- சினிமா செய்திகள்

World Television Premiere of Agni Devi and Evergreen En Rasavin Manasile to hit the screen together this Sunday on Colors Tamil!

‘சன்டே சினி காம்போ’வில் வரும் 13-ந்தேதி அக்னி தேவி மற்றும் என் ராசாவின் மனசிலே ஆகிய திரைப்படங்களை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி!
ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி, மாலை 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் படங்களை பார்த்து ரசிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்!

சென்னை, ஜூன் 11- தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக ‘சன்டே சினி காம்போ’வில் பொழுதுபோக்கு நிறைந்த திரைப்படங்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் இந்த வாரம் 13-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1 மணிக்கு உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக அக்னி தேவி திரைப்படத்தையும் மாலை 3.30 மணிக்கு என்றும் மனதைவிட்டு நீங்காத காதல் படமான என் ராசாவின் மனசிலே திரைப்படத்தையும் ஒளிபரப்ப உள்ளது.
இப்படங்களின் சிறப்பான கதையமைப்பும் காதல், சிலிர்ப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான  கதைத்தளத்தையும் கண்டு மகிழ ஜுன் 13-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1 மணிக்கு, மாலை 3.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்யுங்கள்.

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான அக்னி தேவி திரைப்படத்தை ஜான் பால் ராஜ் மற்றும் ஷியாம் சூர்யா ஆகியோர் இயக்கி உள்ளனர். இந்த திரைப்படமானது முற்றிலும் அரசியல் சம்பந்தமான திரைப்படம் ஆகும். இந்த படத்தில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களான பாபி சிம்ஹா, மது மற்றும் ரம்யா நம்பீசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஒரு பத்திரிகையாளரின் கொடூரமான கொலை குறித்து விசாரிக்கும் நேர்மை தவறாத காவலரை பற்றியதாகும். அவரது சந்தேகம் ஊழல் நிறைந்த அரசியல்வாதியை நோக்கி செல்கிறது. இதன் காரணமாக அவரிடம் நடத்தப்படும் விசாரணை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. காவல்துறை எவ்வாறு பல தடைகளைத் தாண்டி குற்றவாளியைப் பிடிக்கிறது என்பதே இதன் கதையாகும். ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் ஒளிபரப்பாக உள்ள இந்த திரைப்படம் உங்களுக்கு சிறந்த  பொழுதுபோக்கு நிறைந்த திரைப்படமாக அமையும்.

அதைத் தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு 1991-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் காதல் திரைப்படமான என் ராசாவின் மனசிலே என்ற படம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கி உள்ளார். இதில் தமிழ் சினிமாவிற்கே ஏற்ற காதல், பாசம் மற்றும் பழிவாங்குதல் போன்றவை இடம்பெற்றுள்ளன. இதில் கதாநாயகனாக ராஜ்கிரண், கதாநாயகியாக மீனா மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமையை உற்சாகத்துடன் கழிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் அன்றைய தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

About expressuser

Read All Posts By expressuser