சென்னை வி ஆர் சென்னை மாலில் துளிர் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!
ரோட்டரி கிளப் ஆப் சென்னை celebrities, ரோட்டரி டிஸ்ட்ரிக் 3232, , பாபுரோ solutions புராஜக்ட் இந்தியா டிரஸ்ட் அமைப்பு மற்றும் சென்னை, டி நகரிலுள்ள ஶ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி, ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னை VR மஹாலில் குழந்தைகளுக்கான பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது… இந்த நிகழ்ச்சியில் திரைப்படப் பாடகர் பிரசன்னா, வானொலி தொகுப்பாளர் தீனா, நடிகர் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்…600க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஷசுன் கல்லூரி ஊடகவியல் துறை மாணவிகள், குழந்தை பாலியல் குற்றங்களை எவ்வாறு தடுப்பதென்று மைமின் மூலம் நடித்து நடனம் ஆடி காண்பித்தனர், மேலும் குழந்தை வன்முறைகளைத் தடுக்க உடனடியாக 1098 என்ற உதவி எண்ணைத் தொடர்புக்கொள்ள வேண்டும் என்றும் இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.