- சினிமா செய்திகள்

தனுஷ் நடித்த ‘ஓம்’ திரைப்படத்தை ஐரோப்பியாவில் விநியோகம் செய்யும் ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ்!

ஐரோப்பிய நாடுகளில் திரைப்பட விநியோகத்தில் தடம் பதிக்கும் ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் (Future Run Up Films)

இந்தியத் திரைப்படங்களை உலக அளவில் கொண்டு செல்லும் நோக்கில், ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் (Future Run Up Films) நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் தனது திரைப்பட விநியோகப் பணிகளை விரிவுபடுத்துகிறது. இதற்காக United Films Europa நிறுவனத்துடன் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.

இந்தக் கூட்டணியின் மூலம் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களை ஐரோப்பிய ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, போலந்து நாட்டில் இருந்து இந்த விநியோகப் பயணம் தொடங்குகிறது.

இதன் தொடக்கமாக, தனுஷ் மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய பொழுதுபோக்குத் திரைப்படமான ‘ஓம்’ (OM) ஐரோப்பியத் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

இந்தியத் திரைப்படங்களுக்குப் புதிய சர்வதேசச் சந்தைகளை உருவாக்கி, ஐரோப்பிய ரசிகர்களிடம் இந்திய சினிமாவைக் கொண்டு சேர்ப்பதே இந்தக் கூட்டணியின் முக்கிய நோக்கமாகும்.

இந்திய சினிமாவை ஐரோப்பியத் திரைகளில் விரிவாகக் கொண்டு செல்லும் இந்தப் புதிய முயற்சி, Futurerunup Films நிறுவனத்தின் சர்வதேச விநியோகப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan