2023ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரங்களை ஐ.எம்.டி.பி அறிவித்துள்ளது
ஷாருக் கான் அவர்கள்தான் 2023ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரம் ஆவார், அவருக்கு அடுத்த நிலையில் அலியா பட் உள்ளார்
இந்த தரமதிப்பீடுகள் யாவும் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான ஐ.எம்.டி.பி வாடிக்கையாளர்கள் எத்தனை முறை இவர்களது பக்கங்களைப் பார்த்தார்கள் என்பதன் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது
Chennai-நவம்பர் 22, 2023—ஐ.எம்.டி.பி, திரைப்படங்கள், தொலைக்காட்சி, மற்றும் பிரபலங்கள் ஆகியவை சம்மந்தமான தகவல்களுக்கு மிகவும் பிரபலமானதும் அதிகாரப்பூர்வமானதுமான இந்நிறுவனம், இன்று 2023ஆம் ஆணடிற்கான மிகவும் பிரபலமான 10 இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பிரத்யேகப் பட்டியல் உலகெங்கிலும் இருந்து ஐ.எம்.டி.பி இணையத்தைப் பார்க்கும் 200 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பார்வையாளர்கள் பார்த்த பக்கங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும். இந்த ஆண்டு இரண்டு வெற்றிப் படங்களில் நடித்து (பத்தான் மற்றும் ஜவான்), உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே ஈடு இணையற்ற உற்சாகத்தை ஏற்படுத்திய ஷாருக் கான் அவர்கள் ஐ.எம்.டி.பியின் 2023ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் நம்பர் 1 பிரபலமாவார்.
“இரண்டு வெற்றிப் படங்களை வெள்ளித் திரைக்கு வழங்கியதன் மூலமாக மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ள ஷாருக் கான் முதல், சர்வதேச திரில்லர் திரைப்படமான ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தில் நடித்துள்ள அலியா பட் வரை, ஐ.எம்.டி.பியின் 2023ஆம் ஆண்டின் மிகவும் புகழ்பெற்ற இந்திய நட்சத்திரங்களின் பட்டியல், இந்த ஆண்டு ஐ.எம்.டி.பியின் உலக ரசிகர்களிடையே எந்தெந்த இந்திய நட்சத்திரங்கள் அதிகமான உற்சாகத்தையும் ஈடுபாட்டையும் உருவாக்கி உள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறது,” என்று ஐ.எம்.டி.பி இந்தியாவின் தலைவர் யாமினி படோடியா தெரிவித்தார். “எங்களது பிரத்யேகமான ஆண்டு-இறுதியில் வெளியிடப்படும் தலைசிறந்த 10இன் பட்டியல், தாங்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதையும், தங்களுக்கு பிடித்தமான நட்சத்திரங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் ஐ.எம்.டி.பியை சார்ந்துள்ள உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்த பக்கங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது,” என்றார்.
தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அலியா பட் (நம்பர் 2 நிலையில் உள்ளவர்) குறிப்பிடும் போது: “ஐ.எம்.டி.பி, ரசிகர்களின் விருப்பத்தின் உண்மையான பிரதிநிதித்துவமாக உள்ளது. அவர்கள்தான் உண்மையான அரசர்கள் மற்றும் அரசிகள் என்று நான் நம்புகிறேன், அவர்களை விட பெரிய விஷயம் எதுவுமே இல்லை. இப்போது நான் அடைந்துள்ள இடத்திற்கு என்னைக் கொண்டு வந்த ரசிகர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு தொடர்ந்து பொழுதுபோக்கினை வழங்குவேன் என்று நான் நம்பும் அதேவேளை எனக்குள் அன்பையும் நன்றி உணர்வையும் தவிர வேறு எதுவுமில்லை. நான் தொடர்ந்து இன்னும் பல உற்சாகம் நிறைந்த கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை திரையில் வழங்குவதற்கு கடுமையாக உழைப்பேன் என்று உறுதி கூறுகிறேன்,” என்றார்.
வாமிகா காபி (நம்பர் 4 இடம் பெற்றவர்), முதன் முறையாக ஐ.எம்.டி.பியின் தலைசிறந்த 10 நபர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறித்து பேசும்போது, “இப்போதுதான் முதன்முறையாக ஐ.எம்.டி.பியின் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்! உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் நாடித் துடிப்பாக ஐ.எம்.டி.பி திகழ்வதால் இது எனக்கு மிகவும் சிறப்புமிக்க விஷயமாகும். அவர் நடித்துள்ள ஒற்றர் பற்றிய திரில்லரான கூஃபியா முதல் விக்ரமாதித்யா மோத்வானியின் காலம் கடந்த சிறந்த படைப்பான ஜூபிலீ, மற்றும் மனம் கவர்ந்த இணையத் தொடரான மாடர்ன் லவ் சென்னை, மற்றும் பஞ்சாபி திரைப்படமான காலி ஜோட்டா, என இப்படி இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான பல்வேறு மொழிப் படைப்புகளில் நான் தொடர்ந்து பணியாற்றியுள்ளேன். இதனை எனது ரசிகர்கள் அங்கீகரித்து பாராட்டியுள்ளனர் என்பதை அறியும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இதே அர்ப்பணிப்புடன் வரவிருக்கும் படைப்புகளிலும் நடிக்க விரும்புகிறேன் மேலும் என்மீது காட்டப்படும் அன்பிற்கு பிரதியுபகாரம் செய்ய விரும்புகிறேன்,” என்றார்.
