
ரெமினா AI துணை இயங்குதளம் வெளியீடு
டிமென்ஷியா மற்றும் நினைவாற்றல் பராமரிப்புக்கான செயற்கை நுண்ணறிவுத் துணை இயங்குதளமான ரெமினாவின் தொடக்க விழா சென்னையில் நடைபெற உள்ளது.
டிமென்ஷியா மற்றும் நினைவாற்றல் குறைபாடு பராமரிப்பில் கண்ணியம், தனிப்பயனாக்கம் மற்றும் மனிதத் தொடர்பை மீண்டும் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட, ‘ரெமினா’ என்ற செயற்கை நுண்ணறிவுத் துணை இயங்குதளத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற உள்ளது. இந்த அறிமுக விழா, மே 10, 2026 அன்று, சென்னை, வேளச்சேரியில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில், காலை 8:30 மணி முதல் 10:00 மணி வரை, காலை உணவு மற்றும் கலந்துரையாடலுடன் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, காலை 10:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை இயங்குதளத்தின் அறிமுக நிகழ்வும் நடைபெறும்.
“அன்பு. அக்கறை. நினைவாற்றல்” என்ற உறுதிமொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ரெமினா, டிமென்ஷியாவுடன் வாழும் நபர்களின் கதைகள், நினைவுகள், அன்றாடப் பழக்கவழக்கங்கள், விருப்பங்கள் மற்றும் தனித்துவத்தைப் பராமரிப்பின் மையத்தில் சேமிப்பதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்க ஒரு புதிய வழியை அறிமுகப்படுத்துகிறது. ஒரு பராமரிப்புத் திட்டத் தளம் அல்லது ஒரு டிஜிட்டல் மருத்துவப் பதிவேடு என்பதைத் தாண்டி, டிமென்ஷியா மற்றும் நினைவாற்றல் குறைபாடுள்ள நபரைப் புரிந்து கொள்ள குடும்பங்கள், பராமரிப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் உதவி பெறும் வாழ்க்கைக் குழுக்களுக்கு உதவும் வகையில் ரெமினா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்பின் பொது வலைத்தளமும், “அன்பு. அக்கறை. நினைவு.” என்ற அதே உணர்வுப்பூர்வமான வணிக அடையாளத்தின் கீழ் ரெமினாவை நிலைநிறுத்துகிறது.
இந்தத் தொடக்க விழா நரம்பியல் மனநல மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள், பராமரிப்பு ஊழியர்கள், மறதிநோய் பராமரிப்பு வல்லுநர்கள், குடும்பப் பராமரிப்பாளர்கள் மற்றும் உதவி பெறும் வாழ்க்கைச் சமூகத்தினரை ஒன்றிணைக்கிறது. இதன் மூலமாக, அர்த்தமுள்ள, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் நினைவாற்றலை மையமாகக் கொண்ட பராமரிப்பு அனுபவங்களுக்குத் தொழில்நுட்பம் எவ்வாறு உதவியாக இருக்க முடியும் என்பது குறித்து விவாதம் முன்னெடுக்கப்படும்.
‘ஒவ்வொரு பராமரிப்புப் பயணமும் ஒரு கதையுடன் தொடங்குகிறது‘ என்பதுதான் ரெமினாவின் எளிமையான ஆனால் சக்திவாய்ந்த நம்பிக்கையாகும். ஏனெனில் நினைவுகள் மங்கினாலும், ஒருவரது தனித்த அடையாளம் ஒருபோதும் இழக்கப்படக்கூடாது. ஒவ்வொரு தனிநபருக்கும் தனித்துவமான தன்மையை அளிக்கும் தனிப்பட்ட நினைவுகள், வாழ்க்கை நிகழ்வுகள், உணர்ச்சித் தூண்டல்கள், விருப்பத்தேர்வுகள் மற்றும் அன்றாடப் பழக்கவழக்கங்களை அணுகுவதற்குப் பராமரிப்பாளர்களுக்கு உதவுவதன் மூலம், இந்த இயங்குதளம் மறதி நோய்ப் பராமரிப்பைப் பணி சார்ந்த ஆதரவிலிருந்து உறவு சார்ந்த பராமரிப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கருணையையும் அறிவையும் இணைக்கும் கருவிகளை, இந்தியக், குடும்பங்களும் பராமரிப்பு நிறுவனங்களும், அதிகளவில் தேடிவருகின்றன. இந்நிலையில், இந்த இயங்குதளத்தின் வெளியிடென்பது, உதவி வாழ்வு மற்றும் நினைவாற்றல் பராமரிப்பின் எதிர்காலத்தை நோக்கிய ஒரு முக்கியப் படியைக் குறிக்கிறது. ரெமினா, தனிப்பயனாக்கப்பட்ட பிணைப்பு, பராமரிப்பாளர்களின் சிறந்த தயார்நிலை, மேம்பட்ட குடும்பப் பங்கேற்பு மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட பராமரிப்பு வழங்கல் ஆகியவற்றை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயங்குதளத்தின் தொடக்க விழாவிற்கு முன்னதாகப் பேசிய ரெமினாவின் நிறுவனர்களான ஸ்ரீகரும் சுனிதாவும், “டிமென்ஷியா பராமரிப்பை மருந்து அட்டவணைகள் மற்றும் வழக்கமான சரிபார்ப்புப் பட்டியல்களுக்குள் சுருக்கிவிட முடியாது. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வாழ்க்கைக் கதை, உறவுகள், உணர்ச்சிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நினைவுகள் உள்ளன; அவையே அவர்கள் யார் என்பதை வரையறுக்கின்றன. அந்தக் கதைகளை மீண்டும் பராமரிப்பின் மையத்திற்குக் கொண்டு வருவதற்கான எங்கள் முயற்சியே ரெமினா. பராமரிப்பாளர்கள் நோயை மட்டும் பார்க்காமல், அந்த மனிதரையே பார்க்க உதவுவதே எங்கள் குறிக்கோள்” என்றனர்.
