- பொது

ஜைடஸ் வெல்னஸ் அறிமுகப்படுத்தும் ஆயுர்வேத பானம் காம்ப்ளான் இம்யூனோ குரோ!

ஜைடஸ் வெல்னஸ் அறிமுகப்படுத்தும் ஆயுர்வேத பானம் காம்ப்ளான் இம்யூனோ குரோ
~ முதல் கட்டத்தில் இந்த நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும் பானம் தமிழ்நாட்டில் கிடைக்கும் ~
~ நடிகை சினேகா தோன்றும் புதிய தொலைக்காட்சி விளம்பரம் கூறுகிறது ~

சென்னை: விஞ்ஞான அடிப்படை கொண்ட பெரும் FMCG நிறுவனமான ஜைடஸ் வெல்னஸ் அதன் முக்கிய பிரான்டான காம்ப்ளான் வரிசையில் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும் பானமான காம்ப்ளான் இம்யூனோ குரோ என்ற ஒரு தயாரிப்பை சேர்த்துள்ளது.

வலுவான நோயெதிர்ப்பு ஆற்றலை வழங்கும் அதே நேரத்தில் குழந்தைகளிடையே வளர்ச்சி மற்றும் நினைவாற்றலை ஆதரிப்பதற்காக விஞ்ஞானபூர்வமாக வடிவமைக்கப்பட்ட காம்ப்ளான் இம்யூனோ குரோ ஆம்லா, அஸ்வகந்தா, மற்றும் பிராமி போன்ற 20 ஆயுர்வேத மூலிகைகளின் பிரத்தியேக கலவையினாலானது. ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ஒரு பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் மற்ற நோய்களை தவிர உடல் மற்றும் மன வளர்ச்சியை தாமதப்படுத்தும் என்று கண்டறிந்துள்ளன. காம்ப்ளான் இம்யூனோ குரோ பொதுவான நோய்களுக்கு எதிரான குழந்தைகளின் நோயெதிர்ப்பு ஆற்றலை வலுவாக்க விசேஷ நன்மைகளை வழங்குகிறது.

ஊட்டசத்து பானங்கள் பிரிவில் தமிழ்நாடு வலுவான ரூ.940 கோடி என்ற வருவாயை கொண்டிருக்கும் நேரத்தில் பருவநிலை மாற்றங்களால் குழந்தைகளின் நோயெதிர்ப்பு ஆற்றல் அடிக்கடி பாதிக்கப்படுவதால் இயற்கையான முறையில் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும் தயாரிப்புகள் மீது நுகர்வோர் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்த சந்தை வாய்ப்பு மற்றும் திறமிகு தரமான நோயெதிர்ப்பு ஆற்றல் பூஸ்டரின் தேவை ஆகிய காரணங்களை கருத்தில் கொண்டு ஜைடஸ் வெல்னஸ் நல்லாரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துடன் தொடர்புடைய காம்ப்ளானின் கீழ் ஆயுர்வேத பிரிவில் கால் பதித்துள்ளது. இந்த சோதனை கட்டம் என்பது வரும் மாதங்களில் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள பல தயாரிப்புகளில் ஒன்றாகும்.

இந்த அறிமுகத்தை பற்றி கருத்து கூறுகையில் ஜைடஸ் வெல்னஸ்-இன் CEO தருண் அரோரா, “பெரும்பாலான நவீன கால பிரச்சினைகள் மற்றும் நோயெதிர்ப்பு ஆற்றல் பற்றிய அச்சங்களுக்கு இயற்கை மற்றும் மூலிகை தயாரிப்புகள் அதிகம் நாடப்படும் தீர்வாக பார்க்கப்படுவதால் நுகர்வோரின் எண்ணவோட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்கள் புதிய தயாரிப்பான காம்ப்ளான் இம்யூனோ குரோ விஞ்ஞான அடிப்படையிலமைந்த ஆயுர்வேத கண்டுபிடிப்பு மற்றும் இது வளரும் குழந்தைகளின் நோயெதிர்ப்பு ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்கிறது. இந்த சோதனை அறிமுகம் மூலம் எங்கள் சந்தை பங்கை அதிகரிக்கவும் வெள்ளை தூள் பிரிவில் எங்கள் காலடிதடத்தை மேம்படுத்தவும் இலக்கு கொண்டுள்ளோம். மேலும் இந்த பிரான்டுடன் சினேஹா இணைந்திருப்பது எங்கள் விழுமியங்களை உறுதிபடுத்த உதவும் ஏனெனில் அவர் தாய்மார்கள் மத்தியில் நம்பிக்கை, பராமரிப்பு மற்றும் நல்வாழ்வின் உருவமாக திகழ்கிறார்.,” என்று குறிப்பிடுகிறார்.

இந்த சோதனை அறிமுகத்துக்கு வலுவூட்டவும் பிரான்ட் விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் காம்ப்ளான் இம்யூனோ குரோ ஆனது தமிழ்நாட்டில் புகழ்பெற்ற தென்னிந்திய நடிகை சினேகா தோன்றும் ஒரு புதிய தொலைக்காட்சி விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரம் ஆனது குறிப்பாக பருவ நிலை மாற்றங்களின் போது குழந்தைகளிடையே நிலவும் பல நோய்களுக்கு வழிவகுக்கின்ற குறைந்தளவு நோயெதிர்ப்பு ஆற்றலை பற்றியது. தனது குழந்தையின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிபடுத்த விளம்பரத்தில் தோன்றும் தாய் தனது மகனை மழையில் நனைந்து விளையாட விடாமல் தடுக்கிறார். தனது குழந்தையின் நல்வாழ்வு மீதான ஒரு தாயின் பரிவையே முக்கிய கருத்தாக எடுத்துக்கொண்டு குழந்தைகளுக்கான நோயெதிர்ப்பு ஆற்றல் முனைப்புடன் கூடிய தீர்வான காம்ப்ளான் இம்யூனோ குரோவின் தேவையை பற்றி சினேகா விளக்குகிறார்.

நடிகையும் காம்ப்ளான் பிரான்ட் தூதுவருமான சினேகா, “நான் காம்ப்ளான் இம்யூனோ குரோ-ன் அறிமுகத்துடன் இணைந்திருப்பதை பற்றி மிகவும் உவகை கொள்கிறேன். காம்ப்ளான் எனது குழந்தை பருவம் முதலே எனது குடும்பத்தில் ஒரு நம்பிக்கையான பெயராக இருந்து வருகிறது. இப்போது இதை என் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த புது விளம்பரம் என்னை ஆழமான வகையில் பிரதிபலிக்கும் ஒரு சிறப்பான கதையாகும் மற்றும் மாநிலத்திலுள்ள அனைத்து தாய்மார்களின் அக்கறையையும் இது பிரதிபலிக்கும் என்று நம்புகிறேன்,” என்று கூறுகிறார்.

காம்ப்ளான் இம்யூனோ குரோ இப்போது INR 279 க்கு 400 கிராம் ரீஃபில் பேக்கிலும் INR 350 க்கு 500 கிராம் ஜார்களிலும் கிடைக்கிறது.

About expressuser

Read All Posts By expressuser