
டார்க் பேண்டசி பிஸ்கெட்டின் புதிய விளம்பர தூதராக
நடிகர் ஷாருக்கானை அறிவித்தது சன்ஃபீஸ்ட் நிறுவனம்
“ஹர் தில் கி பேண்டசி” என்னும் புதிய தொலைக்காட்சி விளம்பரத்தையும் வெளியிடுகிறது
TVC Link: https://youtu.be/RrC44QNBf2g
சென்னை: ஐடிசியின் நிறுவனத்தின் சன்ஃபீஸ்ட் டார்க் பேண்டசி பிஸ்கெட்டின், புதிய விளம்பர தூதராக ‘கிங் ஆப் பேண்டசி’ என்று நடிகர் ஷாருக்கானை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அவருடன் அற்புதமான இந்த பயணத்தை தொடர இருப்பதாகவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் சன்ஃபீஸ்ட் டார்க் பேண்டசி பிராண்ட் அதன் நுகர்வோருடன் அற்புதமான தொடர்பை ஏற்படுத்தும் விதமாக புதிய தொலைக்காட்சி விளம்பரமான ‘சன்ஃபீஸ்ட் டார்க் பேண்டசி – ஒவ்வொரு மனதின் பேண்டசி’ என்னும் விளம்பரத்தையும் வெளியிட இருக்கிறது. இதில் உள்ள புதுமையான கருத்து நம் அன்றாட வாழ்வில் நமக்கு ஏற்படும் கற்பனையை பற்றி விவரிக்கிறது. இந்த புதிய கண்ணோட்டத்துடன், பிராண்ட் பல்வேறு நுகர்வோர் பிரிவுகளை சென்றடையும் நடவடிக்கையிலும் இறங்கி உள்ளது. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கற்பனையின் தனிப்பட்ட எண்ணங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. அனைவராலும் மிகவும் விரும்பப்படும் நடிகர் ஷாரூக் கான், உலகம் முழுவதும் உள்ள அவரது எண்ணற்ற ரசிகர்களின் கற்பனையை உண்மையிலேயே இதில் பிரதிபலிக்கிறார்.
‘கிங் ஆப் பாலிவுட்’, ‘கிங் ஆப் பிஸ்கெட்’ உடன் இணைவதால், இது இந்த பிராண்டிற்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது. மேலும் சன்ஃபீஸ்ட் டார்க் பேண்டசி, ‘ஒவ்வொரு மனதின் பேண்டசி’யின் பயணத்தைத் தொடங்குகிறது, மேலும் ஷாருக் கானின் வசீகரம் மற்றும் பிஸ்கெட்டுகளின் சுவை இன்பத்தால் வழிநடத்தப்படும் ஒரு அசாதாரண சாகசத்தில் பங்கேற்க வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் அழைக்கிறது. இந்த புதிய விளம்பரம் இந்த பிராண்டை மறுவரையறை செய்வது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள தனிநபர்களின் இதயங்களில் கற்பனையின் கருத்தை பிரதிபலிக்கும்.
இது குறித்து ஐடிசி உணவு பிரிவின் பிஸ்கட் & கேக் பிரிவு தலைமை செயல் அதிகாரி அலி ஹாரிஸ் ஷெரி கூறுகையில், சன்ஃபீஸ்ட் டார்க் பேண்டசியின் முகமாக பாலிவுட்டின் கிங் ஷாருக் கான் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவரது வசீகர உருவம், அனைவரையும் கவரும் புன்னகை மற்றும் அவரது ஆளுமை ஆகியவை எங்கள் பிராண்டை மேலும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். அவருடன் இணைந்திருப்பதன் மூலம் எங்கள் பிராண்டின் நிலைப்பாட்டை மேலும் உயர்த்தி, நுகர்வோருடனான தொடர்பை மேலும் வலுப்படுத்துவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கற்பனைகளைக் கொண்டாடும் ஒரு அசாதாரண பயணத்திற்கு மக்களை அழைத்துச் செல்வதை நாங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம், இது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்திருக்கும் நடிகர் ஷாருக் கான், சன்ஃபீஸ்ட் டார்க் பேண்டசியுடன் கைகோர்ப்பது குறித்து தனது மகிழ்ச்சி வெளிப்படுத்தி பேசுகையில், நாம் அனைவரும் மிகவும் விரும்பும் சன்ஃபீஸ்ட் டார்க் பேண்டசி உடன் கைகோர்ப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ‘ஒவ்வொரு மனதின் பேண்டசி’ என்ற இந்த பிராண்டின் விளம்பரமானது என்னுள் ஆழமாக எதிரொலிக்கிறது, ஏனெனில் இது அசாதாரணமானவற்றைக் கற்பனை செய்யவும் மற்றும் வாழவும் மக்களை ஊக்குவிக்கிறது; கற்பனைகளை நிறைவேற்றும் இந்த அற்புதமான மற்றும் தனித்துவமான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன். கற்பனைகளை நிறைவேற்றும் இந்த அற்புதமான மற்றும் தனித்துவமான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்தார்.
