேமிப்பு, இவை இரண்டையும் பஜாஜ் Fixed Deposit அளிக்கிறது.
பஜாஜ் ஃபைனான்ஸ் FD மூலம் 7.25% வரை உறுதிப்படுத்தப்பட்ட வருமானத்தைப் பெறுங்கள்
சந்தையில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ரிசர்வ் வங்கி அண்மையில் எடுத்த நடவடிக்கைகள் மூலம், ரெப்போ விகிதங்கள் கடந்த ஆண்டு பல தடவைகள் குறைக்கப்பட்டன. இதன் விளைவாக பெரும்பாலான நிதி நிறுவனங்கள் FD வட்டி விகிதங்களை குறைத்தார்கள், அதனால் தற்போதைய எஃப்.டி விகிதங்கள் வெறும் 4 முதல் 6% வரை தான் உள்ளது தற்போதைய சந்தை நிலைமைகளுடன் ஒப்பிடுகையில், பஜாஜ் ஃபைனான்ஸ் 7.25% வரை மிக உயர்ந்த FD interest rates ஐ வழங்குகிறது, இது சந்தையில் இருப்பதிலயே மிக உயர்ந்ததாகும்.
மூத்த குடிமக்கள் அல்லாதவர்கள் 7% வரை வட்டி விகிதங்கள் பெற்று பயன் பெறலாம், பஜாஜ் பின்சர்வ் வலைத்தளம் வழியாக. ஆன்லைனில் முதலீடு செய்வதன் மூலம் கூடுதலாக , 0.10% கூடுதல் வட்டி விகிதம் பெறலாம். முதலீட்டு முறையை கணக்கில் கொள்ளாமலயே, மூத்த குடிமக்கள் 7.25% வரை உறுதிப்படுத்தப்பட்ட வருமானத்தை தங்கள் சேமிப்புகளுக்கு பெறலாம்.
உங்கள் நிதி இலக்குகளை அடைவதற்கு இந்த கவர்ச்சிகரமான FD வட்டி விகிதங்கள் உங்களுக்கு பெருமளவில் உதவலாம் என்றாலும், பாதுகாப்பு குறித்த கவலை எப்போதும் இருக்கும். தற்போதுள்ள காலத்தில் பஜாஜ் ஃபைனான்சின் ஆன்லைன் FD பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக இருப்பதற்கான 5 காரணங்களை இங்கே தரப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்கான அதிக மதிப்பீடுகள்: பஜாஜ் ஃபைனான்ஸ் FD CRISIL மற்றும் MAAA ஆகியவற்றால் FAAA என்ற மிக உயர்ந்த பாதுகாப்பு மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது, இது உங்கள் சேமிப்பு பாதுகாப்பான முறையில் வளர்வதை உறுதி செய்கிறது.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கை: 2,50,000 க்கும் அதிகமான மகிழ்ச்சியான FD வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பஜாஜ் ஃபைனான்சில் உங்கள் FD எப்போதும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதற்கு ஒரு சான்றாகும்.
ஈர்க்கக்கூடிய வைப்பு புத்தகம்: பஜாஜ் ஃபைனான்சின் வைப்புப் புத்தகத்தில் 23,000 கோடியுள்ளது, இது மீண்டும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது..
கோரப்படாத டெபாசிட்கள் ஏதுமில்லை -0: ‘கோரப்படாத டெபாசிட்கள் 0 ஆக உள்ள NBFC களில் பஜாஜ் பைனானஸ் மட்டுமே உள்ளது, சரியான நேரத்தில் பட்டுவாடா செய்வதுடன் தவணைதவறாத – அனுபவத்தையும் வழங்குவதில் பெயர் பெற்றவர்கள்.
வலுவான நற்சான்றுகளைக் கொண்ட நிறுவனம்: எந்தவொரு FD யிலும் முதலீடு செய்வதற்கு முன், நிறுவனத்தின் நிலைப்பாடுகளையும் மேலும் தனித்தியங்கும் செயல்திறனையும் மதிப்பீடு செய்வது அவசியம்
ஜனவரி 2021 இல் வெளியிடப்பட்ட பஜாஜ் பின்சர்வின் காலாண்டு முடிவுகள், ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் ஆண்டுக்கு ஆண்டு 15% உயர்வைக் காட்டுகின்றன. சிறந்த லாபம், வளர்ச்சி, சொத்து தரம் மற்றும் போதுமான மூலதன விகிதங்களுடன், பஜாஜ் ஃபைனான்ஸ் FD யில் முதலீடு செய்யும் போது, உங்கள் டெபாசிட்களுக்கு மிக உயர்ந்த பாதுகாப்பை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் டெபாசிடின் மிக உயர்ந்த பாதுகாப்பிற்கு கூடுதலாக, பஜாஜ் ஃபைனான்ஸ் உங்கள் வீட்டின் வசதியிலிருந்து பஜாஜ் ஃபைனான்சில் ஆன்லைன் மூலம் FD யில் முதலீடு செய்வதற்கான வசதியையும் வழங்குகிறது. நீங்கள் 12 முதல் 60 மாதங்கள் வரையிலான முதலீட்டுக் காலத்தையும் தேர்வு செய்யலாம், மேலும் நீங்கள் முதலீடு செய்வதற்கு முன் உங்கள் வருமானத்தை அறிந்து கொள்ளலாம், FD return calculator ஐ பயன்படுத்தி அறிந்துக் கொள்ளலாம்.
கூடுதலாக, மாதாந்திர அடிப்படையில் சேமிப்பை வளர்க்க விரும்புவோருக்கு, பஜாஜ் ஃபைனான்ஸ் முறையான வைப்புத் திட்டத்துடன் (அல்லது SDP) சேமிப்பதற்கான வசதியை வழங்குகிறது. இது இந்தத் துறைக்கே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டமாகும், இது சமமற்ற வகையில் சேமிப்பை வளர்க்க உதவுகிறது, ஒரு மாதத்துக்கான தொடக்க டெபாசிட் தொகை வெறும் ரூ. 5000 மட்டுமே.
அதிகரித்து வரும் சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் வெவ்வேறு நிதி இலக்குகளுக்கான நிதி திரட்ட வேண்டிய அவசியத்துடன், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆன்லைன் FD ஒரு சிறந்த முதலீட்டு தேர்வாக உள்ளது. பாதுகாப்பான முறையில் உங்கள் சேமிப்பு வளர, சிறப்பான விருப்பத்தேர்வாக பஜாஜ் ஃபைனான்ஸ் FD ஐ தேர்வு செய்யுங்கள்.



