- சினிமா செய்திகள்

GenZ தலைமுறைக்கு அவர்களது பாணியிலேயே காதலை சொல்லும் படம் ‘லவ் மேட்டர்’!

காதலிக்கும் போது வாழ்க்கை புரியாது, வாழ்க்கை புரியும் போது காதல் இருக்காது…
‘லவ் மேட்டர்’!

ஹை கிரியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் செல்வ அன்பரசன் தயாரித்து, மகாதாரா பகவத் இயக்கிவரும் புதிய திரைப்படம் ‘லவ் மேட்டர்’.

காதலிக்கும் போது வாழ்க்கை புரியாது, வாழ்க்கை புரியும் போது காதல் இருக்காது. இந்த இரண்டையும் தெளிவாக புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பதை GenZ தலைமுறைக்கு GenZ பாணியில் சொல்லி இருப்பதே இந்த லவ் மேட்டர் திரைப்படத்தின் கதைக்கரு.

இத்திரைப்படத்தில் ‘லுங்கிபாய்ஸ்’ ராஜ்பிரியன் “கெஞ்சி கெஞ்சி கெஞ்சி தம்பி நல்லா கெஞ்சி, கஞ்சி கஞ்சி கஞ்சி லவ் பண்ணா நீ கஞ்சி” என்ற பாடலை பாடியுள்ளார். மேலும் ஒரு பாடல் பாட உள்ளார்.

இப்படத்தின் ஆரம்பம் ஆரம்பம் என்ற முதல் பாடலை, எஸ்.என்.சுரேந்தர் பாடி உள்ளார்.

கதை நாயகனாக இயன் அறிமுகமாகிறார். கதை நாயகியாக அபிநயா அறிமுகமாகிறார். மேலும் இயக்குனர் ரஞ்சித் ராகவா, ராயல் பிரபாகர், அச்சாரம் சேகர், ஶ்ரீவி, திலீப்
RJ பொற்கொடி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எம்ஜிஆர் அரசு திரைப்பட கல்லூரி மாணவரான மகாதாரா பகவத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இன்ஸ்ட்டாவில் நாய் வைத்து வீடியோ போடும் அன்பு சார் என்கிற செல்வ அன்பரசன் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இவரும் திரைப்படக் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் பணியாற்றுகிற இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் மற்றும் முக்கிய தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்கள். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

_GovindarajPro

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan