
நிரந்தரமான பவர்: 2025 பிளாக்ஷிப் கில்லர் ரியல்மி GT 7 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம், ஆரம்ப விலை ₹28,999
● ரியல்மி GT 7 7000mAh பெரிய பேட்டரி, 120W அல்ட்ரா சார்ஜ், இந்தியாவின் முதல் மீடியாடெக் டைமென்சிட்டி 9400e சிப்செட் கொண்டது, 8GB+256GB, 12GB+256GB மற்றும் 12GB+512GB வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ஆரம்ப விலை ₹34,999. முதல் விற்பனை 2025 மே 30 அன்று மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது
● ஆஸ்டன் மார்டின் ஃபார்முலா ஒன்™ அணியுடன் இணைந்து உருவாக்கப்பட்ட ரியல்மி GT 7 ட்ரீம் எடிஷன், இல் பிரீமியம் ஆஸ்டன் மார்டின் ரேஸிங் கிரீன் ஃபினிஷ், ஏரோடைனமிக் ஃப்ளோ லைன்ஸ் டிசைன், சில்வர் விங்ஸ் முத்திரை ஆகியன இடம்பெற்றுள்ளன. இதில் 16GB+512GB வேரியண்ட் ₹49,999 விலையில் கிடைக்கிறது. முதல் விற்பனை 2025 ஜூன் 13 அன்று தொடங்கும்.
● ரியல்மி GT 7T மீடியாடெக் டைமென்சிட்டி 8400-மேக்ஸ் சிப்செட், 7000mAh பேட்டரி, ஐஸ்சென்ஸ் கிராஃபீன் பேக் கொண்டது. 8GB+256GB, 12GB+256GB மற்றும் 12GB+512GB வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ஆரம்ப விலை ₹28,999. முதல் விற்பனை 2025 மே 30 அன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும்.
● ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோ AI லைவ் டிரான்ஸ்லேட்டர் மற்றும் இதன் செக்மெண்ட்டில் முதல் விமான அலுமினியம் வடிவமைப்புடன் 48 மணி நேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது. குளோரி பீஜ், ஃபையரி ரெட், ரேஸிங் கிரீன் மற்றும் மெட்டாலிக் க்ரே நிறங்களில் கிடைக்கிறது. ஆரம்ப விலை ₹4,999. முதல் விற்பனை 2025 மே 30 அன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும்.
சென்னை மே 27, 2025: இந்திய இளைஞர்களில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்ட் ரியல்மி இன்று இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி GT 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது, பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற உலகளாவிய அறிமுக தினத்தன்றே இந்தியாவிலும் வெளியிட்டது. ஆஸ்டன் மார்டின் ஃபார்முலா ஒன்™ அணியுடன் இணைந்து கூட்டாக உருவாக்கப்பட்ட ரியல்மி GT ட்ரீம் எடிஷன் இந்த அறிவிப்பில் மையமாக இருந்தது,, AMF1 உடன் இணைந்து தயாரிக்கப்பட்ட முதல் கூட்டுச் பிராண்ட் ஸ்மார்ட்போனாக அதிகாரபூர்வமாக அறிமுகமாகிறது.
ஸ்மார்ட்ஃபோன் தொழிற்துறையில் முதல் முறையாக பல அம்சங்களும் பெர்ஃபார்மென்ஸ் அப்கிரேடுகளும் நிரம்பிய ரியல்மி GT 7 சீரிஸ், இந்தியப் பயனாளர்களுக்கு ஒரு புதுவிதமான ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்கும் ரியல்மியின் மிக துணிச்சலான முயற்சியாகும்.
அறிமுகத்தின் போது ரியல்மி பேச்சாளர் தெரிவித்ததாவது: “ரியல்மி GT 7 சீரிஸோடு, 2025 ஆம் ஆண்டில் ஃபிளாக்ஷிப் கில்லர் என்பதற்கு ஒரு புதுவித அர்த்தத்தைக் கொடுக்கிறோம். இது வெறும் சிறந்த தொழில்நுட்பங்களுக்கானதல்ல; பவர், நுண்ணறிவு மற்றும் கைவினை திறன் ஆகியவற்றை ஒரே ஸ்மார்ட்போனில் ஒருசேர இணைத்து இன்றைய இளைஞர்களின் விருப்பத்துக்கு பொருந்தும் வகையில் வழங்கி அவர்களுக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குவது தான் இதன் நோக்கம். ஆஸ்டன் மார்டின் ஃபார்முலா ஒன்™ அணியுடன் இணைந்து உருவாக்கப்பட்ட ட்ரீம் எடிஷனின் அறிமுகத்திலிருந்து, AI பிளானர் மற்றும் ஐஸ்சென்ஸ் கிராஃபீன் கூலிங் போன்ற புதுமைகள் வரை, எல்லா விபரங்களும் எல்லைகளைக் கடந்து சிறப்பாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. GT 7 சீரிஸ், நவீன தொழில்நுட்பத்தை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றும் எங்கள் பயணத்தில் ஒரு துணிச்சலான முன்னேற்றமாகும், இது உயர்தர அனுபவங்களை அணுகக்கூடியதாகவும் விரும்பத்தக்கவையாகவும் மாற்றும், மேலும் செயல்திறனை மட்டுமே முக்கியமாகக் கொண்டு திறமையுடன் செயல்படும்.”
“GT 7 இல் ரியல்மி உடனான நமது கூட்டுறவானது இந்திய மக்களுக்கு முன்னணி புதுமையை வழங்குவதற்கான எங்களின் உறுதிப்பாட்டோடு ஒத்திருக்கிறது. இந்தியாவில் மீடியாடெக் டைமென்சிட்டி 9400e இடம்பெற்ற முதல் ஸ்மார்ட்போனாக, இந்த வெளியீடு நமது இந்தியாவுக்கு முன்னுரிமை எனும் எங்கள் அணுகுமுறையில் நாங்கள் எட்டிய உண்மையான சாதனையாகும். 4nm ஆல் பிக் கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 9400e ஆனது கார்டெக்ஸ் X4 கோர் மற்றும் சக்திவாய்ந்த இம்மோர்டலிஸ் -G720 MC12 GPU யையும் பயன்படுத்தி, பயனர்களின் உண்மையான தேவைகளுக்கு ஏற்றார்போல புத்திசாலித்தனமான, சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்கின்ற மற்றும் பேட்டரியை திறம்பட உபயோகிக்கும் அனுபவங்களை வழங்குகிறது.” என்றார் அநுஜ் சிதர்த், இயக்குநர், மார்க்கெட்டிங் மற்றும் நிறுவன தொடர்புகள், மீடியாடெக்
ரியல்மி GT 7 : அல்டிமேட் 2025 ஃப்ளாக்ஷிப் கில்லர்
இந்த சீரிஸில் அதிக கவனத்தை ஈர்ப்பது ரியல்மி GT 7 இந்தியாவின் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள தலைமுறையின் தேவைகளை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு செயல்திறன் மிக்க ஸ்மார்ட்போனாகும். இது 7000mAh டைட்டன் பேட்டரி மற்றும் 120W அல்ட்ரா சார்ஜ் ஆகியவற்றை கொண்டுள்ளது—14 நிமிடங்களில் 50% வரை மற்றும் 40 நிமிடங்களில் 100% வரை சார்ஜ் செய்யலாம். வெப்பத்தை குறைக்க மற்றும் பேட்டரி ஆயுளை நீட்டிக்க ஸ்மார்ட் பைபாஸ் தொழிநுட்பம் கொண்டுள்ளது TNT Rheinland 5-ஸ்டார் பேட்டரி சான்றிதழை பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட்போன் GT 7 ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவின் முதல் மீடியாடெக் டைமென்சிட்டி 9400e சிப்செட் மூலம் செயல்படுகிறது, இது முன்னணி TSMC 4nm ப்ராசஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது, இது மின்னல் வேகம், பல்வகை பயன்பாடு மற்றும் கேமிங் லெவல் பெர்ஃபார்மென்ஸை வழங்குகிறது.