2023ஆம் ஆண்டிற்கான ஐ.எம்.டி.பியின் இந்தியாவின் 10 தலைசிறந்த நட்சத்திரங்கள்*
1. ஷாருக் கான்
2. அலியா பட்
3. தீபிகா படுகோன்
4. வாமிக்கா காபி
5. நயன்தாரா
6. தமன்னா பாட்டியா
7. கரீனா கபூர் கான்
8. சோபித்தா துலிப்பாலா
9. அக்ஷய் குமார்
10. விஜய் சேதுபதி
*ஐ.எம்.டி.பியின் 2023 ஆண்டுக்கான தலைசிறந்த 10 மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரங்களின் பட்டியல் 2023ஆம் ஆண்டில் ஐ.எம்.டி.பியின் வாராந்திர தரப்பட்டியலில் உயர்ந்த இடத்தைத் தொடர்ந்து பெற்ற நட்சத்திரங்களைக் கொண்டதாகும். இந்த தரமதிப்பீடுகள் யாவும் உலகெங்கிலும் இருந்து ஐ.எம்.டிபியை பார்க்கின்ற 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் உண்மையில் பார்த்த பக்கங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரங்கள் குறித்த கூடுதல் தகவல்:
• அலியா பட்டி தொடர்ச்சியாக இந்த நம்பர் 2 இடத்தைப் பிடித்துள்ளார், அவர் 2023 இல் இரண்டு மிகப்பெரிய திரைப்படங்களான ராக்கி அவுர் ராணி கீ பிரேம் கஹானி மற்றும் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் ஆகியவற்றில் நடித்துள்ளார். இந்த ஆண்டு அவர் தனது மெட் காலாவில் முதன்முறையாக பங்கேற்றுள்ளார், அதேவேளை 2022இல் இவரது திரைப்படமான RRR ஒரு ஆஸ்கர் விருதையும் ஒரு தலைசிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதையும் பெற்றுள்ளது.
• நயன்தாரா (நம்பர் 5) ஹிந்தி மொழியில் தனது முதல் திரைப்படமான ஜவானில் ஷாருக்கானுடன் (நம்பர் 1) நடித்துள்ளார், அதேவேளை, தீப்பிகா படுகோன் (நம்பர் 3) அவர்களும் பத்தான் மற்றும் ஜவான் ஆகியவற்றில் நடித்துள்ளார். படுகோன் அவர்கள் தனது கணவர் ரண்வீர் சிங் அவர்களுடன் உரையாடல் நிகழ்ச்சியான காஃபி வித் கரன் இல் பங்குகொண்டது தலைப்புச் செய்தியானது.
• தமன்னா பாட்டியா (நம்பர் 6) பல்வேறு பிராந்திங்கள், மொழிகள், மற்றும் தளங்களில் பணியாற்றியுள்ளார். அவர் இணையத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2, ஜீ கார்டா, மற்றும் ஆக்ரி சச், ஆகியவற்றிலும் திரையரங்கில் வெளியான போலா சங்கர் படத்திலும் மேலும் ஜெயிலர் படத்தில் கௌரவத் தோற்றத்திலும் நடித்துள்ளார்.
• கரீனா கபூர் கான் (நம்பர் 7) நடித்த ஜானே ஜான் , படம் முதன்முறையாக ஓ.டி.டி.யில் வெளிவந்துள்ளது, மேலும் அவரது திரைப்படமான தி பக்கிங்ஹம் மர்டர்ஸ் உலகில் முதன்முறையாக பி.எஃப்.ஐ லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
• விஜய் சேதுபதி (நம்பர் 10) இந்த ஆண்டு முதன்முறையாக இரண்டு விஷயங்களைச் செய்துள்ளார்—அவரது முதல் ஹிந்தி திரைப்படம் ஜவான், மற்றும் அவரது முதல் இந்திய இணையத் தொடர் ஃபார்ஸி.
இந்த ஆண்டின் ஐ.எம்.டி.பியின் மிகவும் புகழ்பெற்ற இந்திய நட்சத்திரங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, இந்த வீடியோவைப் பாருங்கள்: https://www.imdb.com/video/vi4130326297/ மேலும் முழு பட்டியலை இங்கே பாருங்கள்: https://www.imdb.com/list/ls526076995/