வெஹிக்கில்கேர் மற்றும் ஆட்டோமொவில் மூலமாக இந்தியாவில் ஆன்லைன்லிருந்து-ஆஃப்லைன் பிரிவிற்குள் டோட்டல்எனர்ஜீஸ் நிறுவனம் அடியெடுத்து வைக்கிறது!டோட்டல்எனர்ஜீஸ்
சென்னை –டோட்டல்எனர்ஜீஸ்(TotalEnergies) மார்கெட்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்(TEMIPL) நிறுவனம், பல்வேறு சேனல்களில் (வர்த்தக வழிகளில்)வாடிக்கையாளர்சேவை மையங்களை மேம்படுத்துவதற்காக, இந்தியாவில் உள்ள ஆன்லைன்லிருந்து-ஆஃப்லைன் (நேரடி)(O2O) ஆட்டோமொபைல் சர்வீஸ் அக்ரிகேட்டர்நிறுவனங்கள் இரண்டுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. குருகிராம்மற்றும் பெங்களூருவைமையமாகக்கொண்டு இயங்கும்வெஹிக்கில்கேர் (VehicleCare) மற்றும் ஆட்டோமொவில் (Automovill) ஆகியவையேஅந்த இரண்டு சர்வீஸ் அக்ரிகேட்டர் (பல்வேறு நிறுவனங்களின் சேவைகளை ஒருங்கமைத்து தரும்)நிறுவனங்களாகும்.
நகர்ப்புற இந்தியாவில் இன்டர்நெட்வசதிகிடைப்பது59%* சதவீதமாக இருப்பதால், இந்திய நுகர்வோர் அவரவர் வீடுகளுக்கே நேரடியாக வந்துசேரும்வெளிப்படையான, சௌகரியமான, மற்றும்உயர்தர சேவைகளை அதிகளவில் எதிர்பார்க்கின்றனர். வெஹிக்கில்கேர் மற்றும் ஆட்டோமொவில்ஆகிய இரண்டும நிறுவனங்களும்வாகன உரிமையாளர்களுக்கு ஒரே இடத்தில் ஆட்டோமொபைல் சேவைகளை– அவர்களின் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் செயலிகளில் ஒரு சில க்ளிக்குகளின்மூலம்வழங்குகின்றன.
வாடிக்கையாளர்களை மையமாகக்கொண்டு வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும்முயற்சிகளுக்கு டோட்டல்எனர்ஜீஸ் நிறுவனத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.TEMIPL மற்றும் இரண்டு O2O அக்ரிகேட்டர் நிறுவனங்களுக்கு இடையேயான இந்தஅறிவார்ந்தகூட்டணியின் மூலம், டோட்டல்எனர்ஜீஸ் நிறுவனத்தின் வாகன லூப்ரிகண்ட்ஸ்2023-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் உள்ள 750 கார் சர்வீஸ்ஒர்க்ஷாப்களின் வாடிக்கையாளர்களை சென்றடையும்.
இந்த கூட்டணிகள் குறித்து பேசிய, TEMIPL நிறுவனத்தின், சேர்மன்& நிர்வாக இயக்குனர், ஒலிவியர் சப்ரீ, அவர்கள், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகமதிப்புடையசேவைகளைவழங்குவதற்காக டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் எங்களதுடோட்டல்எனர்ஜீஸ் நிறுவனம்முன்னணி வகிக்கிறது. ஆட்டோமொவில்மற்றும் வெஹிக்கில்கேர் நிறுவனங்களுடன் இணைந்து, எங்கள் பார்ட்னர் ஒர்க்ஷாப்கள்மூலம், நுகர்வோருக்கு தரமான லூப்ரிகண்ட்களை நேரடியாக வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்தO2O சேனல் எங்கள் பார்ட்னர்ஒர்க்ஷாப்களுக்கு அதிக வாடிக்கையாளர்களை கொண்டுவருமென்றும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான சேவைகளையும் வழங்கும்”, என்று தெரிவித்தார்.
ஆட்டோமொவில் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் (CEO), மிருது மகேந்திர தாஸ், அவர்கள் கூறுகையில், “டோட்டல்எனர்ஜீஸ்நிறுவனத்தின்எதிர்காலO2O நோக்கத்துடன்இணைவதில் ஆட்டோமொவில் உற்சாகமாக உள்ளது. இந்தியாவில் உள்ள விற்பனைக்குப் பிந்தைய சர்வீஸ் சூழல் அமைப்பை அனைவரும் அணுகும் வகையில் ஜனநாயகப்படுத்த எங்களதுஆட்டோமொவில் குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.அத்துடன்அதன் நெட்வொர்கில் வொர்க்ஷாப்களை இணைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றோம். டோட்டல்எனர்ஜீஸ் நிறுவனத்துடன்கூட்டணியில் இணைவது, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமானசேவைகளை வழங்குவதற்கான சரியான வழியை எங்களுக்கு அளிக்கும்,” என்று கூறினார்.
வெஹிக்கில்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் (CEO) அரவிந்த் வெர்மா, அவர்கள், “டோட்டல்எனர்ஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் வெஹிக்கில்கேர் மிக்க மகிழ்ச்சியடைகிறது; மேலும்,வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டுசெயல்படும் எங்களது ஒருமித்த நோக்கம், எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பானசேவைகளை வழங்குவதில் எங்களை மேலும் வலுப்படுத்துமெனநாங்கள் நம்புகிறோம். இந்த புதிய கூட்டணியானது, எங்கள் வாடிக்கையாளர்களின் வாகன ஆயுட்காலம் முழுவதற்குமான சேவைகளை -திறன்மிக்க வகையில் தொழில்நுட்ப வசதியுடன், மேம்படுத்தப்பட்டஎங்களதுதரமான தயாரிப்புகளின் மூலம் தனித்துவமான டிஜிட்டல் அனுபவத்துடன்வழங்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்”, என்று கூறினார்.
இந்தியா முழுவதும் TEMIPL நிறுவனத்தின் சேவைகள் மற்றும் தயாரிப்புகளின் வகைகள் அதிகரித்து வருகின்றன, அவற்றில் – வாகனங்கள் மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்கான லூப்ரிகண்ட்ஸ், வீடு மற்றும் வர்த்தகப் பயன்பாடுகளுக்கான LPG கேஸ், மற்றும் சிறப்பு பயன்பாடுகளுக்கானதயாரிப்புகளும்உள்ளடங்கும். இந்நிறுவனம்வழங்கும் புதிய சேவைகளில் கார் பராமரிப்பு தயாரிப்புகள் மற்றும் வாஷ் சேவைகளும் உள்ளன.