நடிகர் ஷாருக் கான் மற்றும் சன்ஃபீஸ்ட் டார்க் பேண்டசி உடன் இணைந்து இருப்பது குறித்து இந்த விளம்பரத்தை எடுத்த எப்சிபி உல்கா விளம்பர நிறுவனத்தின் தேசிய கிரியேட்டிவ் இயக்குனர் ரோமி நாயர் கூறுகையில், எல்லோரும் கற்பனை செய்கிறார்கள். எனவே இதை மையமாகக் கொண்டு அந்த எண்ணத்தில் இருந்தது பிறந்ததுதான் இந்த ‘ஒவ்வொரு மனதின் பேண்டசி’. இந்த விளம்பரம் அனைவரையும் அவர்களின் கற்பனைகளின் உச்ச எல்லைக்கே கொண்டு செல்லும். இந்த கருத்தை உயிர்ப்பிக்க, இந்தியாவின் பேன்டசி நடிகரான ஷாருக் கானைவிட சிறந்தவர் யார் இருக்க முடியும். இந்த விளம்பரத்தின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் இதயங்களிலும் அவர் இடம்பிடிப்பார் என்று தெரிவித்தார்.
எப்சிபி உல்கா நிறுவனத்தால் எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் படம், ஒரு சலூனின் காத்திருப்புப் பகுதியில் இருந்து தொடங்குகிறது, அங்கு ஒரு பெண் தன் முறைக்காக ஆவலுடன் காத்திருக்கிறாள். நேரத்தைக் தள்ளிக் கொண்டிரும் அவள் அப்போது சாக்கோ பில்ஸ் பிஸ்கெட்டை ரசித்து சாப்பிடுகிறாள், அது அவளை உடனடியாக ஒரு கற்பனை உலகிற்கு அழைத்துச் செல்கிறது, அங்கு பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கான் மாயாஜாலமாக தோன்றி, அவளது தலைமுடியை ஸ்டைலிங் செய்து, மேக்அப் போட்டு, நகங்களைப் பராமரித்து விடுவது போல தோன்றுகிறது. இந்த நிலையில் புன்முறுவலுடன் நினைவு திரும்பிய அவளுக்கு, இவை அனைத்தும் தன் கற்பனையே என்று உணர்ந்து, அருகில் உள்ள ஒரு பெண்ணுடன் தனது பிஸ்கெட்டை பகிர்ந்து கொள்கிறாள். பின்னர் “சாக்லேட் உடன் கூடிய மொறுமொறுப்பான பிஸ்கெட்” என்று ஷாருக் கான் கூற ‘ஒவ்வொரு மனதின் பேண்டசி’ என்பதுடன் இந்த விளம்பரம் முடிவடைகிறது.
அந்த விளம்பரத்திற்கான லிங்க் https://youtu.be/RrC44QNBf2g இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தை இந்தியா முழுவதும் 8 வெவ்வேறு மொழிகளில் இந்நிறுவனம் வெளியிட உள்ளது. மேலும் இது டிஜிட்டல், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் முழுவதும் ஒளிபரப்பப்படும். இந்த புதிய விளம்பரத்தின் மூலம் சன்ஃபீஸ்ட் டார்க் பேண்டசி தனது வாடிக்கையாளர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும் இடத்தைப் பிடிக்கத் தயாராக உள்ளது.
இதற்கான டீசர் சமீபத்தில் இந்தி, தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் சமூக ஊடக தளங்களில் வெளியிடப்பட்டது. இந்த டீசர் அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு, சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