மேலும், “ரெமினா மூலம், தனிப்பட்ட வரலாற்றைப் புரிந்துகொண்டு, அர்த்தமுள்ள பிணைப்பைச் சாத்தியமாக்கி, நினைவாற்றல் மாறும்போதும் கண்ணியத்தைப் பாதுகாக்க உதவும் ஒரு செயற்கை நுண்ணறிவுத் துணையைக் கொண்டு, குடும்பங்கள், மருத்துவர்கள் மற்றும் உதவி பெறும் வாழ்க்கை முறைக் குழுக்களுக்கு நாங்கள் ஆதரவளிக்க விரும்புகிறோம். இந்தப் பயணத்தைத் தொடங்குவதற்கு சென்னை ஒரு அர்த்தமுள்ள இடமாகும். ஏனெனில் இந்த நகரம் ஒரு வலுவான மருத்துவ, பராமரிப்பு மற்றும் சமூகச் சூழலைக் கொண்டுள்ளது” என்றனர்.
இந்த இயங்குதள அறிமுக நிகழ்வானது, நினைவாற்றல் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்தலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், மறதி நோய்ப் பராமரிப்பு வல்லுநர்கள், உதவி-வாழ்க்கை நடத்துபவர்கள் மற்றும் பராமரிப்பாளர் சமூகத்தினரிடையே உரையாடுவதற்கான ஒரு தளமாகவும் அமையும். இந்த விவாதங்கள் தனிப்பயனாக்கம், பராமரிப்பாளர் ஆதரவு, குடும்பப் பங்கேற்பு, அறநெறி சார்ந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் மறதி நோய்ப் பராமரிப்பில் அடையாளத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் உலகளவில் மறதி நோய் மற்றும் நினைவாற்றல் பராமரிப்புத் தேவைகள் அதிகரித்து வரும் நேரத்தில் ரெமினா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடும்பங்கள், பெரும்பாலும் துண்டு துண்டான தெளிவற்ற தகவல்கள், உணர்ச்சி ரீதியாக சவாலான பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் அன்புக்குரியவர்களை அர்த்தமுள்ள வகையில் பிணைப்பை ஏற்படுத்துவதில் உள்ள சவால் ஆகியவற்றால் போராடுகின்றன. நினைவாற்றல், பராமரிப்புச் சூழல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உதவி ஆகியவற்றை ஒரே தளத்தில் இணைப்பதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைப்பதை ரெமினா நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வானது, தயாரிப்பு செயல்விளக்கங்கள், பராமரிப்பு நிபுணர்களுடனான உரையாடல்கள், மற்றும் நிஜ உலக மறதி நோய்ப் பராமரிப்புப் பயணங்களுக்கு ரெமினா எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பதைக் குடும்பத்தினர், மருத்துவர்கள், மற்றும் உதவி-வாழ்க்கைத் தலைவர்கள் ஆராய்வதற்கான வாய்ப்புகளுடன் நிறைவடையும்.
சென்னையில் நடக்கும் ரெமினாவின் அறிமுக நிகழ்வானது, நோயறிதலை மட்டுமல்லாமல், மறதியால் பாதிக்கப்பட்ட நபரையும் நினைவில் கொள்ளும் ஒரு புதிய வகை செயற்கை நுண்ணறிவு சார்ந்த, கதை வழி நினைவாற்றல் பராமரிப்புக்கு ஓர் அர்த்தமுள்ள தொடக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





