முதல் முறையாக டிவியில் ஒளிபரப்பாகும் தி கிரேட் இந்தியன் கிச்சன், அதுவும் எப்போது? எந்த டிவியில் தெரியுமா?
Chennai May 18,மலையாள திரையுலகில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைபடம் தி கிரேட் இந்தியன் கிச்சன். தமிழிலும் பெயர் மாற்றாமல் ரீமேக் செய்து ஜீ 5 தலத்தில் வெளியான இந்த படமும் இங்கும் நல்ல வெற்றியை பெற்றது.
தமிழில் இந்த படத்தை ஆர் கண்ணன் இயக்க ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படம் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
ஆமாம் வரும் மே 21-ம் தேதி மதியம் 1 மணி முதல் 3 மணி வரை என 2 மணி நேரம் இந்த திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது, ரிப்பீட் என சுழலும் சக்கரமாய் சுழன்று கொண்டேயிருக்கிறார் புதிதாக திருமணமான ஐஸ்வர்யா ராஜேஷ். இதைப் பற்றியெல்லாம் வாத்தியாராக பணியாற்றும் அவரது கணவரான ராகுல் ரவீந்திரனுக்கு எந்தக் கவலையுமில்லை. அவரது கவலையெல்லாம் ‘லைட் ஆஃப் பண்ணவா?’ என்பது தான். இப்படி மிஷினைப் போல இயங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கட்டத்தில் ஆக்ரோஷம் கொண்டு எழுகிறார். பிறகு இதையெல்லாம் எப்படி உடைத்து வெளியேறி வாழ்க்கையில் முன்னேறுகிறார் என்பது தான் படத்தின் திரைக்கதை என்பது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பான கதைக்களம், தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் ஐஸ்வர்யா ராஜேஷின் முடிவு என மக்கள் கொண்டாடிய தி கிரேட் இந்தியன் கிட்சன் திரைப்படத்தை வரும் ஞாயிறு ( மே 21 ) மதியம் ஒரு மணிக்கு உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.