உலகில் வடிவமைப்பில் முதல் முறையாக, ஐஸ்சென்ஸ் கிராஃபீன் பேக் பேனல் ஆனது ஸ்மார்ட்போன் சூடாகாமல் வெப்பத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மேற்பரப்பைத் தொடும்போது குளிர்ச்சியாக இருக்கும் என்பதால், இது இந்தியாவின் காலநிலைக்கு பொருத்தமானது.
ரியல்மி GT 7 இல் புதியதாக அறிமுகம் செய்யப்படும் AI பிளானர் என்பது ஒரு முன்னணி ஸ்மார்ட் ஸ்கெட்யூலர் ஆகும், இதனை பயனர்கள் இரு முறை தட்டினால் போதும் தினசரி பணிகளை உருவாக்கி நிர்வகிக்க அனுமதிப்பதன் மூலம் இதுவரை ஒரு ஸ்மார்ட்போனில் காணப்படாத மிக புத்திசாலித்தனமான புரொடக்ட்டிவிட்டி கருவியாக உள்ளது
சோனி IMX 906 பவர்டு AI டிராவல் ஸ்நாப் கேமரா மூலம் ஃபோட்டோகிராஃபி அப்கிரேடு செய்யப்பட்டுள்ளது, இதில் உலகின் முதல் 4K அண்டர்வாட்டர் வீடியோ மோட், AI கிளார் ரிமூவல் மற்றும் அட்பான்ஸ்டு லைட்டனிங் ஸ்நாப் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது அற்புதமான சினிமாதர உள்ளடக்கத்திற்காக டால்பி விஷனுடன் 30fps இல் 8K மற்றும் 120fps இல் 4K வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது. இந்த போனில் 6000 nits பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78” அமோலெட் ப்ரோ-இஸ்போர்ட்ஸ் டிஸ்ப்ளே உள்ளது மற்றும் IP69 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு கொண்டது. அனைத்து சூழ்நிலையிலும் நீடித்து உழைக்கும் வகையிலும் தெள்ளத் தெளிவாக தெரியும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரியல்மி GT 7 ட்ரீம் எடிஷன்: ஒரு கலெக்டர்ஸ் ஃப்ளாக்ஷிப்
ஆஸ்டன் மார்டின் ஃபார்முலா ஒன்™ அணியுடன் இணைந்து உருவாக்கப்பட்ட ரியல்மி GT 7 ட்ரீம் எடிஷன், மோட்டார்ஸ்போர்ட் சிறப்புமிகு தொழில்நுட்பத்துடனும் முன்னணி ஸ்மார்ட்போன் வடிவமைப்புடனும் கூடிய ஒன்றாகும். ஆஸ்டன் மார்டின் ரேஸிங் கிரீன் என்ற தனித்துவமான நிறத்தில் வடிவமைக்கப்பட்ட இது, காற்றோட்டத்தை மேம்படுத்தும் ஃப்ளோ-லைன்ஸ் வடிவமைப்பு, செதுக்கிய சில்வர் விங்ஸ் சின்னம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதனுடன் சில்வர் விங் கேஸ் மற்றும் ரேஸ் காரிலிருந்து ஈர்க்கப்பட்ட SIM எஜெக்டர் பின் உள்ள தனிப்பட்ட கலேக்டர்ஸ் பாக்ஸ் வழங்கப்படுகிறது. செயல்திறன் மற்றும் சௌகரியத்தை விரும்புவோருக்காக உருவாக்கப்பட்ட இது ஒரு லிமிடெட் எடிஷன், கவனத்தை ஈர்க்கும் ஸ்மார்ட்போன் ஆகும்.
