- பொது

அற்புதமான சலுகைகளை அறிவித்த ஹோண்டா கார்ஸ்!

ஏப்ரல் 2021 இல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது ஹோண்டா கார்ஸ் இந்தியா அற்புதமான சலுகைகளை அறிவிக்கிறது!

 புதுடெல்லி, ஏப்ரல் 12, 2021: ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL) என்பது இந்தியாவில் பிரீமியம் கார்களை உற்பத்தி செய்யும் முன்னணி உற்பத்தியாளராகும். அது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிற பைசாகி, உகாதி, பிஹூ மற்றும் போய்லா பைசாகா போன்ற புனிதமான கொண்டாட்டங்களின் மாதத்தில் புதிய கார்கள் வாங்கத் திட்டமிட்டுள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஆச்சரியமான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஹோண்டா டீலர்ஷிப்களிலும் ஏப்ரல் 30, 2021 வரை  கிடைக்கப் பெறும்.

இந்த ஆச்சரியமூட்டும் சலுகைகள் பற்றிய தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட, ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை, துணைத் தலைவர் மற்றும் இயக்குநர், திரு. ராஜேஷ் கோயல், சொன்னதாவது, நாங்கள் அனைவருக்கும் பாதுகாப்பான விழாக்காலத்திற்கான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு புனிதமான தருணத்தில், பல வாடிக்கையாளர்கள் ஆண்டின் இந்த தருணத்தில் தங்கள் கார்களை பல வாடிக்கையாளர்கள் வாங்குகிறார்கள் மற்றும் கார் வாங்குபவர்கள் அவர்களின் பணத்திற்கு சிறந்த மதிப்பினைப் பெறுவதும், மன அமைதி மற்றும் உரிமைத்துவத்திற்கான பெருமைப் பெற செய்வதை இயலச் செய்வது எங்களின் முயற்சியாகும்.” “தற்போதைய சுகாதார சூழ்நிலையில் தனிப்பட்ட வாகனத்தை கொணடிருப்பது அவசியமாகிறது. மற்றும் பாதுகாப்பான, பத்திரமான, தொடர்பற்ற வாங்கும் அனுபவத்தை எளிதாக்குவதற்காக, எங்களின் ஆன்லைன் தளம் ஹோண்டா ஃபார் ஹோம்  எங்களின் டீலர்ஷிப்களின் வலுவான விற்பனை செயல்முறையால் ஆதிக்கப்படுகிறது, அது எங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக முழுமையாக தயாராக உள்ளது என்று மேலும் கூறினார்.

பிராண்டுகள் சலுகைகள்
ஹோண்டா அமேஸ ரூ 38,800 வரை
5வது தலைமுறை ஹோண்டா சிட்டி ரூ 10,000 வரை
ஹோண்டா ஜாஸ் ரூ 32,200 வரை
ஹோண்டா WR-V ரூ 32,500 வரை

சலுகைகள் ரொக்கத் தள்ளுபடிகள் அல்லது அசெஸரிகள் மற்றும் கார் எக்ஸசேஞ்ச் தள்ளுபடிகளின் வடிவத்தில் இருக்கும். ஏற்கனவே உள்ள ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு, தங்களின் பழைய ஹோண்டா காரை விற்பனை செய்யும் போது லாயல்டி போனஸ், மற்றும் சிறப்பு எக்ஸ்சேஞ்ச் பயன்கள் இருக்கும்.

நிறுவனம் அரசு ஊழியர்கள் மற்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருநிறுவனங்களுக்கு தனிச்சிறப்பான சலுகைகளை வழங்குகிறது. HCIL பல வங்கிகளுடனும் நிதி நிறுவனங்களுடனும் ஆன்-ரோடு நிதிஉதவியை வழங்குவது, குறைந்த இஎம்ஐ பேக்கேஜ்கள் மற்றும் நீண்டகாலக் கடன்கள் வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உதவுதற்காக கூட்டு வைத்துள்ளது.

மேலும் தகவலுக்கு, வாடிக்கையாளர்கள் பார்வையிடலாம் https://www.hondacarindia.com/offers

 About Honda Cars India Ltd.

Honda Cars India Ltd. (HCIL), a leading manufacturer of premium cars in India, was established in December 1995 with a commitment to provide Honda’s latest passenger car models and technologies, to the Indian customers. Honda’s models are strongly associated with advanced design and technology, apart from their established qualities of durability, reliability, fuel-efficiency and safety.

About expressuser

Read All Posts By expressuser