- பொது

புதிய சிகரங்களையும் எட்டும் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்!

வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைப்பதோடு புதிய சிகரங்களையும் எட்டும் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்

வலுவான பிசினஸ் உத்வேகத்தினால் உந்தப்பட்டு Q1FY24-ல் ரூ. 324 கோடி என்ற மிக அதிக PAT (வரிக்கு பிந்தைய இலாபம்), ரூ. 5,284 கோடி கடன்கள் வினியோகம்; முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் மொத்த கடன் அளவு 30% உயர்வு, கடன் தொகை வசூல் / சொத்தின் தரம், வங்கி தொழில்துறையில் மிகச்சிறந்ததாக தொடரும் நிலை; 3.8%-ல் PAR;  GNPA/NNPA முறையே 2.4% / 0.06%, டெபாசிட்கள் முந்தைய ஆண்டைவிட 45% அதிகரிப்பு; ரீடெய்ல் துறைக்கான TD கடன் வழங்கல்^ முந்தைய ஆண்டைவிட 71% உயர்வு

சென்னை: உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் [BSE: 542904; NSE: UJJIVANSFB], 2023 ஜுன் 30 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான அதன் நிதிசார் செயல்பாடு முடிவுகளை இன்று அறிவித்திருக்கிறது

 

Q1FY24-ல் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் – ன் பிசினஸ் செயல்பாட்டின் முக்கிய அம்சங்கள்

  • சொத்துகள்
    • Q1FY24-ல், வழங்கப்பட்ட கடன்கள் அளவு முந்தைய ஆண்டைவிட 22% அதிகரித்து ரூ. 5,284 கோடி என்பதாக பதிவாகியிருக்கிறது
    • வீட்டு வசதிக்கான கடன் மற்றும் FIG துறைக்கான கடன் வழங்கலில் இந்த காலாண்டிலும் தொடர்ந்து வலுவான செயல்பாடு; இந்த இரு பிரிவுகளுக்கும் இதுவரை இல்லாத மிக உயர்ந்த அளவாக முறையே ரூ. 418 கோடி / ரூ. 320 கோடி என்ற அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன
    • இதுவரை வழங்கப்பட்ட மொத்த கடன்களின் அளவு முந்தைய ஆண்டைவிட / முந்தைய காலாண்டை விட முறையே 30% / 5% என அதிகரித்து ரூ. 25,326* கோடி என பதிவாகியிருக்கிறது
  • கடன் வசூல் மற்றும் சொத்தின் தரம்
    • ஜுன்’23-ல் முடிவடைந்த காலாண்டில் ~99% திறனுடன், கடன் வசூலில் தொடர்ந்து சிறப்பான செயல்பாடு; NDA வசூல் தொடர்ந்து ~100% என்ற அளவில் நீடிக்கிறது
    • இடர்வாய்ப்பிலுள்ள கடன்கள், ஜுன்’23 அன்று முடிவடைந்த காலாண்டில் தொடர்ந்து 3.8% என்ற அளவில் நீடிக்கின்றன*
    • மார்ச்’23-ல் முடிவடைந்த காலாண்டில் 2.6% என்ற அளவிலிருந்த GNPA, ஜுன்’23-ல் 2.4% ஆக குறைந்திருக்கிறது; ஜுன்’23 அன்று, NNPA அளவானது 0.06% என்ற மிக மிக குறைந்த அளவிலேயே தொடர்கிறது
    • Q1FY24-ல் மொத்தத்தில் ரூ.60 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது; வாரா, ஐய கடன்களுக்கான கவரேஜ் விகிதம் 2023 ஜுன் அன்று 97.6%# ஆக இருக்கிறது
    • Total of ₹ 60 crore written-off in Q1FY24; Provision coverage ratio as on Jun’23 is 97.6%#
  • டெபாசிட்கள் (வைப்புத்தொகைகள்)
    • ஜுன்’23-ல் முடிவடைந்த காலாண்டு டெபாசிட்கள் ரூ.26,660 கோடி என்பதை எட்டியிருக்கிறது. முந்தைய ஆண்டு / முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில் இது முறையே 45% / 4% என உயர்ந்திருக்கிறது
    • ரீடெய்ல் கடன்கள் முந்தைய ஆண்டு / முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில் முறையே 71% / 8% என வளர்ச்சி கண்டிருக்கின்றன
    • நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு தொகைகள் 27% வளர்ச்சி கண்டிருக்கின்றன. இதன் காரணமாக ஜுன்’23-ல் CASA விகிதம் 24.6% என இருந்தது
    • ஆரோக்கியமான ரீடெய்ல் கடப்பாடுள்ள வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்
  • நிதிசார் முடிவுகள்
    • Q1FY24-ல் நிகர வட்டி வருவாய் முந்தைய ஆண்டைவிட 32% அதிகரித்து ரூ. 793 கோடியாக பதிவாகியிருக்கிறது; Q1FY24-க்கான நிகர வட்டி இலாப வரம்பு 9.2% என இருக்கிறது
    • வருவாய்க்கான செலவு விகிதம், Q1FY24-ல் 52.8% என பதிவாகியிருக்கிறது. இதுவே Q1FY23-ல் 58.5% ஆக இருந்தது
    • Q1FY24 PPoP, முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 52% உயர்ந்து ரூ.458 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது; வரிக்கு பிந்தைய இலாபம் PAT முந்தைய ஆண்டைவிட 60% உயர்ந்து ரூ. 324 கோடி என பதிவாகியிருக்கிறது
  • மூலதனம் மற்றும் எளிதில் பணமாக்கும் திறனளவு (Liquidity)
    • மூலதன போதுமான அளவு விகிதம் 26.7% மற்றும் அடுக்கு-1 மூலதனம் 23.7% எனவும் இருக்கின்றன
    • ஜுன்’23-ல் இடைக்கால LCR 189% என்ற அளவில் இருக்கிறது