ரியல்மி GT 7T: அனைவருக்கும் ஃப்ளாக்ஷிப் அம்சங்கள்
ரியல்மி GT 7T ஸ்மார்ட்போனும் இன்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மீடியாடெக் டைமென்சிட்டி 8400-MAX சிப்செட்டால் இயங்குகிறது. 7000mAh பேட்டரி மற்றும் 120W அல்ட்ரா சார்ஜ், ஐஸ்சென்ஸ் கிராஃபீன் பேக் மற்றும் AI பிளானர் போன்ற அம்சங்களுடன், இந்திய பயனர்களுக்கு எளிதில் கிடைக்கும் விலையில் உயர்தர செயல்திறனைக் கொண்ட ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது.
AI, மாற்றியமைக்கப்பட்டது: ரியல்மி x கூகிள் ஜெமினி
GT 7 சீரிஸ், அதன் செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக கூகிளின் அதி நவீன மல்டிமோடல் AI மாடலான ஜெமினி AI அம்சத்தை வழங்குகிறது. ரியல்மி மற்றும் கூகிள் இணைந்து AI டிரான்ஸ்லேட்டர், AI எரேஸர் 2.0, மற்றும் AI டூல்ஸ் 2.0 போன்ற புத்திசாலி அம்சங்களை உருவாக்கி, உடனுக்குடன் மொழிபெயர்ப்பு, புத்திசாலிதனமான போட்டோ எடிட்டிங் மற்றும் கன்டென்ட் கிரியேஷன் போன்றவற்றை வழங்குவதால், இந்தியாவின் கலைஞர்கள், தொழில்வல்லுநர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிகாரமளித்து மேம்படுத்துகிறது.
ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோ: ஸ்மார்ட் ஆடியோவும் AI-யும் இணைந்தது
ஸ்மார்ட்போன்களுடன் ஒன்றாக அறிமுகமான ரியல்மி பட்ஸ் ஏர் 7 ப்ரோ, செக்மெண்ட்டில் முதல் முறையாக ஜெமினி AI அசிஸ்டன்ட் அம்சத்தைக் கொண்டுள்ளது, இது லைவ் வாய்ஸ் டிரான்ஸ்லேஷன், ஃபேஸ் டு ஃபேஸ் இன்டர்ப்ரெட்டர் மோட் மற்றும் AI சார்ந்த கேள்விகளை வழங்குகிறது. 53dB ANC, டூயல் DAC டிரைவர்ஸ், ஹை-ரெஸ் சான்றிதழ் மற்றும் 48 மணிநேரங்கள் வரை ப்ளேபேக் ஆகிய அம்சங்கள் இணைந்து, ள் புத்திசாலித்தன்மையுடன் கூடிய ஆழ்ந்து ரசிக்கும் ஒலியை வழங்குகின்றன. நான்கு கவர்ச்சியான நிறங்களில் கிடைக்கும், ஃபையரி ரெட் மற்றும் க்ளோரி பீஜ் ஃபாக்ஸ்-லெதர் பிளாஸ்டிகில் வருகின்றன, அதேவேளையில் ரேஸிங் கிரீன் மற்றும் மெட்டாலிக் க்ரே முழுவதும் அலுமினியிலிருந்து உருவாக்கப்படுகின்றன, ஆகவே இவை நல்ல ஸ்டைலாக இருப்பதோடு சிறந்த தரத்தையும் கொண்டுள்ளன.
