- ஆரோக்யம்

கொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கான மருந்து ஆராய்ச்சியில் மற்றுமொரு மைல்கல்!

கொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கான மருந்து ஆராய்ச்சியில் மற்றுமொரு மைல்கல்!

நோய் எதிர்ப்பு துறை வல்லுனராகிய தமிழக இளம்பெண் புதிய கண்டுபிடிப்பு

தனது ஆராய்ச்சியின் பயன்கள் பொது மக்களுக்கு சென்று சேர உதவ வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள்

சென்னை, 28 ஜூலை 2021: தமிழ் நாட்டின் மதுரையை சேர்ந்த இளம் பெண் அறிவியலாளர் கவுதமி பாலசுப்ரமணியன் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நோயெதிர்ப்பு (மருத்துவ பயோடெக்னாலஜி) முதுகலைப் பட்டப்படிப்பு பயின்றவர், மேலும் லண்டனில் உள்ள காஸ்மிக் ஃப்யூஷன் லிமிடெட் என்ற பயோடெக்னாலஜி நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றியவராவார். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடல் தாக்கும் வீக்கமுள்ள நோய்கள் (Autoimmune inflammatory diseases)குறித்த சில ஆராய்ச்சி முடிவுகளை கண்டறிந்தார். அந்த ஆராய்ச்சி முடிவுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைகழக ஆன்காலஜி துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது..

அதே ஆராய்ச்சியின் முடிவுகள் அடிப்படையில் கொரோனா நோயின் தீவிர தாக்குதல்களால் உருவாகும் அதீத வீக்கம், மூச்சுத்திணறல் போன்றவைகளால் நிகழும் எண்ணற்ற மரணங்களை தடுக்கும் இவரது ஆராய்ச்சிகளின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர விரும்புகிறார்.

இது தடுப்பு மருந்து அல்ல மாறாக, இந்த மருந்தின் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் அதிதீவிரதாக்கமான வீக்கம், காய்ச்சல், மூச்சுதிணறலை உருவாக்கும் டிஎன்எப் ஆல்ஃபாவின் (TNF-Alpha) ஒரு பகுதி தடுத்து நிறுத்த படுவதால் மேற்கூறிய வீக்கம், காய்ச்சல் ,மூச்சு திணறல் குறைந்து உயிர் இழப்புகளை தடுத்து நிறுத்த முடியும் என்பதை இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த மருந்தின் தயாரிப்பு முறை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இந்த மருந்தின் பயன்பாடு அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து கவுதமி பாலசுப்ரமணியன் கூறுகையில், இது கொரோனோ வைரஸை தடுக்கும் தடுப்பூசி அல்ல, ஆனால் இந்த மருந்து மூலம் உருமாறும் வைரஸ் ஏற்படுத்தும் அதீத வீக்கம், காய்ச்சல், மூச்சு திணறலால் ஏற்படும் இறப்புகளை நிச்சயம் தவிர்க்க இயலும். நமது உடலுக்குள் வேறு ஒரு வைரஸ் வரும் போது அதை வெளியேற்ற நமது உடலில் வலி மற்றும் வீக்கம் ஏற்படும். வெப்பநிலை அதிகரிக்கும். இவற்றை செயல் படுத்த தூண்டுவது டிஎன்எப் ஆல்ஃபா (TNF Alpha) என்ற புரதம் மற்றும் சில புரதங்களே. கொரோனோ வைரஸை பொறுத்த வரை டிஎன்எப் ஆல்ஃபா (TNF Alpha) என்ற புரதம் மிக அதீதகமாக செயல்பட்டு வீக்கம் காய்ச்சல் மூச்சு திணறலை மிகவும் அதிகரிக்க செய்கிறது. இதே நேரத்தில் டிஎன்எப் ஆல்பா புரதம் சில குழப்பங்களை உருவாக்கி விடுவதால் நோய் எதிர்ப்பு செல்கள் கொரோனோ வைரஸை மட்டும் கொல்லாமல் உடலில் உள்ள சொந்த செல்களையும் அழித்து விடுவதால் நோய்எதிர்ப்பு திறன் இழப்பால் மரணங்கள் நிகழ்கிறது. இதனை தன்னுடல் தாக்கும் கோளாறு (Autoimmune disorder) என்பார்கள். எனது ஆராய்ச்சியில் டிஎன்எப் ஆல்ஃபாவின் (TNF-Alpha) அதீத செயல்பாடுகளை தடுப்பதற்கு அதன் ஒரு பகுதியை மட்டும் தடுத்து நிறுத்த மோனோ க்ளோனால் ஆண்டிபாடி (Monoclonal Antibody) மூலம் செய்ய இயலும் என்பதை அறிந்தேன். அதை போலவே கொரோனோ வைரஸ் பாதிக்க பட்ட நபர்களின் டிஎன்எப் ஆல்ஃபா வை (TNF Alpha) கட்டு படுத்த எவ்வகை மோனோ க்ளோனால் ஆண்டிபாடி (Monoclonal Antibody) உருவாக்க முடியும் அதை பெப்‌டைட் ஸிந்தெஸிஸ் (Peptide Synthesis) முறையில். செய்ய இயலும் என்பதே எனது ஆராய்ச்சியின் கருத்தாக்கம். இதனால் டிஎன்எப் ஆல்ஃபாவின் ஒரு பகுதி தடுத்து நிறுத்த படுவதால் அதீத வீக்கம், காய்ச்சல், மூச்சு திணறல் குறைந்து உயிர் இழப்புகளை தடுத்து நிறுத்த முடியும்.

