ரியல்மி நிறுவனமானது, அதன் ஸ்மார்ட்போன் மற்றும் AIOT போர்ட்ஃபோலியோவில் புதிய தயாரிப்புகளான ரியல்மி 11 சீரிஸ் 5ஜி மற்றும் ரியல்மி பட்ஸ் ஏர் 5 சீரிஸ் ஆகிய இரண்டையும் அறிமுகப்படுத்துகிறது. இதன் ஆரம்ப விலை முறையே ரூ.17499 மற்றும் ரூ.3699 ஆகும்
சென்னை, ஆகஸ்ட் 26, 2023: மிகவும் நம்பகமான ஸ்மார்ட்போன் சேவை வழங்குநரான ரியல்மி இன்று நான்கு புரட்சிகரமான தயாரிப்புகளை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது, ரியல்மி 11 5ஜி, ரியல்மி 11x 5ஜி, ரியல்மி பட்ஸ் ஏர் 5 மற்றும் ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ ஆகியவை அதன் “ஹீரோ” எண் வரிசை மற்றும் ஏஐஓடி செக்மெண்டில் சமீபத்திய கூடுதல் சேர்க்கையாகும். அதிநவீன அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்பின் மூலம் இந்த அற்புதமான சாதனங்களில் எவ்வித குறைகளும் இல்லை என்பதைக் குறிக்கின்றன, மேலும் அவை முன்னெப்போதும் இல்லாத வகையில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ரியல்மி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தயாரிப்பு புதுமைகளில் ரியல்மி எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது. இது பயனர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பயனர் அனுபவத்தை புரட்சிகரமாக்கும் அம்சங்களை வழங்குகிறது. ரியல்மி 11 சீரிஸ் 5ஜி மற்றும் ரியல்மி பட்ஸ் ஏர் 5 சீரிஸை எங்களின் பல்வேறு வகையான ஏஐஓடி வரிசைகளில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது புதுமை மற்றும் சிறப்பம்சத்திற்கான எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். நான்கு புரட்சிகரமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட்போன் மற்றும் ஏஐஓடி துறையில் புதிய அளவுகோல்களை அமைக்க நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம். இந்த சாதனங்களில், லீப்-ஃபார்வர்டு அம்சங்கள் மற்றும் புதுமையான வடிவமைப்பு ஆகிய இரண்டும் சரியான இணைப்பாகும், இது உங்கள் அனுபவத்தை புதிய உயரத்திற்கு உயர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, எங்களின் 5 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், எங்கள் பிராண்ட் மையமாக “லீப் அப்” மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தயாரிப்பு மூலோபாயமாக நோ லீப் நோ லாஞ்ச் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில், உலகளவில் இளைஞர்களுக்கு விருப்பமான தொழில்நுட்ப பிராண்டாக மாறுவதையும், இமேஜிங் தொழில்நுட்பம், செயல்திறன் மற்றும் தொழில்துறை வடிவமைப்பு ஆகிய துறைகளில் கணிசமான முன்னேற்றங்களைச் செய்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ரியல்மி உடனான இந்த அற்புதமான பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கு நன்றி.
இந்த கூட்டணி குறித்து பேசிய ஏ.ஐ.எம்.ஆர்.ஏ (அகில இந்திய மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம்) நிறுவனர் மற்றும் தலைவர் கைலாஷ் லக்யானி கூறுகையில், “வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவற்றைப் பூர்த்தி செய்யும் தொழில்நுட்ப முன்னோடியாக விளங்கும் ரியல்மி நிறுவனத்துடன் கூட்டு சேர்வதில் ஏ.ஐ.எம்.ஆர்.ஏ உண்மையிலேயே பெருமை கொள்கிறது” என்றார். ரியல்மி மற்றும் ஏ.ஐ.எம்.ஆர்.ஏ ஆகியவை மொபைல் சில்லறை சுற்றுச்சூழல் அமைப்பை செயல்படுத்துவதற்கும் எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்குவதற்கும் குறிக்கோளைப் பகிர்ந்து கொள்கின்றன. தொழில்துறையில் ஒரு முன்னுதாரணமாக, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 11 5ஜி சீரிஸ் ஒரு விதிவிலக்கான ஸ்மார்ட்போனாகும், இது செக்மெண்டின் சிறந்த 108 மெகாபிக்சல் மெயின் கேமரா போன்ற சக்தி நிரம்பிய அம்சங்களை கொண்டுள்ளது, இது செக்மெண்டிலேயே மிகப்பெரிய 3x இன்-சென்சார் ஜூமை வழங்குகிறது. இது செக்மெண்டிலேயே வேகமான 67 வாட் சூப்பர்வோக் சார்ஜிங் சொலுயூஷன் உடன் ஒரு பெரிய 5000 எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
அவர் மேலும் கூறுகையில், “5ஜி-ஐ அனைவருக்கும் சமமாக்குவதற்கும், அதிநவீன தொழில்நுட்பத்தை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கும் ரியல்மி நிறுவனத்தின் லட்சியத்தை ஏ.ஐ.எம்.ஆர்.ஏ பகிர்ந்து கொள்கிறது, இது ஒரு அர்த்தமுள்ள மற்றும் நோக்கமுள்ள உறவாக அமைகிறது. ரியல்மி 11 சீரிஸின் ஆரம்ப அணுகல் போன்ற சலுகைகளை எங்கள் நுகர்வோருக்கு வழங்க இந்த கூட்டணி எங்களுக்கு உதவும். நாங்கள் இந்த பயணத்தைத் தொடங்கும்போது, 11 5ஜி சீரீஸ் தொழில்துறையில் சிறந்த அனுபவத்தை வழங்கும் ஸ்மார்ட்போனாக ஒரு மைல்கல்லை அமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