 

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்-ன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. இட்டிரா டேவிஸ் கூறியதாவது: “நிதியாண்டு 24 மிக சிறப்பானதாகவே தொடங்கியிருக்கிறது. மிக அதிக இலாபத்தை ஈட்டிய மற்றொரு காலாண்டாக இது நிறைவடைந்திருக்கிறது. நிதியாண்டு 23-ல் கட்டமைக்கப்பட்ட வலுவான தளத்தின் அடிப்படையில் இவ்வளர்ச்சி எட்டப்பட்டிருக்கிறது. பொதுவாகவே முதல் காலாண்டு பலவீனமாக இருக்கும் என்ற போதிலும்கூட எமது கடன் வழங்கல் செயல்பாடு வலுவானதாகவே இருந்திருப்பதால் எமது கடன் புத்தகத்தின் மொத்தத்தொகை ரூ. 25,000 கோடி என்ற மைல்கல்லை கடந்திருக்கிறது. பாதுகாக்கப்பட்ட சொத்துக்கள் மத்தியில், கட்டுபடியாகக்கூடிய விலையிலான வீட்டுவசதி பிரிவும் மற்றும் FIG துறையும் தொடர்ந்து வலுவான வளர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றன. ஆண்டின் பிற்பகுதியில் பிற திட்டங்களும், பிரிவுகளும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தத் தொடங்கும். இக்காலாண்டின்போது தேவைக்கும் அதிகமாக இருந்த லிக்விடிட்டியை நாங்கள் தெளிவான திட்டத்துடன் குறைத்தோம்.

எங்களது நிகர வருவாய் லாப வரம்பை இது குறைக்கும் விளைவை ஏற்படுத்தியதே இதற்கு காரணம்.  ரீடெய்ல் துறை மீது சிறப்பு கவனம் செலுத்தியதன் மூலம் டெபாசிட்கள், முந்தைய ஆண்டு / முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், முறையே 45% மற்றும் 4% என அதிகரித்திருந்தது.  வலுவான கடன் வசூல் ஆதரவின் காரணமாக, இக்காலாண்டின்போது எங்களது கடன் செலவு குறைவாகவே இருந்தது.  வாராக்கடன்களை வசூல் செய்யும் பணியானது இயல்பு நிலையை நோக்கி எங்களை அழைத்துச் சென்றிருக்கிறது.  மோசமான கடன்களை வசூல் செய்யும் செயல்பாடு தொடர்ந்து வலுவாக இருந்து வருகிறது.  இந்த நிதியாண்டிலும் இது கணிசமான அளவு இருக்கும் மற்றும் நிதியாண்டு 23 – ஐ விட குறைவாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இக்காலாண்டின்போது 32 புதிய கிளைகளை தொடங்கி எமது செயலிருப்பை வலுப்படுத்தியிருக்கும் நாங்கள் ஜுலை 23-மார்ச் 24 காலகட்டத்தில் இன்னும் ~70 அதிக கிளைகளை தொடங்க திட்டமிட்டிருக்கிறோம்.  எங்களது vvv* அடிப்படையிலான மொபைல் பேங்கிங் செயலியான “ஹலோ உஜ்ஜீவன்” அதிக தொழில்நுட்ப திறனற்ற வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு தொடங்கப்பட்டது.  இதுவரை 2.7 இலட்சம் வாடிக்கையாளர்களது பதிவிறக்கங்களைப் பெற்று இது தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  வங்கி பரிவர்த்தனைகளை செய்ய இச்செயலியை வாடிக்கையாளர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.  பிசினஸ் மட்டுமின்றி, சமுதாயத்திற்கும் பல நீண்டகால பலன்களை ‘ஹலோ உஜ்ஜீவன்’ நிச்சயம் வழங்குமென்று நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

தொடர்ந்து கடந்த 6 காலாண்டுகளாக கணிசமான முன்னேற்றத்துடன் தொடர்ந்து நிலையான லாபத்தை எமது வங்கி பெற்று வருகிறது.  வலுவான நிதி செயல்பாடு மற்றும் அதிகரித்து வரும் பிசினஸ் உத்வேகம் ஆகியவற்றினால் பொதுமக்களுக்கான சந்தை வங்கியாக எமது நற்பெயரை மேலும் வலுவாக நிலைநாட்டுவதற்கு தேசிய அளவிலான ஒரு விளம்பர பரப்புரை திட்டத்தை நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.  அனைத்துப் பிரிவுகளிலும் பிசினஸ் சிறப்பாக செயல்படுவதால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாங்கள் பகிர்ந்து கொண்ட நிதியாண்டு 24 வழிகாட்டலை மீண்டும் உத்தரவாதமாக வழங்க இது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

எமது புரமோட்டர் நிறுவனத்துடன் வங்கியை இணைப்பது தொடர்பாக, எமது விண்ணப்பத்தின் மீதான விசாரணை செயல்முறை, NCLT ஆல் 2023 ஜுன் 28 அன்று நிறைவடைந்திருக்கிறது.  NCLT பொருத்தமானது என்று கருதுகிறவாறு பங்குதாரர்களின் கூட்டங்களை திட்டமிட்டு நடத்துவது குறித்த அறிவுறுத்தல்கள் மற்றும் பிற ஆலோசனைகளை உள்ளடக்கிய ஆணை NCLT -யிடமிருந்து விரைவில் கிடைக்கும் என்று நாங்கள் நேர்மறை நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம்.”

About expressuser

Read All Posts By expressuser