* ரியல்மி GT7 சீரிஸ் மற்றும் ரியல்மி ஏர்7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சமீபத்திய மதிப்பாய்வு வழிகாட்டுதல்கள் மற்றும் புராடக்ட் படங்களுக்கு இங்கே பார்க்கவும்: இணைப்பு
ரியல்மி GT7 சீரிஸ் இன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
realme.com மற்றும் Amazon.in இல் கிடைக்கும் சலுகைகள்
புராடக்ட் வேரியண்ட் MOP வங்கிச் சலுகைகள் NEP விற்பனை தேதிகள்
ரியல்மி GT 7 ட்ரீம் எடிஷன்
16+512 ₹49,999 முதல் விற்பனையின்போது எக்ஸ்ட்ரா ஸ்கிரீன் டேமேஜ் புரொடக்ஷன் (1 ஆண்டு)
EMI சலுகை- 12 மாதங்கள் வரை வட்டியில்லா EMI ₹49,999 விற்பனை 2025 ஜூன் 13 ஆம் தேதி முதல் துவங்கும்
ரியல்மி GT 7
12+512 ₹46,999 ₹3000 வங்கிச் சலுகைகள் அல்லது ₹5000 எக்ஸ்சேஞ் சலுகைகள் (GT பயனர்களுக்கு கூடுதலாக ₹2000 கிடைக்கும்) + EMI 9 மாதங்கள் ₹41,999 முன்பதிவு 2025 மே 27 முதல் 30 வரை நடைபெறும் எக்ஸ்ட்ரா ஸ்கிரீன் டேமேஜ் புரொடக்ஷன் (1 ஆண்டு)
விற்பனை 2025 மே 30 அன்று மதியம் 12 மணிக்கு துவங்கும்
12+256 ₹42,999 ₹37,999
8+256 ₹39,999 ₹34,999
ரியல்மி GT 7T
12+512 ₹41,999 ₹3000 வங்கிச் சலுகைகள் அல்லது
₹6000 எக்ஸ்சேஞ் சலுகைகள் (GT பயனர்களுக்கு கூடுதலாக ₹2000 கிடைக்கும்) – EMI 9 மாதங்கள் ₹35,999
12+256 ₹37,999 ₹31,999
8+256 ₹34,999 ₹28,999
அனைத்து வங்கிகளும்
கிடைக்குமிடம் realme.com (GT7, GT7T) , Amazon.in (GT7, GT7T, GT7 Dream Edition)
மெயின்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் சலுகைகள்
புராடக்ட் வேரியண்ட் MOP வங்கிச் சலுகைகள் NEP விற்பனை தேதிகள்
ரியல்மி GT 7 ட்ரீம் எடிஷன்
16+512 ₹49,999 EMI சலுகை- 12 மாதங்கள் வரை வட்டியில்லா EMI ₹49,999 விற்பனை 2025 ஜூன் 13 ஆம் தேதி முதல் துவங்கும்
ரியல்மி GT 7
12+512 ₹46,999 ₹3000 வங்கிச் சலுகைகள் ₹43,999 விற்பனை 2025 மே 30 ஆம் தேதி முதல் துவங்கும்
12+256 ₹42,999 ₹39,999
8+256 ₹39,999 ₹36,999
ரியல்மி GT 7T
12+512 ₹41,999 ₹3000 வங்கிச் சலுகைகள் ₹38,999
12+256 ₹37,999 ₹34,999
8+256 ₹34,999 ₹31,999
பரிசு: ரியல்மி பட்ஸ் T110
HDFC, AXIS, KOTAK, OneCard, DBS, BOB, AU J&K, SBI, ICICI
உங்களுக்கு அருகிலுள்ள கடைகளிலும் கிடைக்கின்றன.
ரியல்மி ஏர் 7 ப்ரோ-இல் கிடைக்கும் சலுகைகள்
புராடக்ட் வேரியண்ட் MOP வங்கிச் சலுகைகள் NEP விற்பனை தேதிகள்
ரியல்மி ஏர்7 ப்ரோ
Glory Beige ₹5,499
₹500 ஆன்லைன் சலுகைகள் ₹4,999 விற்பனை 2025 மே 30 அன்று மதியம் 12 மணிக்கு துவங்கும்
ஃபையரி ரெட் ₹4,999
மெட்டாலிக் க்ரே NA ₹5,499
ரேஸிங் கிரீன் ₹5,499
கிடைக்குமிடம் Amazon, Flipkart, Myntra, realme.com, மற்றும் மெயின்லைன் ஸ்டோர்கள் அனைத்திலும்.



