- பொது

காத்திருப்பு முடிந்துவிட்டது! SonyLIVல் UEFA யூரோ 2020 ஐப் பார்த்து மகிழுங்கள்!

காத்திருப்பு முடிந்துவிட்டது! SonyLIVல் UEFA யூரோ 2020 ஐப் பார்த்து மகிழுங்கள்!

தேசிய அளவில், ஜூன் 09 2021:

மிகவும் புகழ்பெற்ற, மிகவும் பிரபலமான மற்றும் இரண்டாவது மிக அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்டுள்ள விளையாட்டாகத் திகழும், கால்பந்து விளையாட்டு, இந்தியாவின் முடிசூடா மன்னன் என்பது மறுக்கமுடியாத நிஜமாகும். UEFA யூரோ 2020க்காக கால்பந்து பிரியர்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் காத்திருக்கின்றனர். இதோ, காத்திருப்பு முடிந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் ஜூன் 11 ஆம் தேதிக்கான கவுண்ட்டவுன் ஆகும். இப்போட்டி இறுதியாக SonyLIV நேரலையில் ஒளிபரப்பாகவுள்ளது. ரோம் நகரில் துருக்கி இத்தாலியை எதிர்கொள்கிறது. 11 ஹோஸ்ட் நகரங்களில் விளையாடப்படவுள்ள 51 ஆட்டங்கள் ரகிசர்களை மகிழ்விக்கவுள்ளது மற்றும் ஜூலை 11 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இறுதிப் போட்டிக்கான பயணம் நிச்சயம் ஒரு ரோலர் கோஸ்டர் பயணமாகத் திகழும். முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு முன்னோடித்துவ முயற்சியாக முன்னோடித்துவ SonyLIV, இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட இந்தியாவில் 6 வெவ்வேறு மொழிகளில் நேரடிப் போட்டிகளை வழங்குவதன் மூலம் யூரோ 2020க்கு ஒரு உள்ளூர் சுவையைச் சேர்க்கத் தயாராகியுள்ளது.

யூரோ 2020 இந்த ஆண்டின் மிகப்பெரிய விளையாட்டாகும். வலுவான 360 டிகிரி மார்க்கெட்டிங் பிரச்சாரத்துடன், இந்தியா முழுவதும் கால்பந்து ரசிகர்களை சென்றடையும் நோக்கத்துடன், SonyLIV யூரோ 2020 இன் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட “தி வெயிட் இஸ் ஓவர்” பிரச்சாரம் ரசிகர்களை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் வீரர்கள் ஓராண்டிற்கும் மேலாக வெளிப்படுத்தியுள்ள பொறுமையைக் கடந்து, இந்த அழகான விளையாட்டின் உணர்ச்சிகளை திறமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

‘தி வெயிட் இஸ் ஓவர்’ பிரச்சாரம் ரசிகர்களைப் போலவே வீரர்களும் யூரோ 2020 வழியாக ஐரோப்பிய கால்பந்தின் புனித கிரெயிலை அடைய ஒரு வருடம் காத்திருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி போன்ற அணிகள் தங்களது கடந்த கால மகிமையை புதுப்பிக்க காத்திருக்கின்றன. குரோஷியா மற்றும் பிரான்ஸ் போன்ற மற்றவர்கள், தங்களது சமீபத்திய புகழ் வெறும் அதிர்ஷ்டம் இல்லை என்பதை நிரூபிக்க ஆர்வமாக உள்ளனர். Sony LIV இப்போது யூரோ 2020 கொண்டாட்டங்களில் ரசிகர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக உள்ளது.

Sony LIVன் யூரோ 2020 க்கு விளம்பரதாரர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. போட்டிகளில் கிடைக்கும் மொத்த இருப்புகளில் 70% ஐ நாங்கள் ஏற்கனவே விற்றுவிட்டோம். மொபைல் கைபேசிகள், ஆட்டோ, ஈ-காமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப பிராண்டுகளிலிருந்து கணிசமான வாங்குதல்களுடன், WazirX, டெல், அக்கோ இன்சூரன்ஸ் மற்றும் பெட்வே ஆகியவை போட்டிகளுக்கான முக்கிய ஸ்பான்சர்களாக இடம்பெற்றுள்ளன.

கருத்துரைகள்:

அமன் ஸ்ரீவஸ்தவா – தலைவர் – சந்தைப்படுத்தல், டிஜிட்டல் வணிகம், SonyLIV, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா

“யூரோ 2020 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் ஒன்றாகும், மேலும் SonyLIVல் நாங்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஷிப்புகளுக்கு ரசிகர்களை மிகப்பெரிய மெய்நிகர் அரங்கிற்கு அழைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். #Wait Is Over என்ற பிரச்சாரம் கால்பந்தின் அழியாத உணர்வைக் கொண்டாடுகிறது மற்றும் தொடங்கவிருக்கும் போட்டி குறித்த ஒவ்வொரு ரசிகரின் மகிழ்ச்சியையும் அதிகரிக்கிறது”

 

 

About expressuser

Read All Posts By expressuser