- பொது

காரசாரம் உணவகத்திற்காக அந்தோணிதாசன் பாடிய பாடல்!

காரசாரம் உணவகத்திற்காக அந்தோணிதாசன் பாடிய பாடல்!

மலேசியாவில் தமிழ் பாரம்பரிய உணவு வகைகளுக்கு மிகவும் பிரசித்திபெற்ற உணவகமாக
“காரசாரம்” உணவகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த உணவகம் தமிழர்களின் கலாச்சார உணவுகளை அதன் தன்மை மாறாமல் , அதன் மருத்துவகுணங்கள் குறையாமலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த உணவகத்தில் மண்சட்டிச்சோறு, என்கிற உணவு மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவிற்கு செல்லும் தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் பாடகர்கள் இந்த உணவகத்திற்கு வருகை தந்து அதன் உணவுகளை சுவைத்து பாராட்டியுள்ளனர்.
பாடகர் அந்தோணி தாசன் ஒரு பாடலையும் இந்த உணவகத்தை புகழ்ந்து பாடியுள்ளார்.

தமிழர்களின் கலாச்சார உணர்வுகளை மட்டுமல்ல நமது உணவுகளையும் பாதுகாக்கவேண்டும்.
தமிழ் பண்பாட்டு கலாச்சாரங்கள் மறக்கப்பட்டுவரும் இந்த காலகட்டத்தில்
உலகம் முழுவதும் தமிழர்களின்
உணவுகளை மீட்டுறுவாக்கம் செய்யும் நோக்கமாக நமது பண்பாட்டு உணவை நாங்கள் உலகம் முழுவதும் விரிவுபடுத்தவுள்ளோம் என்கிறார்கள் நிறுவனத்தார்.

இந்த உணவகம் இந்தியா, ஸ்ரீலங்கா, துபாய், சிங்கப்பூர் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் விரைவில் அறிமுகமாகும் என்கிறார்கள்.

About expressuser

Read All Posts By expressuser