- சினிமா

Don’t Trouble The Trouble _ விமர்சனம்

Don’t Trouble The Trouble _ விமர்சனம்

S.S. ராஜமெளலி வழங்க, ஃபகத் ஃபாசில் நடிப்பில்,   கார்த்திகேயா தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ‘டோண்ட் டிரபிள் த டிரபிள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்ப்போம்.

சூரி கதாபாத்திரத்தில் வரும் ஃபகத் ஃபாசில் ஆம்புலன்ஸ் ஓட்டிப் பிழைப்பு நடத்தினாலும்,  பந்தயம் மூலம் பணம் சம்பாதிப்பவர்.

கடத்தல்காரர் அஸ்லாமின் பிடியில் மாட்டிக் கொண்டு பெரும் தொகையைத் திருப்பித் தர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்.

அந்த இக்கட்டான சூழலில் அவருக்குக் கிடைக்கும் விநோத லாக்கெட்டிலிருந்து தோன்றும் திவ்யா என்ற சிறுமி அவரது கண்ணுக்கு மட்டுமே புலப்படுகிறாள்.

மந்திர தந்திரங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அந்தச் சிறுமி, தான் செய்த மாயாஜலத்தால்தான் தனது பெற்றோர் காணாமல் போனதாக நினைத்துக்கொண்டு, அவர்களை மீட்டுத் தரச் சொல்லி  கேட்க, அவளது மாய சக்தியின் உதவியைக் கொண்டு தனது நிதி நெருக்கடியைச் சமாளிக்க முயல்கிறார் சூரி.

இதுவே இப்படத்தின் ஒட்டுமொத்தக் கதைக்களம்.

கோவில் பரசாத்த்தில் உள்ள முந்திரிப் பருப்புகளைக்கூட அடாவடியாக எடுத்துக்கொள்வதும், ஆம்புலன்சுக்கு வழி விடாதவர்களை குச்சியால் அடித்து வழி ஏற்படுத்திக் கொண்டு முன்னேறுவதுமான காட்சி, பகத் பாசிலின்  வேடத்துக்கு அட்டகாசமான அறிமுகம்.

 இடைவேளைக் காட்சிகள் பார்வையாளர்களுக்கு முன்பே யூகிக்கக் கூடியதாக இருப்பது பலவீனமாகும்.

இரண்டாம் பாதியின் நீளம் சோர்வைத் தருவதோடு, கிளைமாக்ஸ் காட்சிகளில் வெளிப்படும் உணர்வுகள் மட்டுமே சற்று ஆறுதல் அளிக்கின்றன.

சிறுமியின் ஈர்க்கக்கூடிய நடிப்பு, பிரம்மாண்டமான விஷுவல்ஸ் மற்றும் இறுதிப் பகுதியின்  உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் ஆகியவை படத்திற்குப் பலம் சேர்க்கின்றன.

ஃபகத் ஃபாசில் வழக்கம்போல் தன் இயல்பான நடிப்பில் முத்திரை  பதித்தாலும், தளர்வான திரைக்கதை காரணமாக அது முழுமையாக பெறவில்லை.

 படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் சி.ஜி. காட்சிகள்தான். ஒவ்வோரு சின்ன விஷயமும் அவ்வளவு நேர்த்தியாக ஒளிர்கின்றன.

குழந்தைகளையும் அழைத்துச் சென்று குடும்பத்தில் அள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக ரசித்து மகிழத்தக்க பொழுதுபோக்குப் படம்.

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan