- பொது

‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்!

உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்

~ வரும் ஞாயிறு அன்று மதியம் 1.30 மணி மற்றும் மாலை 4.30 மணிக்கு
இந்த அதிரடி திரைப்படத்தை பார்க்கத் தவறாதீர்கள்

சென்னை, டிச. 1- தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் கலர்ஸ் தமிழ், உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக புத்தம் புதிய திரைப்படமான ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தை வரும் 5 டிசம்பர், ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.30 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் அதன் ‘சன்டே சினி ஜம்போ’வில் ஒளிபரப்ப உள்ளது.
2021-ம் ஆண்டு வெளியான அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்ற இந்த படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்கி உள்ளார். இதில் கதாநாயகியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபாகர், திவ்ய பிரபா, ராமச்சந்திர ராஜு, சூப்பர் சுப்பராயன் மற்றும் சச்சின் கெடேகர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் கிரைம், அரசியல் மற்றும் தாய் மகன் பாசத்தை மையமாக கொண்ட படம் ஆகும். இதில் விஜய் ஆண்டனி விஜய ராகவனாக நடித்திருக்கிறார். தான் கலெக்டர் ஆக வேண்டும் என்ற தனது தாயின் கனவை நனவாக்க அவர் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார். மிகவும் இளகிய மனம் உள்ள அவர் அங்குள்ள அனைவருக்கும் தன்னாலான உதவிகளை செய்கிறார். இதன் காரணமாக அவர் அந்த பகுதியில் உள்ள மக்களின் அன்பை பெறுகிறார். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஊழல் கவுன்சிலர் (சூப்பர் சுப்பராயன் நடித்திருக்கிறார்), முக்கிய அரசியல்வாதியான பீடா பெருமாள் (ராமச்சந்திர ராஜு நடித்திருக்கிறார்) மற்றும் அவரது அடியாட்கள் சுலு மற்றும் கான்பிரன்ஸ் கருணா (பிரபாகர் நடித்திருக்கிறார்) ஆகியோர் இடையே மோதல் ஏற்படுகிறது. விஜய ராகவன் எப்படி அவர்களை எல்லாம் சமாளித்து தனது தாய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதையாகும்.
இந்த திரைப்படம் குறித்து விஜய் ஆண்டனி கூறுகையில், ‘நான் நடித்துள்ள கோடியில் ஒருவன் திரைப்படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிறந்த நடிகர்களுடன் அற்புதமான பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் பார்வையாளர்கள் ரசிக்கும் சிறந்த படமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த வார இறுதியான டிசம்பர் 5-ந்தேதி பார்வையாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் என்று தெரிவித்தார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 5-ந்தேதி மதியம் 1.30 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் இந்த படத்தைக் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள்.

About expressuser

Read All Posts By expressuser