லூபின் டிஜிட்டல் ஹெல்த், அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி உடன் இணைந்து இந்தியாவில் இதயநோய் மருத்துவர்களுக்கான டிஜிட்டல் தெரபியூட்டிக்ஸ் சான்றிதழை அறிமுகப்படுத்துகிறது.
Chennai, February 2, 2024: லூபின் டிஜிட்டல் ஹெல்த், இந்தியாவின் முதல் ஆதார அடிப்படையிலான இதயவியல் டிஜிட்டல் தெரபியூட்டிக்ஸ் (டிடிஎக்ஸ்) தளம் மற்றும் இதயவியல் பயிற்சியில் உலகளாவிய அறிவியல் தலைவரான அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி (ஏசிசி) ஆகியவை இதயநோய் மருத்துவர்களுக்கான உலகின் முதல் டிஜிட்டல் தெரபியூட்டிக்ஸ் சான்றிதழ் பற்றிய அறிமுகத்தை அறிவித்துள்ளன. கொல்கத்தாவில் கார்டியாலஜி சொசைட்டி ஆஃப் இந்தியாவின் (சிஎஸ்ஐ) பிளாட்டினம் விழாக் கொண்டாட்ட நிகழ்வின்போது இது வெளியிடப்பட்டது.
ஏசிசி-இன் முன்னாள் தலைவரான டாக்டர். எட்வர்ட் ஃப்ரை, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இதய நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவதில் இந்த ஒத்துழைப்பின் உலகளாவிய முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இதயவியலில் அதிநவீன டிஜிட்டல் தீர்வுகளை ஒருங்கிணைப்பதை ஊக்குவிக்கும் முயற்சியில், தொலைதூர ரிமோட் கார்டியாக் ரிஹாப் மற்றும் டிஜிட்டல் ஹார்ட் ஃபெயிலியர் கிளினிக் தீர்வுகளை பின்பற்றும் இதயநோய் மருத்துவர்களுக்கு ஏசிசி ‘டிஜிட்டல் முன்னோடி’ சான்றிதழ்களை வழங்கும். நோயாளிகளின் வீடுகளின் வசதியிலிருந்து, உயர்மட்ட பராமரிப்பை உறுதி செய்வதிலும் விளைவுகளை மேம்படுத்துவதிலும் இந்த ஒத்துழைப்பு முக்கியமானது.
இந்த முயற்சி குறித்து தமது உற்சாகத்தை வெளிப்படுத்திய, இந்தியப் பிராந்திய ஃபார்முலேஷன்ஸ் தலைவர் ராஜீவ் சிபல் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார், “எங்கள் நோயாளிகளை மையமாகக் கொண்ட தீர்வுகளுடன் இதயநோய் மருத்துவர்களை ஆதரிப்பதில் லூபின் பெருமிதம் கொள்கிறது. டிடிஎக்ஸ் ஸ்பேஸில் ஒரு முன்னோடியாக, இந்த முக்கியமான ஏசிசி சான்றிதழை இதயநோய் மருத்துவர்களுக்குக் கொண்டு வருவதிலும், டிஜிட்டல் சிகிச்சை முறைகளில் புதிய தரநிலைகளை அமைப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்..”
லூபின் டிஜிட்டல் ஹெல்த் தலைமை நிர்வாக அதிகாரி சித்தார்த் சீனிவாசன் அவர்கள் மேலும் கூறியதாவது, “அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி உடனான இந்த கூட்டு, தொலைதூர இதய மறுவாழ்வில் ஒரு மாற்றத்தக்க வளர்ச்சிக்கட்டத்தைக் குறிக்கிறது. அதிகரித்து வரும் டாக்டர்கள் மற்றும் இதய நிறுவனங்கள் ரிமோட் கார்டியாக் ரீஹாப் இதய சிகிச்சையை இன்னும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான அடிப்படைத் தூணாக ஒப்புக்கொள்கின்றன. இந்த முன்முயற்சியானது, தொழில்நுட்பம் சார்ந்த இதயத்தின் மறுவாழ்வை நன்கு புரிந்துகொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உடல்நலப் பராமரிப்பு சகோதரத்துவத்தை மேலும் ஊக்குவிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”
ஏசிசி தலைமை இன்னொவேஷன் அதிகாரி, அமி பட், எம்டி, அவர்கள் இதன் பரந்த தாக்கத்தை எடுத்துரைத்தார், “லூபின் டிஜிட்டல் ஹெல்த் லைஃப் தளத்தின் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் தெரபியூட்டிக்ஸ் ஏற்பதற்கு முன்னோடியாக இருக்கும் இதயநோய் மருத்துவர்களை அங்கீகரிப்பதில் ஏசிசி பெருமிதம் கொள்கிறது. உலகளவில் நோயாளிகள் விளைவுகளை மேம்படுத்தும் டிஜிட்டல் தீர்வுகளை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இந்த அங்கீகாரம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.”
லூபின் டிஜிட்டல் ஹெல்த் உருவாக்கிய லைஃப், இந்தியாவின் முதல் மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட ரிமோட் கார்டியாக் மறுவாழ்வுத் திட்டமாகும். இதய மறுவாழ்வின் குறைவான உபயோகத்தை நிவர்த்தி செய்யும் வகையில், இந்தியாவில் உள்ள 250 பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள நோயாளிகளுடன் 450க்கும் மேற்பட்ட இதயநோய் மருத்துவர்களால் லைஃப் நம்பப்படுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், இதய நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் இந்தத் திட்டம் அதன் செயல்திறனை நிரூபித்துள்ளது.
புதுமையான டிஜிட்டல் தீர்வுகள் மூலம் இதய நோயாளிகளின் பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்த லூபின் டிஜிட்டல் ஹெல்த் மற்றும் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி ஆகிய இரண்டின் நோக்கத்துடன் இணைந்து, உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பில் இந்த ஒத்துழைப்பு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.