- பொது

சாம்சங் ரெஃரிஜிரேட்டர்களின் விற்பனை அதிகரிப்பு!

அதிக கொள்ளளவு கொண்ட சாம்சங் ரெஃரிஜிரேட்டர்களின் விற்பனை
சென்னையில் அதிகரிப்பு!

-55-அங்குலம் மற்றும் அதற்கும் மேற்பட்ட ஸ்மார்ட் டிவிகளில் விற்பனை வளர்ச்சி 116% மற்றும் தமிழ்நாட்டில் ப்ரீமியம் ரெஃப்ரிஜிரேட்டர்கள் மற்றும் வாஷிங்மெஷின்களின் விற்பனை முறையே 39% மற்றும் 51% என்று வளர்ச்சி கண்டிருக்கிறது

சென்னை, இந்தியா – பண்டிகை / திருவிழாவிற்கு தயார் செய்வதற்காக தங்களது வீடுகளை தரம் உயர்த்த மக்கள் முற்படுகின்ற பண்டிகை காலம்தான் ஆண்டில் மிகவும் பரபரப்பான, உற்சாகமான நேரமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் நுகர்வோர்கள், சமீபத்திய தொழில்நுட்ப வசதிகளுடன் தங்களது வீடுகளை திறன்மிக்கதாக ஆக்குவதற்கு சாம்சங் – ன் பெரிய திரை டிவி, ரெஃப்ரிஜிரேட்டர் மற்றும் வாஷிங்மெஷின்களை வாங்குகின்றனர்.

இந்த நேர்மறையான போக்கின் காரணமாக, இந்தியாவின் மிகப்பெரிய, அதிக நம்பிக்கை பெற்ற நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான சாம்சங் தயாரிப்புகளை விற்பனை பெருமளவு அதிகரித்திருக்கிறது. 55 அங்குலம் மற்றும் அதற்கும் அதிகமான ஸ்மார்ட் டிவிகளின் விற்பனை 116% என பிராமாண்டமாக உயர்ந்திருக்கிறது. 350 லிட்டர் கொள்ளளவிற்கும் மேற்பட்ட ஃபிராஸ்ட் ஃப்ரீ ரெஃப்ரிஜிரேட்டர்களின் விற்பனை வளர்ச்சி 39% மற்றும் 9 கி.கி. கொள்ளளவிற்கும் மேற்பட்ட வாஷிங்மெஷின்களின் வளர்ச்சி 51% ஆகவும் இருந்திருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் டிவிகளுக்கு 30.7%, ரெஃப்ரிஜிரேட்டர்களுக்கு 37.6% மற்றும் வாஷிங்மெஷின்களுக்கு 21.9% என்ற கணிசமான சந்தை பங்கினை தமிழ்நாட்டில் சாம்சங் கைப்பற்றியிருக்கிறது. இதன்மூலம், டிவி மற்றும் ரெஃப்ரிஜிரேட்டர் வகையினங்களில் சந்தையில் முதன்மை இடத்தை சாம்சங் கைவசப்படுத்தியிருக்கிறது.

“இந்நாட்டில் அதிக நம்பிக்கைக்குரிய பிராண்டுகளுள் முதன்மை வகிக்கும் சாம்சங், அதன் புத்தாக்க தயாரிப்புகளுடன் விற்பனைக்குப் பிந்தைய சேவையை தீவிரமாக முன்னெடுப்பதன் மூலம் அதன் உயர்திறனை தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகிறது. சாம்சங் – ன் உதவியோடும் மற்றும் இந்திய நுகர்வோர்களின் தேவைகளை நேர்த்தியாகப் பூர்த்திசெய்யும் டிவிகள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களின் வலுவான அணிவரிசையைக் கொண்டும், இந்த பண்டிகைக்காலம் முழுவதிலும் ஒரு வலுவான விற்பனை போக்கு இருக்குமென்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று சத்யா ஏஜென்சீஸ் (பி) லிமிடெட் – ன் நிர்வாக இயக்குனர் திரு. J. ஜான்சன் கூறினார்.
கூடுதல் உணவு சேமிப்பு வசதியை வழங்குகின்ற மற்றும் தங்களது சமையலறையின் அழகியல் அம்சத்தை இன்னும் மேம்படுத்துகிறவாறு அதிக கொள்ளளவுள்ள ரெஃப்ரிஜிரேட்டர்களை நுகர்வோர்கள் இப்போது விரும்பி வாங்குகின்றனர். வளர்ந்து வரும் இத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 4-டோர் ஃபிளெக்ஸ் ஃபேமிலி ஹப்™ மற்றும் 4-டோர் ஃபிளெக்ஸ் ஃபிரென்சு டோர் மாடல்களில், BESPOKE ஃபிரென்சு டோர் ரெஃப்ரிஜிரேட்டர் தயாரிப்புகளின் அணிவரிசையை சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. பிரத்யேகமான அழகியல் அம்சம் மற்றும் ப்ரீமியம் குளிர்பதன வசதி ஆகியவற்றின் தனித்துவமான கலவையாக இத்தொகுப்பு இருக்கிறது.

நியோ QLED TV, QLED TVs, ஃபிரேம் டிவி, தி ஷெரிஃப் டிவி, கிரிஸ்டல் 4K UHD டிவி போன்ற புரட்சிகரமான ப்ரீமியம் மற்றும் லைஃப்ஸ்டைல் டிவிகளின் ஒரு விரிவான அணிவரிசையை சாம்சங் கொண்டிருக்கிறது. இவற்றின் அழகான வடிவமைப்பின் மூலம் உங்களது லிவ்விங் ரூமின் அழகை இது மேம்படுத்துவது மட்டுமின்றி, திரையரங்கில் பார்ப்பது போன்ற படம் மற்றும் ஒலி தரத்தில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பிரமாதமான அனுபவத்தையும் இத்தயாரிப்புகள் வழங்குகின்றன.

இவற்றோடு சேர்த்து, உயர்தரமான தூய்மையாக்கல் மற்றும் துப்புரவு நிலையை உறுதிசெய்ய ஹைஜீன் ஸ்டீம் உடன் சாம்சங் எக்கோ பப்பிள் போன்ற அதிக திறனும், உயர் கொள்ளவும், முழுமையான தானியக்க செயல்பாடும் கொண்ட வாஷிங் மெஷின்களை வாங்க நுகர்வோர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்தியா முழுவதிலுமே சாம்சங் நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள் பிரிவு வலுவான வளர்ச்சியை கண்டிருக்கிறது. இந்த பண்டிகை காலத்தின்போது சாம்சங் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 30% அதிகரிக்கும் என அது எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ப்ரீமியம் வகையின டிவிகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களின் விற்பனை 65% அளவிற்கு வளர்ச்சி காணும் என நம்பப்படுகிறது.

About Samsung Electronics Co., Ltd.
Samsung inspires the world and shapes the future with transformative ideas and technologies. The company is redefining the worlds of TVs, smartphones, wearable devices, tablets, digital appliances, network systems and memory, system LSI, foundry, and LED solutions. For the latest news on Samsung India, please visit Samsung India Newsroom at http://news.samsung.com/in. For Hindi, log on to Samsung Newsroom Bharat at https://news.samsung.com/bharat. You can also follow us on Twitter @SamsungNewsIN

About expressuser

Read All Posts By expressuser