
பிளாக் கோல்டு: விமர்சனம்
மனிதனின் தலைமுடி பின்னணியில் நடக்கும் கோடிக்கணக்கான ரூபாய் சர்வதேச வியாபாரத்தை மிரட்டலான கிரைம் திரில்லராகக் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் தீரன் அருண்குமார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் நகர்கிறது.
லாரி டிரைவராக வரும் நாயகன் வெற்றியின் அப்பா கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தலைமுடியுடன் ஓட்டிச் செல்லும் லாரியுன் பயணம் திசைமாறுவதிலிருந்து கதை சூடு பிடிக்கிறது.
தந்தைமீது விழும் பழி, அதைக் காப்பாற்ற களமிறங்கும் வெற்றியின் அதிரடித் திருப்பங்கள் என திரையை அதிரவைத்துள்ளார் வெற்றி. காதல் காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார்.
வில்லன் கூட்டணியில் அருள் டி சங்கர் மிரட்டுகிறார். இயக்குநர் ஏ. வெங்கடேஷின் கம்பீரம், கராத்தே வெங்கடேஷின் பார்வை தரும் பயம் என வில்லத்தனம் உச்சம் தொட்டுள்ளது.
தயாரிப்பாளர் மூர்த்தியின் துடிப்பான போலீஸ் நடிப்பு, அபிராமி வெங்கடாசலத்தின் கெத்து, அப்பா கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டனின் பாசமான நடிப்பு எனப் படத்திற்கு பலரும் தங்கள் நடிப்பால் பலம் சேர்க்கின்றனர்.
நாயகி வேடத்தில் அறிமுகமாகி இருக்கும் பிரியலயா, நாயகனின் அம்மா வேடத்தில் வரும் துளசி ஆகியோரும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகத் தந்துள்ளனர்.
கவாஸ்கர் அவினாஷின் அதிரடிப் பின்னணி இசையும் காதுக்குத் இன்மையைத் தரும் பாடல்களும் படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன. சந்தோஷ்குமார் வீராசாமியின் ஒளிப்பதிவு சர்வதேசத் தரத்தை அள்ளித் தருகிறது.
போதைப் பொருள் கடத்தல் போலத் தொடங்கி, நாம் தூக்கி எறியும் தலைமுடியை வைத்து நடக்கும் மாபெரும் வணிகத்தைப் பேசும் விதம் முற்றிலும் புதிய அனுபவத்தைத் தருகிறது.
எளிய பட்ஜெட்டிலும் பிரம்மாண்டமான தில்லர் அனுபவத்தை அழகாகத் தந்துள்ளார் இயக்குநர்.




