34 வயது ஆணுக்கு அட்ரீனல் கட்டியை அகற்றி AINU சென்னை மருத்துவமனை சாதனை செய்துள்ளது
சென்னை, ஏப்ரல் 9, 2024: AHHக்கு சொந்தமான, இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனை நெட்வொர்க்கான, ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்ட் யூரோலஜி (AINU) சென்னை, தனது சென்னை மையத்தில் 34வயது ஆணுக்கு அட்ரீனல் கட்டியை அகற்றும் சிகிச்சையை வெற்றிகரமாக செய்ததில் பெருமை கொள்கிறது.
ஃபியோக்ரோமோசைட்டோமா (Pheochromocytoma) என்று அழைக்கப்படும், மிகவும் அரிதான அட்ரீனல் கட்டி (right adrenal tumour) அந்த ஆணுக்கு வலது புறத்தில் இருப்பதை கண்டுபிடித்து அவருக்கு லாப்ரோஸ்கோபிக் முறையில் வலது அட்ரீனலெக்டமி என்ற சிக்கலான அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளனர் .
இந்த நோயாளிக்கு கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு, வயிற்று வலி, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல சிக்கல்கள் இருந்தன. மிகவும் கவனமாக ஆராய்ந்ததில் அவருக்கு வலது அட்ரீனலில் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த கட்டிகள் கேடேகோலோமின்ஸ் (catecholamines) என்ற ஹார்மோன்களை மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும் , அதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம், வேகமான/அதிகமான இருதய துடிப்பு , படபடப்பு, வேர்த்தல் , தலை வலி மற்றும் அதிக இரத்த சர்க்கரை அளவு போன்றவை ஏற்படும் . இந்த சிக்கல்கள் எல்லாம் இருந்ததால் அவருக்கு ஒரு நுணுக்கமான அணுகுமுறையில் சிகிச்சை அளிப்பது அவசியமாக இருந்தது என்று AINU சென்னையின் நிர்வாக இயக்குனரும், அனுபவம் மிகுந்த சிறுநீரக பராமரிப்பு மருத்துவ ஆலோசகருமான டாக்டர். வெங்கட்சுப்ரமணியம் அவர்கள் கூறினார்.
இந்த வகை கட்டிகளுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சையின் போது பல சிக்கல்கள் இருக்கும், குறிப்பாக நோயாளியின் இரத்த அழுத்தத்தில் ஏற்படும் வேறுபாடுகளால் இரத்த அழுத்தம் சிகிச்சையின் போது அதிகரிப்பதும், கட்டியை அகற்றிய பிறகு மிகவும் குறைந்து போவதுமாக இருக்கும் . மேலும் இந்த நோயாளிக்கு கட்டி 10cm அளவில் இருந்ததால் மிகவும் சிக்கலாகி, அறுவை சிகிச்சையை மிகுந்த துல்லியம் மற்றும் கவனத்துடன் செய்ய வேண்டி இருந்தது. ஆனால் எங்களிடம் உள்ள அதிநவீன வசதி மற்றும் நிபுணர்களின் திறமையை கொண்டு இந்த சிக்கல்களை எல்லாம் கடந்து மிகவும் வெற்றிகரமாக நோயாளிக்கு சிகிச்சை அளித்து காப்பாற்ற முடிந்தது என்று AINU சென்னையின் நிர்வாக இயக்குனரும், தலைமை சிறுநீரக பராமரிப்பு மருத்துவருமான டாக்டர் அருண் குமார் அவர்கள் கூறினார்.
AINU சென்னையில் உள்ள உட்சுரப்பியல் (Endocrinology), இருதயம் (Cardiology) ,மயக்கவியல் (Anesthesia), பொதுநல மருத்துவம் (Physician) ஆகிய பல துறைகளை சார்ந்த நிபுணர்கள் அனைவரும் சேர்ந்து நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரையில் அவரது உடல்நலத்தை பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருந்தார்கள். முழுமையான நோயறியும் ஆராய்ச்சிகள் மற்றும் தேவையான அனுமதிகளை பெற்ற பிறகு மருத்துவர்கள் குழு ,மிகுந்த நிபுணத்துவம், கடுமையான நெறிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகளுடன் அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளி மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் தேர்ச்சி பெற்றார். 500 mg / dl அளவில் இருந்த இரத்த சர்க்கரை அளவானது 100mg/dl அளவுக்கு குறைந்து நீரிழிவு நோயிலிருந்து முழுவதுமாக குணமடைந்தார். அதனால் நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தத்திற்காக அவர் எடுத்து வந்த அனைத்து மருந்துகளும் நிறுத்தப்பட்டது. இவை அனைத்தும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் வெற்றியையும், அவருக்கு இருந்த சிக்கலான நிலையில் இருந்து முழுவதுமாக குணமடைந்தார் என்பதயும் குறிக்கிறது .
.
AINU சென்னை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்த லாப்ரோஸ்கோபிக் வலது அட்ரீனலெக்டமி அறுவை சிகிச்சையானது சிறுநீரக பராமரிப்பு அறுவை சிகிச்சையில் ஒரு புதிய சாதனை என்பதற்கும் மேலாக இந்த சிகிச்சையில் ஈடுப்பட்ட மருத்துவர்களின் முழுமையான அர்ப்பணிப்பு, நிபுணத்துவம் மற்றும் கூட்டு மனப்பான்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.
நுணுக்கமான திட்டமிடல், அதிநவீன வசதிகள் மற்றும் பலதரப்பட்ட துறைகளை சார்ந்த நிபுணர்களின் அணுகுமுறை ஆகியவற்றின் மூலம், AINU-Chennai நிறுவனம் இது போன்ற சிக்கலான மருத்துவ நிலைகளை கையாள்வதில் அவர்களுக்கு உள்ள திறமை மற்றும் சிறப்பறிவுத்திறனை வெளிப்படுத்தி உள்ளது.