நான் சென்ற ஆண்டு கோவிட் தாக்கம் உச்ச கட்டத்தில் இருந்த போது எனது ஆராய்ச்சி குறிப்புகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் உட்பட பல நிறுவனங்களுக்கு அனுப்பி இருந்தேன். அவர்களுடைய பதிலுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்..

தற்போது தமிழ் நாட்டில் உருவாகி உள்ள மாண்பு மிகு தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களது மக்கள் அரசு கோவிட் தடுப்பு பணிகளில் செலுத்தி வரும் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்கள் மற்றும் அதற்கு உறுதணையாக செயல்படும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மருத்துவ துறை அமைச்சர், மாண்பு மிகு தொழில் துறை அமைச்சர் அவர்களது பணிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது எனக்குள் ஒரு புதிய உத்வேகத்தை உருவாக்கியது. இந்த அரசு அறிவியல் தொழில்நுட்பம் அறிந்த இளைஞர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வருவது எனக்குள் மிகுந்த ஆர்வத்தை உருவாக்கியது.

மாண்புமிகு மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அவர்கள் எனது ஆராய்ச்சி கண்டுபிடிப்பை கனிவுடன் பரிசிலீத்து தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நல்லாசியுடன் இந்த ஆராய்ச்சிகளை தமிழக அரசு மூலம் நேரடியாகவோ அல்லது தமிழக அரசின் மேலான பரிந்துரைகளின் அடிப்படையில் வேறு மருத்துவ நிறுவனங்களோடு தொடர்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டுமாறு கோரிக்கை விடுக்கிறேன். இந்த ஆய்வுகள் குறித்த விரிவான விபரங்களை தமிழக அரசின் மருத்துவ நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஆயத்தமாக உள்ளேன்.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகளின் அடிப்படையில் கண்டறிந்த TNF-Alpha புரதத்தின் அதீத செயல்பாடுகளை கட்டுக்குள் வைக்க அதன் ஒரு பகுதியை தடுத்துநிறுத்த செலுத்தபடும் Monoclonal Antibody-ஐ உருவாக்கும் Peptited Synthesis செயல்முறைக்கான Peptited Sequence தன்னிடம் உள்ளது எனவும், இதை அரசு பரிந்துரைக்கும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (Memorandum of Understanding)அடிப்படையில் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இந்த மருந்து நிச்சயமாக கொரோனோ உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு பேருதவியாக அமையும், மேலும் மக்கள் இதனால் பெரிதும் பயனடைவார்கள் என்றும் இது தமிழ்நாட்டிற்கும் தமிழக அரசிற்கும் பெருமை சேர்க்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவிட்மூன்றாவது அலை தாக்கம் உருவாக சாத்திய கூறுகள் இருப்பதாக கருதப்படுவதால் இதில் விரைவு நடவடிக்கைகள் அவசியம் என்று கருதுகிறார். மேலும் இந்த உயிர்காக்கும் மருந்து குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஊடகங்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

 

About expressuser

Read All Posts By expressuser