- பொது

மலை வாழ் மக்களுடன் தீபாவளியை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

ஆதரவற்றோர் மற்றும் மலை வாழ் மக்களுடன் தீபாவளியை கொண்டாடிய திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன்

தீபாவளியை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் , சுற்றுலாதலமான ஏலகிரி மலையில் பொதுமக்கள் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர் , மக்கள் கூட்டம் அதிகம் உள்ளதால் , திருப்பத்தூர் மாவட்ட
காவல் துறை கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது தலைமையிலான காவல்துறையினர் கண்காணித்து வந்தனர் . இந்நிலையில் இன்று தீபாவளி மாலை நான்கு மணியளவில் ஏலகிரி மலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பட்டாசு மற்றும் இனிப்புகளை தந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். , மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் அவர்களின் திடீர் வருகையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அங்குள்ளவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் தீபாவளியினை பாதுகாப்பாக கொண்டாடும்படி அறிவுறுத்தினார். அதன்பின் ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடினார்

About expressuser

Read All Posts By expressuser