- பொது

அரசுக்கு கோரிக்கை விடும் பேரரசு!

பேரூந்து கட்டணங்கள் விமான டிக்கெட் அளவுக்கு இருக்கு….

அனைத்து நாட்களிலும் சீரான கட்டணத்தை அரசு, தனியார் பேருந்துகளுக்கு நிர்ணயிக்க வேண்டும்!

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் 3000, 4000 என்று வசூலித்தால் எப்படி?

பொங்கல் பண்டிகைக்கு சென்னை மற்றும் நகரங்களில் இருந்து கிராமத்திற்கு செல்லும் மக்கள் யாவரும் அடித்தள, நடுத்தர மக்களே ஆவார்கள். இவர்கள் குடும்பத்தோடு போய் வருவதற்கு பல ஆயிரங்கள் ஆகிவிடுகிறது. பேருந்து ஏழைகளுக்கானதே என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்!

அவரவர் இஷ்டத்திற்கு கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றால் அது எப்படி மக்களாட்சியாகும்? இதிலும் மாற்றம் வேண்டும்!

– இயக்குநர் பேரரசு

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan