
‘தி கிரேட் ஹோண்டா ஃபெஸ்ட்’ உடன் தனது வாடிக்கையாளர்களுக்கு
விழாக்கால மிகிழ்ச்சியை ஹோண்டா அறிவிக்கிறது!
சென்னை: ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL), இந்தியாவில் பிரீமியம் கார்களின் முன்னணி உற்பத்தியாளர், ‘நவராத்திரி’ புனித காலத்தின் துவக்கத்தையொட்டி இந்தியாவெங்கிலும் தனது வாடிக்கையாளர்களுக்கு ‘தி கிரேட் ஹோண்டா ஃபெஸ்ட்’-ன் கீழ் அதன் விழாக்கால சலுகைகளைத் துவங்கியுள்ளது. இந்த விழாக்கால ஊக்குவிப்புகளின் போது, அக்டோபர் 31, 2021 வரை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா டீலர்ஷிப்கள் எங்கும் தங்களின் விருப்பமான ஹோண்டாவை வாங்கும்போது கவர்ச்சிகரமான சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
உற்சாகமான சலுகைகள் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட்டின், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவு மூத்தத் துணைத் தலைவரும் இயக்குநருமான, திரு. ராஜேஷ் கோயல் கூறியதாவது, “விழாக்காலங்கள் கொண்டாடுவதற்கு ஒரு காரணத்தைத் தருவதுடன் நமது வாழ்வில் ஒரு சிறப்பு இடத்தை எப்போதும் கொண்டிருக்கின்றன. இந்த நேரங்களின் போது மிகவும் தேவைப்படுகிற ஆனந்தத்தைக் கொண்டுவருகிற மிகவும் வெகுமதியுள்ள கார் வாங்குதலை செய்வதற்காக எங்களின் ஹோண்டா தயாரிப்பு வரிசை முழுவதிலும் உற்சாகமான சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” மேலும் அவர் கூறுகையில் “நுகர்வோர் உணர்ச்சிப் பாங்கில் மேம்பாடு மற்றும் தற்போதைய விற்பனை வேகம் சந்தையில் எங்களின் தயாரிப்புகளுக்கு ஒரு நல்ல தேவை இருப்பதை நிரூபிக்கின்றன. விழாக்கா உத்வேகம் ஒட்டுமொத்த ஆட்டோ தொழிலுக்கும் தேவையான ஊக்கத்தைத் தரும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
பிராண்டு Offers
5வது தலைமுறை ஹோண்டா சிட்டி ரூ. 53,500 வரை
4வது தலைமுறை ஹோண்டா சிட்டி ரூ. 22,000 வரை
புதிய ஹோண்டா அமேஸ் ரூ. 18,000 வரை
புதிய ஹோண்டா WR-V ரூ. 40,100 வரை
புதிய ஹோண்டா ஜாஸ் ரூ. 45,900 வரை
இந்த சிறப்பு சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு ரொக்க தள்ளுபடிகளாகவோ, அசெஸரிகளாகவோ, லாயல்டி போனஸ்களாகவோ மற்றும் சிறப்புத் தள்ளுபடி பலன்களாகவோ இருக்கும். குறைந்த வட்டி விகிதம், குறைந்த EMI பேக்கேஜ்கள், சிறப்பு மோரட்டாரியம் திட்டங்கள் மற்றும் நீண்டகால கடன்களுடன் ஆன்ரோடு நிதியுதவிக்கான 50க்கும் மேற்பட்ட கவர்ச்சிகரமான மற்றும் விலை கொடுக்கத்தக்க நிதித் திட்டங்களை வழங்குவதற்கு வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக 17 வங்கிகள் மற்றும நிதி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
விழாக்கால சலுகைகள் மீதான மேலதிகத் தகவல்களுக்கு, வாடிக்கையாளர்கள் இங்கே வருகை தருக: https://www.hondacarindia.com/offers
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் பற்றி
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட. (HCIL), இந்தியாவின் பிரீமியம் கார்களின் ஒரு முன்னணி உற்பத்தியாளர், டிசம்பர் 1995-ல் ஹோண்டாவின் பயணியர் கார் மாடல்கள் மற்றும் தொழில்நட்பங்களை இந்தியா வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான பொறுப்புடன் ஏற்படுத்தப்பட்டது. HCIL-ன் கார்ப்பரேட் அலுவலகம் உ.பியின் கிரேடர் நோய்டாவில் அமைந்துள்ளது மற்றும் அதன் நவீன உற்பத்தி ஆலை ராஜஸ்தானின் ஆள்வார் மாவட்டத்தில், தபுகாராவில் அமைந்துள்ளது.
நிறுவனத்தின் தயாரிப்பு வகைகள் ஹோண்டா ஜாஸ், ஹோண்டா அமேஸ், ஹோண்டா WR-V, மற்றும் ஹோண்டா சிட்டியை உள்ளடக்கி வெவ்வேறு பிரிவுகளில் தெளிவான வாங்குபவர்களின் மாறுப்பட்டத் தேவைகளை நிறைவேற்றுகிறது. ஹோண்டாவின் மாடல்கள் நீடித்திருக்குந்தன்மை, நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனத்திற்கான அவற்றின் நிரூபிக்கப்பட்டத் தரங்கள் தவிர, மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் உறுதியாகத் தொடர்புடையவை. நிறுவனம் நாடு முழுவதும் விவரிவான அளவிலான ஒரு உறுதியான விற்பனை மற்றும் வினியோக வலையமைப்பினைக் கொண்டிருக்கிறது.
புதிய கார் வியாபாரத்தைத் தவிர, ஹோண்டா ஆட்டோ டெரஸ் என்னும் அதன் வியாபார செயல்பாடு மூலம் ஏற்கனவே உரிமையாகவுள்ள கார்களை வாங்குவதற்கும் விற்பதற்குமான ஓரிடத் தீர்வினை ஹோண்டா வழங்குகிறது. ஹோண்டா சான்று பெற்ற ப்ரீ-ஓன்டு கார்கள் நாடெங்கிலும் ப்ரீ-ஓன்டு கார்களை வாங்குபவர்களின் மாறுப்பட்ட மற்றும் வளர்ந்து வரும் தேவைகளை நிறைவேற்றுகிற தரம் மற்றும் மன நிம்மதிக்கான உத்தரவாதத்துடன் வருகின்றன.





