- சினிமா

அன்பில் அவன் _ விமர்சனம்

‘அன்பில் அவன்’ _ விமர்சனம்

அசோக் செல்வனின் துணிச்சலான மூவ் ஒர்க் அவுட் ஆயிருக்கா  இல்லையான்னு பார்ப்போம்!

இயக்குநர் ஆர். கார்த்திகேயன் கூட்டணியில், அசோக் செல்வன் தயாரித்து நடித்துள்ள படம் ‘அன்பில் அவன்’.

இவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் களம் இறங்கியிருக்காரு. வழக்கமான ரூட்டை விட்டுட்டு, வித்தியாசமான கதைகளை மட்டும் பார்த்துத் தூக்கும் அசோக் செல்வன், இந்த முறையும் ஒரு கியூட்டான ஒன்லைன் கதை மூலம் வந்திருக்காரு.

மனைவியின் சின்னக் கனவையும் நிறைவேற்ற ஒரு சராசரி கணவன் என்னவெல்லாம் பண்ணுவான்? இதான் கதை!

படத்துக்காக மலையில் ஏறி 70 அடி உயரத்தில் இருந்து குதிப்பது போன்ற பிரம்மாண்டமான ஜம்ப் சீன் எல்லாம் ஷூட் பண்ணி செமையான சீன் எல்லாம் பண்ணியிருக்காரு அசொக் செல்வன்.

  அந்தளவுக்கு ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்கு இந்த மூவி, ஒர்த் ஆ இல்லையாங்கிறதை ஒரு ரவுண்டு வந்து பார்த்துரலாம்!

கதைக்ளம் என்ன?
பணக்கார குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நாயகி இயல் (ப்ரீத்தி முகுந்தன்), காலேஜில் கெத்தாக கலர் முடி அடித்துத் திரியும் ரக்ட் பையன் சூர்யாவை (அசோக் செல்வன்) லவ் பண்றாரு.

வீட்ல எதிர்த்தாலும் மீறி கல்யாணம் பண்ணிக்கிறாங்க. இயலோட ஒரே கனவு ஒரு ஹில் ஸ்டேஷனில் ஹோம் ஸ்டே ஆரம்பிக்கிறதுதான். ஆனால், ரியாலிடியில் இறங்கும்போதுதான் அடி தாங்க முடியல; ஆபீஸில் டோஸ் வாங்கி, வாழ்க்கையை நடத்தவே திணறுறாங்க.

காதலிக்கும்போது கொடுத்த வாக்கைக் காப்பாற்ற ஒரு வழியாக ஹில் ஸ்டேஷனில் மதுக்கூர் ராணி பத்மினியின் பழைய பங்களாவை விலைக்கு வாங்குறார் ஹீரோ.

அங்கே உள்ளூர் எம்.எல்.ஏ. ராஜநாயகம் இந்த வீட்டைப் பறிக்கப் பார்க்க, தன் மனைவியின் லட்சியத்தைக் காப்பாற்ற சூர்யா என்ன மாதிரியான ஆக்‌ஷன்களில் இறங்குறார் என்பதுதான் மீதிக் கதை.

படத்தில் என்ன ஸ்பெஷல்?
காலேஜ் கவலைகளில் இருந்து கல்யாணக் கவலைகளுக்குத் தாவி, ஆபீஸில் படும் பாட்டையும் கோபத்தையும் அடக்கி வாசிக்கும் சூர்யாவாக அசோக் செல்வன் அப்படியே பொருந்திப் போயிருக்காரு.

அவருக்குச் சளைக்காமல், பணக்காரப் பின்னணியை விட்டுவிட்டு காதலுக்காக வந்து கணவருடன் போராடும் இடங்களிலும், “என்ன உன்னை அவ்வளவு பிடிக்குமா?” என்று கேட்கும்போதும் ப்ரீத்தி முகுந்தன் செமயா ஸ்கோர் பண்றாரு.

புது இடத்துக்குப் போய் பிசினஸ் தொடங்கும்போது போலீஸ், அரசியல்வாதி தரப்பிலிருந்து வரும் டார்ச்சர்களை சமாளிக்க முடியாமல் திணறி, கடைசியில் திருப்பி அடிக்கும் வரை படம் நகர்கிறது.

முதல் பாதியில் சுவாரஸ்யமான திருப்பங்கள் குறைவுதான் என்றாலும்,  இரண்டாம் பாதியில் மனைவியைக் காப்பாற்ற எதிரிகளைத் துவம்சம் பண்றார் ஹீரோ.

பிளஸ் பாயிண்ட்ஸ்:
அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் கெமிஸ்ட்ரி ஸ்கிரீனில் செமயா வொர்க்கவுட் ஆகியிருக்கு. ரொமான்ஸ் காட்சிகளில் லிப் லாக் முத்திரையும் ஹிட்டடிக்குது.

கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும், கௌதம் ராஜேந்திரனின் கேமராவும் படத்தைத் தாங்கிப் பிடிக்குது.

70 அடி உயரத்தில் இருந்து நாயகன் குதித்த ரிஸ்க் சீன் முதல் பாதியில் அட்டகாசமான வைப் தருது.

பீட்டர் ஹெயின் மாஸ்டரின் சண்டைக் காட்சிகள் கிளைமாக்ஸில் மிரட்டல். இன்ஸ்பெக்டர் தவசியை ப்ரீத்தி அடிக்கும் காட்சி செம மாஸ்!

மைனஸ் பாயிண்ட்ஸ்:
இரண்டாம் பாதி முழுவதிலும் நூற்றுக்கணக்கான ரவுடிகளை ஹீரோ ஒத்த ஆளாக அடித்துத் தள்ளுவதும், சரமாரியாக கத்திக் குத்து வாங்கியும் மனைவியை மடியில் வைத்துக் கொண்டிருப்பதும் லாஜிக்குக்குப் பஞ்சம்.

அனைத்து தரப்பினரையும் கவரும் அட்டகாசமான பொழுதுபோக்குப் படம்  ‘அன்பில் அவன்’.

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan